ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா கைவசம் 46 துறைகள்

Added : டிச 22, 2013 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ள வசுந்தரா ராஜே கைவசம் தற்போது 46 துறைகள் உள்ளது.ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ், நல்வாழ்வு மற்றும் சுரங்கத் துறைகளை தனது அமைச்சரவை சகாக்களுக்கு நேற்று ஒதுக்கியுள்ளார். இன்னும் அவரது கைவசம் 46 துறைகள் உள்ளன.நல்வாழ்வுத் துறை ராஜேந்திர ராத்தோருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா கைவசம் 46 துறைகள்

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றுள்ள வசுந்தரா ராஜே கைவசம் தற்போது 46 துறைகள் உள்ளது.ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ், நல்வாழ்வு மற்றும் சுரங்கத் துறைகளை தனது அமைச்சரவை சகாக்களுக்கு நேற்று ஒதுக்கியுள்ளார். இன்னும் அவரது கைவசம் 46 துறைகள் உள்ளன.நல்வாழ்வுத் துறை ராஜேந்திர ராத்தோருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை குலாப் சந்த் கட்டாரியாவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.காளி சரணுக்கு கல்வித்துறையும், கைலாஷ் மெக்வாலுக்கு சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.மாநில நீர்வளத் துறை அமைச்சராக சன்வார் மல் ஜாத் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வசுந்தரா ராஜேயிடம் உள்துறை மற்றும் நிதி உள்ளிட்ட 46 துறைகள் உள்ளன.
ராஜஸ்தானில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 9 பேர் கேபினட் அமைச்சர்களாக நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டனர். மேலும், தனி அமைச்சர்களாக 3 பேர் பதவி ஏற்றனர். அந்த 9 பேரில் கட்டாரியா மற்றும் ராத்தோர் மீது குற்ற வழக்குகள் உள்ளது. முதல்வர் வசுந்தரா ராஜேயின் முந்தைய அரசில் உள்துறை அமைச்சராக இருந்த கட்டாரியா மீது குஜராத் சொராபுதின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏற்கனவே வசுந்தரா,ராஜஸ்தான் சட்டசபை உறுப்பினர், லோக்சபா உறுப்பினர், பா.ஜ., பார்லி இணைச்செயலர், மத்திய அமைச்சர் என, பல பதவிகள் வகித்த இவர், கடந்த2003 டிச., 8 முதல் 2008 டிச., 13 வரை ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்
23-டிச-201302:15:42 IST Report Abuse
நல்லவனுக்கு நல்லவன் ஒரு வேளை நீங்களே எல்லாத்தையும் சுருட்டிற்லாம்னு இருக்கீங்களா ? அப்படியலாம் பண்ணாதிங்க. யார் யாரு எவ்வளவு கந்துவட்டிக்கு பணம்வாங்கி தொகுதிக்கு செலவு செய்தார்களோ....இப்படி நீங்க ஆப்பு வச்சா என்ன பண்ணுவாங்க அவுங்க ....அவுங்களும் 4 காசு பார்கனும்ல ...
Rate this:
Cancel
Sanjisanji - Chennai,இந்தியா
22-டிச-201321:18:49 IST Report Abuse
Sanjisanji முதல்வரை யோசிக்க டைம் கொடுங்க.. அப்புறம் யோசிக்காம கமண்ட் கொடுங்க.... ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-டிச-201319:35:35 IST Report Abuse
Nanban அட அதுக்குள்ளே என்ன அவசரம்.. எதிர்பார்க்காமல் பதவி ஏற்றாச்சு.. இனிமேல் தானே மந்திரி பதவியை யார்யாருக்கு பங்கு போட்டு சாரி.. பார்த்து கொடுக்கணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X