ரப்ரி தேவியை தேர்தலில் களமிறக்க லாலு முடிவு: ஊழலில் சிக்கியதால் கட்சியை காப்பாற்ற வியூகம்| Laloo decide to field his wife in sapraa constituency | Dinamalar

ரப்ரி தேவியை தேர்தலில் களமிறக்க லாலு முடிவு: ஊழலில் சிக்கியதால் கட்சியை காப்பாற்ற வியூகம்

Updated : டிச 22, 2013 | Added : டிச 22, 2013 | கருத்துகள் (19)
Share
பாட்னா: ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அடுத்த, 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனக்கு பதிலாக, தன் மனைவி, ரப்ரி தேவியை, சாப்ரா லோக்சபா தொகுதியில் களமிறக்க, அவர் முடிவு செய்துள்ளார்.போட்டியிட முடியாது: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக
ரப்ரி தேவியை தேர்தலில் களமிறக்க லாலு முடிவு: ஊழலில் சிக்கியதால் கட்சியை காப்பாற்ற வியூகம்

பாட்னா: ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அடுத்த, 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தனக்கு பதிலாக, தன் மனைவி, ரப்ரி தேவியை, சாப்ரா லோக்சபா தொகுதியில் களமிறக்க, அவர் முடிவு செய்துள்ளார்.போட்டியிட முடியாது:

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், சமீபத்தில், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளியில் வந்தார். லோக்சபா தேர்தலுக்கு, முக்கிய அரசியல் கட்சிகள், தயாராகியுள்ள நிலையில், லாலுவும், தன் கட்சிக்கான வியூகத்தை வகுத்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், தன் சொந்த ஊரான, சாப்ரா தொகுதியில் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்றார். 1977ல் இருந்து, அவர், இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இங்கு, அவருக்கு செல்வாக்கு அதிகம். தற்போது, ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டுள்ளது. இன்னும், 11 ஆண்டுகளுக்கு, அவரால், தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், அடுத்து நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தனக்கு பதிலாக, தன் மனைவி, ரப்ரி தேவியை களமிறக்க, லாலு முடிவு செய்துள்ளார்.

அரசியலில் ஆர்வம் இல்லை: இதுகுறித்து, ராஷ்டிரிய ஜனதா தள வட்டாரங்கள் கூறியதாவது: லாலுவின் இளைய மகன் தேஜஸ்விக்கு, 24 வயது தான், ஆகிறது. போதிய அனுபவம் இல்லாத நிலையில், அவரை களமிறக்குவது, விஷப்பரீட்சை என, நினைக்கிறார். மூத்த மகன் தேஜுக்கு, அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால், ரப்ரி தேவி, ஏற்கனவே, பீகார் முதல்வராக இருந்துள்ளார். லாலு, ஏற்கனவே சிறையில் இருந்தபோது, கட்சியை வழி நடத்தியுள்ளார். எனவே, அவரை களமிறக்குவது தான், சரி என, லாலு கருதுகிறார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X