அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் ஊழல் '-ராகுல்

Updated : டிச 21, 2013 | Added : டிச 21, 2013 | கருத்துகள் (163)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் ஊழல் பெரும் சவாலாக உள்ளது என்றும் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாக உள்ளது என்றும் , இது போன்ற பிரச்னைகளை ஒழிக்க , நாம் அதிரடி திட்டங்களுடன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூகுள் போல நமது நாட்டின் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் காங்., துணை தலைவர் ராகுல் டில்லியில் நடந்த எப்.ஐ.சி.சி.ஐ.,கூட்டத்தில் பேசினார். இவர் மேலும் பேசுகையில்: காந்தி நாட்டின்
'மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் ஊழல் '-ராகுல்

புதுடில்லி: நாட்டில் ஊழல் பெரும் சவாலாக உள்ளது என்றும் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதாக உள்ளது என்றும் , இது போன்ற பிரச்னைகளை ஒழிக்க , நாம் அதிரடி திட்டங்களுடன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூகுள் போல நமது நாட்டின் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் காங்., துணை தலைவர் ராகுல் டில்லியில் நடந்த எப்.ஐ.சி.சி.ஐ.,கூட்டத்தில் பேசினார். இவர் மேலும் பேசுகையில்: காந்தி நாட்டின் வளர்ச்சியை கொஞ்சம், கொஞ்சமாகத்தான் கொண்டு வர முடியும் என கூறியிருக்கிறார். ஆனால் தற்போது நாட்டில் உள்ள பிரச்னைகளை சமாளிக்க நாம் வேகமான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாட்டில் உள்ள திட்டங்களை அமல் படுத்துவதில் காலம் தாமதிப்பதை ஏற்று கொள்ள முடியாது. புரட்சிகரமான திட்ட மசோதாக்கள் பல பார்லி.,யில் நிலுவையில் உள்ளது. முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதை ஏற்க முடியாது. திட்டங்களை வேகப்படுத்த தேசிய வள கவுன்சில் ஏற்படுத்தியுள்ளோம்.


லோக்பால் பல ஆண்டுகள் கழித்து நாம் நிறைவேற்றியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி.,க்களை பார்லி.,யில் இருந்து வெளியேற்றியுள்ளோம், இது நமக்கு பெரும் வெற்றி ஆகும். ஊழல் மிக பெரும் சவாலாக உள்ளது. ஊழல் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. இதனை நாம் ஏற்க முடியாது. ஐக்கிய முற்போக்கு அரசு ஊழலை ஒழிக்க மற்ற அரசுகளை விட கடுமையாக உழைத்துள்ளது.


நாட்டின் வளர்ச்சியே வறுமையை ஒழிக்க முடியும். நாம் வறுமையை ஒழிக்க பாடுபட வேண்டிய நிலையில் உள்ளோம். இந்தியா பல வளங்களை கொண்டுள்ளது. வரவிருக்கும் 10 ஆண்டுகளில் 100 மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். நமது தொழிலாளர்கள் பலர் கூலியால் ஏமாற்றப்படுபவர்களாக உள்ளனர். இவர்களை காத்திட வலிமையான சட்டம் தேவையாக உள்ளது. காங்கிரஸ் அரசின் தகவல் அறியும் உரிமை சட்டம் காங்கிரஸ் அரசின் பெரும் நடவடிக்கை ஆகும்.


நமது இளைஞர்கள் உலக அளவில் தொழில் முனைவோர்களுடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கென நாம் வழிவகைகள் காண வேண்டும். நாட்டின் பணவீக்கம் முதல் கவனத்தில் எடுத்து கொண்டு செயல்பட்டு வருகின்றோம். விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நாம் விரைவில் சீர் செய்ய வேண்டும். நில கையகப்படுத்துதல் தொடர்பான சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இது தொழில் நிறுவனத்திற்கு உதவுவதாக இருக்க வேண்டும். இதில் பல சவால்கள் இருக்கிறது. மக்கள் நலத்திட்டத்தில் இன்வெஸ்ட் செய்வது பொருளாதாரத்தை பாதிக்காது.அரசின் நல்ல சாதனைகளை செய்தித்தாள்களில் போட்டு விற்பதில்லை.


தொழில் துறை மற்றும் கல்வி நடைமுறை இடையே நாம் தொடர்பற்று இருக்கின்றோம். உற்பத்தியில் நாம் திறந்த வெளியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-டிச-201317:27:42 IST Report Abuse
M S RAGHUNATHAN சாகிற சமயத்துல சங்கரா சங்கரா
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-டிச-201317:26:34 IST Report Abuse
M S RAGHUNATHAN தம்பி ராகுல் முதல்ல உன்னுடைய மச்சான் ராபர்ட் வாடர நில அபகரிப்பு ஊழலை விசாரணை செய்து அவரை ஜெயிலில் போடு அவன் எவ்வளு பேர் நிலத்தை ஆட்டை போட்டு இருக்கான் அவனுக்கு உதவி செய்த ஹரியானா மாநில முதலமைச்சரை டிஸ்மிஸ் செய். ஆதர்ஷ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட 4 மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்களை கைது செய்து காட்டு. அப்புறம் ஊழலை பற்றி பேசு குழந்தே
Rate this:
Cancel
Sathyajit - chennai,இந்தியா
22-டிச-201314:13:16 IST Report Abuse
Sathyajit பிக் பாக்கெட் அடிப்பவன் பாக்கெட் அடித்துவிட்டு.........ஜனங்களை பார்த்து அதோ பிக் பாக்கெட் ...பிடி பிடி பிடி என்று கூறி கத்துவான். அதுதான் இது. ..ராகுல் அவர்களே .....இது புனிதமான நாடு. இங்கு உங்கள் இத்தாலி வேலைகளை காட்டி மக்களை மடையர்கள் ஆக்க முடியாது என்பதை பிரிந்து கொள்ளுங்கள். நாலு நாய்க்குட்டிகள் வேண்டுமானால் உங்கள் பினால் வரலாம். நீங்கள் கபில் சிபல், மனீஷ் திவாரி. ஜெயந்தி நடராஜன் ப.சிதம்பரம், திக் Vijay சிங்க் இவர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் நாங்கள் பொறுப்பு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X