போடி:போடி அருகே முத்துலாபுரத்தில், பா.ஜ.,துவக்கியுள்ள "வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை' யாத்திரை மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடந்தது. ஒன்றிய தலைவர் அய்யப்பராஜா, கிளைத்தலைவர்கள் சின்ன பாண்டியன், ராஜா பெரியப்பன், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
யாத்திரையை விளக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டின் கதவிலும், வாகனங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டி மோடியின் சாதனைகள் குறித்து பொதுமக்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர். யாத்திரையின் போது குஜராத்தில் அமைக்கப்பட உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கான இரும்புக் கொழு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பொது மக்களிடமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளதால் பா.ஜ.,வினர் உற்சாகத்துடன் செயல்பட்டுள்ளனர்.