புதுடில்லி: இன்று மாலை நிருபர்களிடம் பேசிய காங்., துணை தலைவர் ராகுல்: ஊழல் ஒழிப்பு தொடர்பான லோக்பால் மசோதா நிறைவேற்ற காங்கிரஸ் மற்ற கட்சிகளை விட முழு மனதுடன் உள்ளது. இது வலுவான சட்டமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் . பிற கட்சிகள் ஆதரவு கொடுத்தால் நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும். கருத்தொற்றுமை ஏற்படும் போது இது வலுவானதாக அமையும். 99 சத பணிகள் முடிந்து விட்டது இன்னும் காங்., இந்த மசோதா கொண்டு வர போராட வேண்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி வற்புறுத்தியதால் நாங்கள் இந்த முடிவு எடுக்கவில்லை. இந்த மசோதா நிறைவேற்ற ஏற்கனவே தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.