பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை மண்டல 3 கோவில் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு இன்று பயணம்

Added : டிச 18, 2013
Advertisement

தஞ்சாவூர்: நடப்பாண்டு, அரசு சார்பில் யானைகளுக்கு புத்துணர்வு ஊட்ட நடத்தப்படும் நலவாழ்வு முகாமுக்கு, தஞ்சை மண்டல கோவில்களில் இருந்து, 3 யானைகள் இன்று (19ம் தேதி) வாகனங்களில் பயணமாகின்றன. இதற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். முதல்வர் ஜெ., ஆட்சியில், ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையில், நலவாழ்வு முகாம் நடத்துவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு நலவாழ்வு முகாம் வரும், 19ம் தேதி, பவானி ஆற்றுப்படுகையில் துவங்குகிறது. இதற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இம்முகாமுக்கு ஆங்காங்கே உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகள் வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றன. தஞ்சை மண்டல ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நாகை திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவில், மன்னார்குடி ராஜகோபால் ஸ்வாமி கோவில், திருவையாறு பஞ்சநதீஸ்வரர் ஸ்வாமி கோவில் ஆகிய, 3 கோவில்களில், தலா ஒரு பெண் யானை உள்ளது. இந்த யானைகளும் பவானி முகாமுக்கு இன்று ( 18ம் தேதி) அந்தந்த கோவில்களில் இருந்து வாகனங்களில் ஏற்றி வரப்பட்டு, தஞ்சைக்கு காலை, 6 மணிக்கு வந்தடைகின்றன. தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு, தஞ்சை தமிழ்ப்பல்கலை அருகே இருந்து வாகனங்கள் மூலம், 3 யானைகளும் வாகனங்களில் புறப்படுகின்றன. இதற்காக, யானை பாகன்கள், உதவி பாகன்கள், 3 மருத்துவ நிபுணர்கள் தலைமையில் தனித்தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், நாகை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரத்தினவேல் தலைமையில் செல்கின்றனர். இதற்கிடையில், யானைகள் பயணம் துவக்கத்துக்கு உரிய இடத்தை தஞ்சை மண்டல இணை கமிஷனர் குமரதுரை, உதவி கமிஷனர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X