அடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி| AAP eyes Gujarat, to contest all Lok Sabha seats | Dinamalar

அடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி

Updated : டிச 22, 2013 | Added : டிச 22, 2013 | கருத்துகள் (107)
Share
காந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளி்ல் போட்டியிட திட்டமிட்டுள்ளது அக்கட்சி.2014 லோக்சபா தேர்தலில் குஜராத் அரசின் ஊழல் நடைமுறைகளை முன்னிலை படுத்தி மாநிலம் முழுவதும்
அடுத்தது குஜராத்:லோக்சபா தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி குறி

காந்திநகர் : டில்லியில் வெற்றியை ருசித்த ஆம் ஆத்மி கட்சி,குஜராத் மாநிலத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு குறி வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலையை கட்சியின் தேசிய செயற்குழு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.அங்குள்ள 26 லோக்சபா தொகுதிகளி்ல் போட்டியிட திட்டமிட்டுள்ளது அக்கட்சி.
2014 லோக்சபா தேர்தலில் குஜராத் அரசின் ஊழல் நடைமுறைகளை முன்னிலை படுத்தி மாநிலம் முழுவதும் ஜாது யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.இது குறித்து சமீபத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதன் பின்னர் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் தினேஷ் வகேலா கூறுகையில்,குஜராத்தில் உள்ள 26 லோக்சபா தொகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அது வரும் ஜனவரியில் துவக்கி விட வேண்டும் என்றார்.
ஊழலை மறைப்பதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் லோக் ஆயுக்தாவை சட்டத்தின் பலவீனமாகவும் சுய சேவையாகவும் கருதும் பா.ஜ.க.,வின் அச்சுறுத்தலுக்க எதிராக போராடி மக்கள் முன் முறையீடு செய்ய உள்ளதாக வகலோ கூறினார்.
இது தவிர ஆம் ஆத்மி மாநில செயலாளர் 54 வயதான சஞ்சீவ் ஸ்ரீவத்சவாவும் சமூக ஆர்வலர் சுக்தேவ் படேல்(56) இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பணியாற்ற தயாராகி விட்டதாகவும் கூறுகின்றனர்.இதில் சமூக ஆர்வலர் சுத்தேவ் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் குறிப்பாக குழந்தைகள் உரிமைகள் பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கிறார். இதற்காக அரசியலில் நுழைய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் ஆம் ஆத்மி சரியான பாதையை வழி வகுக்கும் என்கிறார் படேல்.இந்நிலையில் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 லோக்சபாதொகுதிகளுக்கு குறி வைத்து காய நகர்த்த திட்டமி்ட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X