பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'

Added : டிச 18, 2013 | கருத்துகள் (32)
Advertisement
கல்வி வளர்ச்சியில் தென் மாநிலங்கள் "சூப்பர்'

கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தர வரிசையில், லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

மத்திய அரசின் கீழ் டில்லியில் இயங்கும், திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில் மாவட்டவாரியாக இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம் சேகரிக்கப்பட்டது. கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி, பல மாநிலங்கள் முன்னேற்றம் இன்றி, முந்தைய ஆண்டுகளின் நிலையையே தொடர்ந்துள்ளன. குறிப்பாக இந்தி மொழி பேசும் மாநிலங்களில், கல்வி வளர்ச்சி அதிகம் சரிந்துள்ளது. அதேவேளையில் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு, தென் மாநிலங்கள் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளன. இதன்படி அணுகுமுறை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் திறமை வெளிப்பாடு ஆகியவை மேம்பட்டுள்ளன. இருப்பினும், பீகார், உ.பி., மற்றும் சில மாநிலங்கள் முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை.

மாவட்ட பள்ளிக் கல்வி தகவல்களின் அடிப்படையில், அடிப்படை மற்றும் மேல்கல்வி முறைகளில், லட்சத்தீவுகள் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் புதுச்சேரியும், அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகாவும் வருகின்றன.தமிழ்நாட்டில், பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தினால், கல்வித்தரம் குறையாமல் <உள்ளது. இதனால் தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. முந்தைய கல்விஆண்டில் 13வது இடத்திலிருந்த பஞ்சாப், 2012-13ல், ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.2011-12 ல் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்த கேரளா, தற்போது 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலம், தொடக்கக்கல்வி செயல்பாட்டில் பின்தங்கியதால் தான், மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2011-12 ல், தொடக்கக் கல்விக்கான பட்டியலில் ஆறாவது இடத்திலிருந்த கேரளா, இப்போது 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டில்லி, பத்தாவது இடத்திலிருந்து ஒரு இடம் பின்தங்கி, 11வது இடத்திற்கு வந்துவிட்டது. கடந்த கல்வி ஆண்டில் எட்டாவது இடம் வகித்த மகாராஷ்டிரா, தொடந்து அந்த இடத்திலேயே நீடிக்கிறது. ம.பி., 28வது இடத்தில் உள்ளது. பீகார் 33வது இடத்திலிருந்து 30வது இடத்திற்கு, சிறிய முன்னேற்றம் கண்டுள்ளது. உ.பி., 32லிருந்து 34வது இடத்திற்கும், ராஜஸ்தான் 23லிருந்து 25வது இடத்திற்கும், மேற்குவங்கம் 29லிருந்து 31வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
18-டிச-201319:30:01 IST Report Abuse
Rajarajan இந்த பெருமை முதலில், கல்விக்கண் தந்த காமராஜரை சாரும். இவரை நன்றியுடன் நினைப்போம். பின்னர், தி.மு.க. வை சாரும். எப்படி ????? இவர்கள் தானே, இந்தியை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்து, ஆங்கிலம் படிக்க வைத்தனர் நம்மை. இவர்கள் நமக்கு செய்த கெடுதலை, நாம் நமக்கு சாதகமாக ஆக்கி கொண்டோம். இனிமேல், இந்தியும் முக்கியம் என்பதை உணர்ந்தது, நாம் இந்தியும் சேர்த்து படிக்கவேண்டும், படிக்கவைக்கவேண்டும். அதுசரி. தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்லும் கருணாநிதியின் மகள் கனிமொழி மட்டும் எப்படி ஆங்கிலம் மற்றும் இந்தியில் புலமை பெற்றார் ???? கருணாநிதியின் பேர பிள்ளைகள், எந்த தமிழ் வழி கல்வி கூடத்தில் படிக்கின்றனர் ??? ஊருக்குதான் உபதேசம். செத்தும் கெடுப்பர் சில நவீன சீதக்கதிகள்.
Rate this:
Share this comment
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-டிச-201316:49:46 IST Report Abuse
Nanban அடடா.. தலைப்பிற்கேற்ற விமர்சனத்தை விட இங்கு வேறு எதேதேதோ.... ஏன்டா இப்படி போகுது உங்க சித்தனை எல்லாம்.. இப்படி இருப்பதால் தான் நம் நாடு ரொம்ப.. முன்னேற்றம் அடைந்சிருச்சு.... போய் முன்னேற வழியை பாருங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
18-டிச-201312:42:51 IST Report Abuse
Kovai Subbu "Kerala, Punjab, TN top Human Development Index ranking",
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X