அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீச்சல் குளம் அமைக்க தாமதம் : ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட்: உ.பி., முதல்வர் அதிரடி

Updated : டிச 26, 2013 | Added : டிச 26, 2013 | கருத்துகள் (23)
Advertisement
Akhilesh Yadav suspends IAS officer for delaying funds for swimming pool in native village

லக்னோ: உ.பி., மாநிலத்தில் தன்னுடைய சொந்த கிராமத்தில் நீச்சல் குளம் அமைக்க கால தாமதம் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் உ.பி. முதல்வர் அகிலேஷ்யாதவ்.


நீச்சல் குளம்:

உ.பி., மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ்வின் சொந்த ஊரான சேபாய் கிராமத்தில் ரூ.200 கோடி வரையில் விளையாட்டுத்துறை மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. இதில் அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற வகையிலான நீச்சல் குளத்தை அமைக்க சுமார் 60 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்பட்டது.
மாநில விளையாட்டுத்துறை இயக்குனராக இருந்து வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சைலஷ்குமார் சிங்கிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் நிதி ஓதுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. போதுமான நிதி ஒதுக்கப்பட்டும் பணியில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


மாநில மதல்வர் அதிரடி:

பணியில் எவ்வித முன்ற்றேமும் ஏற்படாததை அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ் உடனடியாக விளையாட்டுத்துறை இயக்குனர் சைலேஷ்குமார்சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வரும் ஜனவரி மாதம் 31-ம் தேதியுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சைலேஷ்குமார் சிங் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு துவக்கத்தில் கிரேட்டர் நொய்டா பகுதியில் ஏற்பட்ட பிரச்னையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்திபாலை சஸ்பெணட் செய்து அனைவரின் அதிருப்திக்குள்ளான முதல்வர் அகிலேஷ் யாதவ் தற்போது மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manikandan - coonoor,இந்தியா
26-டிச-201320:14:14 IST Report Abuse
manikandan உ.பி.யில் தான் இந்த மாதிரி அதிகாரிகளை கேவல படுத்தும் நிகழ்வுகள் அடிகடி நிகழ்கின்றன மாநில கட்சி கள் கை ஓங்கியிருக்கும் மாநிலங்களில் அடிகடி நிகழும் சம்பவங்கள் ஆகின்றன மாயாவதி ஆட்சி போது ஒரு ஐ.எ.எஸ் அதிகாரியை தனது சூவை துடைக்கவைத்து தனது சிறுமை தனத்தை காட்டினார் இப்பொழுது இவரின் முறை இதை விட கேவலம் தமிழ் நாட்டில் அரங்கேறி வருகிறது வாரத்துக்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுவது ஏன்? தனது சக மந்திரிகளையே ஏதோ எல்.கே.ஜி.குழந்தைகளை நடத்துவதுபோல் நடத்துவது பனீர்செல்வம் ஏதோ புதிதாக முதல்வரை பார்ப்பதை போல குனிந்து வளைந்து கும்பிடு போட்டது இவர் அ.தி.மு.க வில் இரண்டாம் ஸ்தானம் எப்படி தக்க வைத்து கொள்கிறார் என்பது புரிகிறது இந்த ஜனநாயக சர்வதிகரிகள் மத்தியில் ஆட்சியை பிடிக்கபோகிறார்களாம் ஜனநாயகத்தை காக்க போகிறார்களாம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-டிச-201315:30:01 IST Report Abuse
Nallavan Nallavan அம்மாவின் அரசியலை ஒரு வடமாநில முதல்வர் பின்பற்றினால் நமக்குப் பெருமைதானே ????
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
26-டிச-201314:16:49 IST Report Abuse
krishna அடுத்த தேர்தலில் இவன் காணாமல் போய்விடுவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X