பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., சேர்மனுக்கு சிறந்த நிபுணருக்கான விருது

Added : டிச 22, 2013
Advertisement

நெய்வேலி: என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகனுக்கு சிறந்த நிபுணருக்கான விருது வழங்கப்பட்டது. இந்திய பொறியாளர் கழகத்தின் சார்பில் 28வது இந்திய பொறியியல் மாநாட்டினை, சென்னையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். மாநாட்டில், தமிழகத்தில் செயல்பட்டு வரும், நவரத்னா தகுதிபெற்ற பொறியியல் துறை சார்ந்த, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, என்.எல்.சி., நிறுவனத்தை திறம்பட இயக்கி வருவதற்காக, சேர்மன் சுரேந்தர் மோகனுக்கு, நாட்டின் தலைசிறந்த நிபுணருக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை, இந்திய பொறியாளர் கழக தேசிய செயலர் மற்றும் பொது இயக்குனர் மேஜர் ஜெனரல் ஷனன் முன்னிலையில், இந்த அமைப்பின் தேசிய தலைவர் ரத்தோர் வழங்கினார். என்.எல்.சி., இயக்குனர்கள் ராஜகோபால், ரவீந்திரநாத், பூபதி உடனிருந்தனர். சேர்மன் சுரேந்தர் மோகன் பேசுகையில், "பல இயற்கை சவால்களுக்கு இடையே பணியாற்றி வரும் எங்களது நிறுவன பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு தான் இந்த விருதுக்கு ஆதாரம். ஆண்டுக்கு ஆண்டு புதிய உச்சங்களுக்கு எடுத்து செல்லக் காரணமாக திகழும் இன்ஜினியர்களுக்கு இந்த விருதினை அர்ப்பணிக்கிறேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X