2014 பொது தேர்தல்: சிலை வைப்பதில் போட்டி போடும் அரசியல் கட்சிகள்

Updated : டிச 26, 2013 | Added : டிச 26, 2013 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது தேர்தலில் இரு பெரும் கட்சிகளான காங்., பா.ஜ., ஆகியவை மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அளிக்கிறதோ இல்லையோ சிலைகளை வைப்பதில் போட்டிபோடும் நிலை காணப்படுகிறது. வல்லபாய் படேல், சிவாஜிக்குசிலை: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவி்கப்பட்ட நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சர்தார சரோவர் அணை
2014 LS polls on mind, Cong, BJP in statue war

புதுடில்லி: வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொது தேர்தலில் இரு பெரும் கட்சிகளான காங்., பா.ஜ., ஆகியவை மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அளிக்கிறதோ இல்லையோ சிலைகளை வைப்பதில் போட்டிபோடும் நிலை காணப்படுகிறது.
வல்லபாய் படேல், சிவாஜிக்குசிலை: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவி்கப்பட்ட நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சர்தார சரோவர் அணை பகுதியில் உள்ள தீவில் சுமார் 597 அடி உயர சிலைவைக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.,வுக்கு போட்டியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அரபிக்கடலில் அரசர் சக்கரவர்த்தி சிவாஜிக்கு 350அடி உயரத்தில் உருவ சிலை அமைக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக சிவாஜியின் சிலை 312 ஆக இருக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. மோடியி்ன் வல்லாபாய் சிலைக்கு போட்டியாக சிவாஜியின் சிலை உயரத்தை அதிகரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த சிலையி்ன் உயரம் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலையை காட்டிலும் அதிகமானதாகும்.
மேலும் காங்கிரஸ் கட்சி சட்ட மேதை அம்பேத்கருக்கும் சிலை வைக்க முடிவு செய்துள்ளது.தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும் அம்பேத்கரின் அஸ்தி வைக்கப்பட்டு்ள்ள இடத்தில் சிலையை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட மூன்று சிலைகளை அமைக்க சுறறுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டிய சூழ்நிலையில் சிவாஜிசிலை அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னரே அனுமதி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பொது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த சிலை வைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சூடு கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-டிச-201300:59:11 IST Report Abuse
Mujib Rahman இந்த சிலை வைப்பதின் விளைவாக ??? இந்தியாவின் பொருளாதாரம் பல மடங்கு உயரும்???????????என்று அமெரிக்காவில் இருந்து வெளி வரும் பிரபலமான ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுருக்கிறது
Rate this:
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
26-டிச-201321:52:02 IST Report Abuse
நீலகண்டன் போட்டி எதற்கு தேவை அற்ற சர்ச்சைகளை இது உருவாகும்
Rate this:
Cancel
siva siva - brasilia,பிரேசில்
26-டிச-201316:08:46 IST Report Abuse
siva siva சிவாஜி சிலை வைக்க பிரபு கிட்ட அனுமதி கேடின்களா,ஹி ஹி .இந்த விஷயத்துல ஒன்னு கவனிக்கணும்,சிவாஜி சிலை வைக்க 9 வருஷம் பின்னாடியே அனுமதி வாங்கிடான்கலாம்.So,அப்டீனா 9 varushama இந்த govt. ஒன்னுமே பண்ணல.First one year last one year மட்டும் தான் மக்கள் ஞாபகம் வரும் போல.காங்கிரஸ் கு சரியான தலைமை இல்ல,கலசுருங்க.இது democratic country , ஒரே குடும்பம் தான் ஆளனும்னு எழுதி வச்சிருக்க என்ன.???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X