அடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி

Updated : டிச 22, 2013 | Added : டிச 22, 2013 | கருத்துகள் (107)
Share
Advertisement
காந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளி்ல் போட்டியிட திட்டமிட்டுள்ளது அக்கட்சி.2014 லோக்சபா தேர்தலில் குஜராத் அரசின் ஊழல் நடைமுறைகளை முன்னிலை படுத்தி மாநிலம் முழுவதும்
அடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி

காந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளி்ல் போட்டியிட திட்டமிட்டுள்ளது அக்கட்சி.
2014 லோக்சபா தேர்தலில் குஜராத் அரசின் ஊழல் நடைமுறைகளை முன்னிலை படுத்தி மாநிலம் முழுவதும் ஜாது யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.இது குறித்து சமீபத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதன் பின்னர் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் தினேஷ் வகேலா கூறுகையில்,குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அது வரும் ஜனவரியில் துவக்கி விட வேண்டும் என்றார்.
ஊழலை மறைப்பதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் லோக் ஆயுக்தாவை சட்டத்தின் பலவீனமாகவும் சுய சேவையாகவும் கருதும் பா.ஜ.க.,வின் அச்சுறுத்தலுக்க எதிராக போராடி மக்கள் முன் முறையீடு செய்ய உள்ளதாக வகலோ கூறினார்.
இது தவிர ஆம் ஆத்மி மாநில செயலாளர் 54 வயதான சஞ்சீவ் ஸ்ரீவத்சவாவும் சமூக ஆர்வலர் சுக்தேவ் படேல்(56) இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பணியாற்ற தயாராகி விட்டதாகவும் கூறுகின்றனர்.இதில் சமூக ஆர்வலர் சுத்தேவ் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் குறிப்பாக குழந்தைகள் உரிமைகள் பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கிறார். இதற்காக அரசியலில் நுழைய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் ஆம் ஆத்மி சரியான பாதையை வழி வகுக்கும் என்கிறார் படேல்.இந்நிலையில் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 லோக்சபாதொகுதிகளுக்கு குறி வைத்து காய நகர்த்த திட்டமி்ட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
23-டிச-201310:20:59 IST Report Abuse
A.S.VENKATESAN திரு புகழ் அவர்கள் மீண்டும், மீண்டும், ஒரே வாத்தையை சொன்னால் அது நிஜமாகிவிடாது. தில்லியில் ப.ஜ.க ஆட்சி அமைக்க ஓடி ஒழியவில்லை...... அதற்கு முன் இருக்கும் ஒரே வாய்ப்பு ஆம் அத்மி உடன் கூட்டனி வைத்தால் தான் முடியும் என்பது தேர்தல் முடிவு....... ஆனால் அந்த கட்சி முடிவுகள் வருவதற்க்கு முன்பே ஆதரவு யாருக்கும் இல்லை என தெளிவாக கூறிய பின் , மாற்று வழி இல்லாத காரணத்தினால் எதிர் வரிசையில் அமர்வது அல்லது மறு தேர்தலை சந்திப்பது என்ற ப.ஜ.கவின் நிலை நியாம்தானே.... அதற்காக பார்லில் தனக்கு எதிர் கட்சியாக உள்ள காங்கிரசுடனா கூட்டனி வைக்க முடியும்...... தமிழகத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கூட்டனி வைக்க முடியுமா?,,,,,,,அதேபோல் ஆம் அத்மியை எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்த்தி நாசம் செய்வது என்பது காங்கிரஸின் சதி திட்டம் என்பது போகப் போக தெரியும்...ஆரம்பத்தில் தனக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என்றே ஆத்மியை காங்கிரஸ் நினைத்து கொண்டாடியது.. ஆனால் அது தனது வாக்கு வங்கியை குலைக்கும் என்பது பின்னர் தான் தெரிந்துள்ளது....... ஆகவே இனி பழிவாங்கபோகிறது......இன்னும் 6 மத காலத்திற்குள் காங்கிரஸ் ஆத்மி மீது என்ன என்ன குற்றச்சாட்டுகளை வைத்து நாசம் செய்து மறு தேர்தலுக்கு தயாரகப்போகிறது என்பதி பாருங்கள்.... எவ்வள்வு விசுவாசமகா இருந்த தி.மு.கவிற்கே இன் நிலையென்றால் ஆத்மி பாடு மிக கடினம்தான்...
Rate this:
Cancel
Suresh - Nagercoil,இந்தியா
23-டிச-201302:55:36 IST Report Abuse
Suresh முதலில் உங்களுக்கு தந்த பொறுப்பினை திறமையாக செய்து காட்டுங்கள். பறந்து பிடிப்பது பிறகு.
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
23-டிச-201301:22:41 IST Report Abuse
rishi காங்கிரஸ் கட்சிக்கு வெட்கமில்லை, ஒரு முதல்வரை தோற்கடித கட்சியோடு கூட்டணி. மறுதேர்தலை சந்திக்க திராணி இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X