புதுடில்லி: லோக்பால் மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற பா.ஜ., தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அரசு முனையுமானால் அதற்கு பா.ஜ., உதவி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.