சொர்க்கம் கிடைக்கும் என ஆசை வார்த்தை| Dinamalar

சொர்க்கம் கிடைக்கும் என ஆசை வார்த்தை

Added : டிச 16, 2013 | கருத்துகள் (13)
Advertisement
சொர்க்கம் கிடைக்கும் என ஆசை வார்த்தை

2007 நவம்பர் மாதம் கசால் மற்றும் முசாபர் லால்கான் இருவரும் வேறு நல்ல வேலை தேடி ராவல்பிண்டி சென்றனர். பங்காஷ் காலனி என்ற இடத்தில் வாடகை வீட்டில் குடியேறினர். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் லஷ்கர்-இ-தோய்பா உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று தங்களை ஜமாத்-உல்-தாவா என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டு ஈத்உஸ்-ஸோஹா தினத்தில் பலியிடப்பட்ட ஆட்டுத் தோல்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தத் தோல்களை நன்கொடையாக வழங்குமாறு இவர்கள் கேட்டனர். இவர்கள் மீது கசாப் மற்றும் அவனது நண்பனும் மதிப்பும் மரியாதையும் காட்டியது மட்டுமில்லாமல், காஷ்மீர் மக்கள் விடுதலைக்காகப் போராடும் இவர்களுடன் இணைந்து தாங்களும் தங்கள் பங்கைத் தரவேண்டுமென்று நினைத்தார்கள். சராய் ஆலம்கீர் என்ற இடத்தில் இவர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது ஜமாத்-உல்-தாவா இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். 2002-ல் லஷ்கர்-இ-தோய்பா தடை செய்யப்பட்டு விட்டதாகவும், பின்னர் ஜமாத்-உல்-தாவா என்ற பெயரில் இவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்துள்ளதாகவும் அறிந்தனர். தாங்கள் ஜிகாத் பயிற்சிபெற வேண்டுமென்ற எண்ணம் இவர்கள் மனதில் உதித்தது.


ஜிகாத் பயிற்சியில் சேர்ப்பு:

2007 டிசம்பரில் ஒரு மவுல்வி மூலம் லஷ்கர் முகவரியைப் பெற்றுக்கொண்டு ராவல் பிண்டியில், ராஜா பஜார் என்ற இடத்தில் உள்ள அலுவலகத்தை அடைந்தார்கள். அங்கிருந்த இருவர் அவர்களது ஜிகாத்பயிற்சி உடமைகளுடன் மறுநாள் வருமாறு கூற, இவர்களும் வந்து சேர்ந்தனர். அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவன் தௌரா-இ-ஸுஃபா முத்திரையுடன் கூடிய பேப்பரில் குறிப்பு எழுதிக்கொடுத்து, அவர்களை முரித்கே என்ற இடத்துக்குச் செல்லுமாறும் அதற்கான வழி விபரங்களையும் தெரிவித்தான். ஆறு மணி நேரப் பயணத்துக்குப் பின் முரித்கே அடைந்தபின்னர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று, இவர்கள் பயிற்சிமுகாமை அடைந்தனர். அவர்கள் கொண்டு வந்த அறிமுகக் கடிதத்தைக் காட்டினார்கள். சில சோதனைகளுக்குப் பின்னர் ஃபஹாதுல்லா (இந்த வழக்கில் 8வது குற்றவாளி) என்பவனிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இவர்களது பெயர் முகவரிகளைக் குறித்துக் கொண்ட பின்னர் இவர்கள் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்தப் பயிற்சி தௌரா-இ-சுஃபா பயிற்சி 21 நாட்கள் நடைபெற்றது. கசாப் அவனது நண்பனைத்தவிர 30 இளைஞர்கள் அங்கிருந்தனர். இந்த 21 நாட்களில் இஸ்லாமியத்தின் ஒரு பிரிவான சுன்னி இனத்திலிருந்து இவர்கள் இருவரும் அஹல்-இ-வராடீஸ் பிரிவுக்கு (மத) மாற்றம் செய்யப்பட்டனர். நபிகள் நாயகத்தின் வாக்கியங்கள், அவர் பின்பற்றிய வாழ்க்கை நெறிகள் இவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒரு உஸ்தாத் இவர்களுக்கு உடற்பயிற்சி அளித்தார். ஜீஹாத் பற்றிய பிரசங்கங்கள், பாடங்கள் நடத்தப்பட்டன. ஃபகதுல்லா மற்றும் முப்டி சயீத் (இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் 13வது குற்றவாளி) ஆகியோர் இந்த வகுப்புகளை நடத்தினார்கள். டிசம்பர் 2007 முதல் ஜனவரி 2008 வரை இப்பயிற்சிகள் நடந்தன. உஸ்தாத் அபு கான்பா (குற்றவாளி 5) இவர்களை லஷ்கர்-இ-தோய்பா தலைவன் ஹபீஸ் செய்யது (தேடப்பட்டு வரும் குற்றிவாளி1) என்பவனிடம் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் ஆபரேஷனல் கமாண்டர் ஜாகி-யுர்=ரஹ்மான் லக்வீ (தேடப்பட்டு வரும் குற்றவாளி 4), யூசுப் என்ற முசாமில் (தேடப்பட்டு வரும் குற்றவாளி 6), பயிற்சி பொறுப்பு அபு உமர் சையீது (தேடப்பட்டு வரும் குற்றவாளி 18) மற்றும் அபுஹம்சா (தேடப்பட்டு வரம் குற்றவாளி 3) ஆகியோருக்கும் கசாப் மற்றும் அவனது நண்பன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். லஷ்கர்-இ-தோய்பா பயிற்சிகளை ஏற்பாடு செய்தவர் அபு உமர் சையீது.படையெடுக்க திட்டம்:

காஷ்மீர் விடுதலைக்காக முஜாஹிதீன்கள் போர்க்கொடி உயர்த்த வேண்டிய காலம் வந்துவிட்டது. 15 ஆண்டுகளாகப் போராடியும் இந்துஸ்தான் அரசு சுதந்திரம் வழங்கவில்லை. எனவே, படையெடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது, அவசியமும் ஆகிவிட்டது, காஷ்மீரை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும். அதற்கு நீங்கள் தயாரா என்று தலைவன் ஹபீஸ் சையது, இவர்களுக்கு வீரப்பிரசங்கம் செய்து தூண்டினான். எல்லோரும் "தயார்' என்று பதிலளித்தனர். இந்தியாவின் பிரதான நகரங்களைத் தாங்க வேண்டும்., இந்தியாவுக்குள் இருந்துகொண்டே தாக்க வேண்டும், அப்போதுதான் இந்தியா உள்ளுக்குள்ளேயே பலவீனப்படும் என்று அபு அல்காமா அவர்களுக்கு உபதேசித்தான். இந்தப் போரில் இறந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்று இவன் பயிற்சியாளர்களுக்கு வெறியூட்டினான். கசாப் மற்றும் அவனது தோழர்கள் உற்சாகமாகத் தாங்கள் தயார் என்று சம்மதம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
17-டிச-201323:51:43 IST Report Abuse
திருமகள்கேள்வன் பாகிஸ்தான் தீவிரவாதிகளே.... பாகிஸ்தான் அரசு தவறான வரலாற்றை உங்களுக்கு கற்றுத்தந்து வருகிறது... இந்திய எதிர்ப்பு என்ற நெருப்பில் தங்களின் பல ஊழல் சுள்ளிகளை அதில் இட்டு மறைத்து உங்களை திசை திருப்பி ஏமாற்றுகிறது...ஒன்று பாகிஸ்தானில் தொழில் கல்வியும் .. பொருளாதார சுதந்திரத்தையும் உருவாக்க பாடுபடுங்கள் அல்லது பாலஸ்தீன சுதந்திரத்திற்கு போய் முதலில் பாடுபடுங்க....அதை விட்டுட்டு இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க பார்க்காதீர்கள்... காஷ்மீரம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம், சீக்கிய, கிருத்துவ அனைத்து இந்திய மக்களுக்கும் சொந்தமான நிலம்... பூலோக சொர்கத்தை சுடுகாடு ஆக்காமல்... உலக வரைப்படத்தில் வெறும் பெயராக உள்ள பாலஸ்தீனிற்கு உரிய வடிவையும் உயிரையும் தரப்பாருங்கள்... இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு... ஏனெனில் இந்துக்கள் மதசார்பற்றவர்கள்... அனைவரையும் சமமாக நேசிப்பவர்கள்... ஆயுதத்தை முதலில் கீழே போட்டுவிட்டு வா... உயர்ந்த வாழ்கை வாழ வழி வகை செய்து தருகிறோம்...
Rate this:
Share this comment
Cancel
karthick - muscat,ஓமன்
17-டிச-201316:34:34 IST Report Abuse
karthick கசாப் தூக்கில் போடப் பட்டது 100% சரிதான். தீவிர வாத எண்ணத்துடன் எந்த நாயும் நம் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X