தேனி:அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வரும் பிப்., 4ல், அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேனியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின், 8வது மாநில மாநாடு மூன்றாவது நாளான நேற்று நிறைவடைந்தது. சங்கத்தின் மாநில, பொதுசெயலாளராக மணி உள்ளிட்ட 77 மாநில பொதுக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், தமிழக கூலி விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஒவ்வொரு நபருக்கும் ஆண்டிற்கு 250 நாட்கள் வேலை வழங்கவும், இதற்கான ஊதியத்தை நாள் ஒன்றுக்கு 182 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 4 ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.