தலைமை பொறுப்பு மோடிக்கு விடுக்கப்பட்ட சவாலா?

Updated : டிச 25, 2013 | Added : டிச 25, 2013 | கருத்துகள் (75)
Share
Advertisement
புதுடில்லி : 2014ம் ஆண்டு அமைய உள்ள புதிய அரசுக்கு மோடி தலைமை ஏற்கும்பட்சத்தில், மாநில அரசியலில் நடுநிலைத் தன்மையையும், தேசிய அரசியலில் பன்முகத் தன்மையையும் கையாள வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்படும் என லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.மோடிக்கு விடப்பட்ட சவால் : சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்
PM post : Is it challage for Modi?,தலைமை பொறுப்பு மோடிக்கு விடுக்கப்பட்ட சவாலா?

புதுடில்லி : 2014ம் ஆண்டு அமைய உள்ள புதிய அரசுக்கு மோடி தலைமை ஏற்கும்பட்சத்தில், மாநில அரசியலில் நடுநிலைத் தன்மையையும், தேசிய அரசியலில் பன்முகத் தன்மையையும் கையாள வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்படும் என லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


மோடிக்கு விடப்பட்ட சவால் :

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டில்லியில் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக பா.ஜ.,விற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் 4 மாநிலங்களிலும் பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்பதை உறுதி செய்துள்ளது. மோடி பிரதமரானால் அவரது கூட்டணி கட்சிகளே பெரும் குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த குழப்பங்களை சமாளித்து தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி சமமாக கொண்டு செல்வதிலேயே மோடியின் வெற்றி உள்ளது.


வரலாற்றில் கூட்டணி அரசு :

1989ம் ஆண்டு முதல் எந்தவொரு தனிக்கட்சியும் பெரும்பான்மை பெற்று நாட்டில் ஆட்சி அமைக்கவில்லை. கூட்டணியில் அமைந்த அரசில் ஏதாவதொரு கட்சி ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் பெற்று இருந்து வந்துள்ளது. மாநில அரசியலிலும் இதே நிலை தான். ஆனால் மோடி திட்டமிட்டு தனது அரசை இயக்கினால் கட்சியிலும், ஆட்சியிலும் நடுநிலையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மோடி செயல்படும்பட்சத்தில் 1989ம் ஆண்டுக்கு முன் இருந்தது போன்ற அரசை ஏற்படுத்தி மாற்றம் கொண்டு வர முடியும். இந்திரா காலத்தில் இருந்ததை போன்று பிரதமர் அலுவலகம் முழு அதிகாரம் பெற்றதாக விளங்கும். அவ்வாறு இல்லாமல் கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்களுக்கு இடம் அளித்தால் அந்த சக்திகள் அரசுக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தாலோ அல்லது பாதிக்கும் குறைவான லோக்சபா இடங்களை பா.ஜ., கைப்பற்றினாலோ ஓராண்டுக்குள் அல்லது 2 ஆண்டுகளில் அரசு கவிழும் நிலை ஏற்படும்.


மாநில அரசியல்:

நிதானமான போக்கை கைவிட்டு அதிரடி நடவடிக்கைகளில் மோடி இறங்கினால் மக்களிடம் அவருக்கு இருக்கும் மதிப்பும், செல்வாக்கும் அதிகரிக்கும். இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் அவரை மாபெரும் மனிதராகவும், சிறந்த பிரதமராகவும் எடுத்துக்காட்டும். ஆனால் மாநில அரசியலில் அதிகாரங்களை தங்களின் கைகளில் வைத்திருக்கும் பல முதல்வர்கள் இதற்கு பெரும் சிக்கலாக இருப்பர். சமீப காலமாக மாநில அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநில முதல்வர்கள் முழு அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்திருப்பதால் அவர்களின் ஈகோ தன்மை அதிகரித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சிக்கும், அரசுக்கு வரும் நிதிகள் பெரும்பாலும் தொழில்துறை நிறுவனங்களிடம் இருந்துதே கிடைக்கிறது. இந்த நிதியை முதல்வர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதால் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் அதிகாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இது போன்ற அதிகார போக்குடன் செயலாற்றும் முதல்வர்கள் மோடியின் அரசுக்கு வேண்டுமென்றே பல சிக்கல்களை ஏற்படுத்துவர். அதிலும் நிதிஷ்குமார் போன்ற மோடியை வெறுக்கும் முதல்வர்கள், மோடி அரசு மீண்டும் அமைவதை விரும்ப மாட்டார்கள்.


மோடிக்கு சவாலாகும் முதல்வர்கள் :

மக்கள் எதிர்பார்க்கும் சிறந்ததொரு அரசு மோடி தலைமையில் அமைய வேண்டுமானால் அதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. மம்தா பானர்ஜி போன்று ஒழுங்கற்ற, ஆடம்பர போக்கு நிறைந்த முதல்வர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மோடியை எதிர்க்கவே நினைப்பார்கள். உ.பி.,யில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடிக்கு முக்கிய ஆதரவை அளிக்கலாம். ஆனால் அதற்கு முலாயம் சிங் போன்ற தலைவர்கள் இடம் அழிக்கமாட்டார்கள். ஜெயலலிதா தனது ஆட்சியில் 2011 முதல் இதுவரை 7 முறை தனது அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார். சமீபத்தில் ஏற்காடு இடைத்தேர்தலில் அவர் பெற்ற வெற்றியும், பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களும் அவருக்கு பிரதமராகும் நம்பிக்கையையும் கனவையும் அதிகப்படுத்தி உள்ளது. இத்தகைய நிலையில் மோடி போன்ற பலம் வாய்ந்த பிரதமரை, பிரதமர் கனவில் இருக்கும் ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் நிச்சயம் எதிர்க்கவே செய்வார்கள்.


சவாலை சமாளிப்பாரா? :

நவீன் பட்நாயக் போன்றோர் ஏற்கனவே பா.ஜ., கூட்டணியில் இருந்ததால் மோடியை ஆதரிப்பார்கள். சிதைக்கப்பட்ட சீமந்திரா பகுதி காரணமாக ஜெகன் மோகன் அதிக இடங்களை கைப்பற்றுவார். இவரும் பிரதமர் மோடிக்கோ, அவரது தலையிலான அரசுக்கோ எவ்வித இடையூரும் அளிக்கமாட்டார். மோடி அரசுக்கு வெளிப்புறம் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும் என்றாலும், கட்சிக்குள் அவருக்கு இருக்கும் ஆதரவை பொறுத்தே அவரது ஆட்சி வெற்றி பெறுவது அமையும். தேசிய அரசியலையும், மாநில அரசியலையும் சமாளிக்க வேண்டி இருப்பதால் இரட்டை குதிரையில் சவாரி செய்வது போன்ற சவாலான நிலையே மோடிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இளங்கோ - chennai,இந்தியா
26-டிச-201306:40:29 IST Report Abuse
இளங்கோ நிச்சயம் இது ஒரு சவாலான வேலை தான்.ஆனால் இதற்க்கு மோடியை விட தகுதியான ஒரு தலைவர் இன்று கிடையாது ..இந்த நிலையில் மக்கள் செய்யக்கூடியது BJP க்கு தனிபெரும்பான்மை பெரும் அளவுக்கு ஆதரவு அளிப்பதே.மாநில அபிமானங்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஒட்டு மொத்த நாட்டு நலன் கருதி ஓட்டளிப்பதே சிறந்தது. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைப்பது கடினம்.ஒன்றே செய்க அதை செவ்வனே செய்க.
Rate this:
Cancel
skmoorthi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201303:56:00 IST Report Abuse
skmoorthi எப்படி பிரணாப்முகர்சியை சனாதி்பதி் பதவிக்கு வேறுவழியில்லாமல் சோனியா பரிந்துரைத்தாரோ அதேபோலத்தான் பாரதி்யசனதாவும் மோடியை பரிந்துரைத்தி்ருக்கிறது ஏனெனில் இவர்களை சுயலாபத்தி்ற்காக யாரும் ஆட்டுவிக்க முடியாது மனச்சாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் ஆனால் ஒன்று தமிழகத்தைப் பொறுத்த வரை அ தி் மு க பாரதி்யசனதா கூட்டணி அமையவில்லை எனில் பாரதீயசனதாவுக்கு போடப்படும் ஓட்டு மறைமுகமாக கருணாநிதி்க்கு போடப்படும் ஓட்டுக்குச் சமம்
Rate this:
Cancel
prabhu - panaiyur chennai  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201323:42:35 IST Report Abuse
prabhu மோடி பிரதமர் ஆனால் தான் நம்மிடம் வால் ஆட்டும் பாகிதானையும் எள்ளி நகையாடும் அமெரிகாவையும் நறுக்கமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X