என்னுடைய
மண்டபத்தை இடித்தவர்களுடன் கூட்டணி கிடையாது என, மூச்சுக்கு முன்னூறு முறை
முழங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த், தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து
பரிசீலிப்பேன் என, கட்சி சார்பில் நடத்தப்பட்ட, கிறிஸ்துமஸ் விழாவில்
கூறியிருந்தார். அப்படி நடந்தால், மகிழ்வுடன் ஏற்பேன் என, தி.மு.க.,
தலைவர், கருணாநிதி தூண்டில் போட்டிருந்தார். இருவரின் பஞ்ச் குறித்து,
அரசியலில் எதிர் துருவங்களாக இருக்கும் இருவரின், பைட் இதோ:
அ.தி.மு.க.,வும்,
தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி நடத்தி, தமிழக மக்களை ஏமாற்றியது தான்
மிச்சம். எனவே, மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி என்று கூறிய
விஜயகாந்த், இப்போது கூட்டணிக்காக அலையத் துவங்கிவிட்டார். அவருக்கு எந்த
கொள்கையும் கிடையாது. தி.மு.க.,வுடன் கூட்டணி சேரும் முடிவை தான்,
விஜயகாந்த் எடுப்பார், இது தெரிந்த ஒன்றுதான்.தன் கல்யாண மண்டபத்தை,
தி.மு.க.,வினர் இடித்து விட்டனர் என்ற காரணத்துக்காக, கட்சியையே
துவக்கியவர், விஜயகாந்த். தனக்கு என்ன லாபம் என, கணக்கு போட்டு தான், எந்த
ஒரு வேலையிலும் இறங்கும், விஜயகாந்த், இப்போது, தி.மு.க.,வுடன் கூட்டணி
சேர்ந்தால், ஏதாவது கிடைக்குமா என, கணக்கு போடுகிறார். அவரை நம்பி
ஓட்டளித்தவர்கள் பற்றியெல்லாம், அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
தே.மு.தி.க.,வுக்கு, ஏற்கனவே ஓட்டளித்தோரின் எண்ணிக்கையை காட்டித்தான்,
அவர் கூட்டணிக்காக பேரம் பேசுகிறார். இந்த அணுகுமுறை வெற்றி பெறாது.
விஜயகாந்த் யார் என்பதை மக்களும் கணக்கு போட துவங்கிவிட்டனர். அவரை
அரசியலில் இருந்து புறக்கணிப்பர்.
இதன் எதிரொலி தான், கட்சியின் முக்கிய தலைவர்களும், எம்.எல்.ஏ.,க் களும் கழன்று வருகின்றனர்.
மைக்கேல் ராயப்பன், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,
கூட்டணிக்கு,
தே.மு.தி.க., வந்தால் மகிழ்ச்சி என்று தான், கட்சித் தலைவர் கருணாநிதி
கூறியுள்ளார்; கூட்டணிக்கு வரும் முடிவை, விஜயகாந்த் தான் எடுக்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவதன் மூலம், கூட்டணியின் பலம்
அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அக்கட்சி கடந்த தேர்தல்களில்,
10 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு என, ஓட்டு வங்கி
இருப்பதை, யாரும் மறுக்க முடியாது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வர,
தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கியும் உதவியது. ஆனால், தேர்தலுக்குப் பின்,
தே.மு.தி.க.,வை, ஜெயலலிதா தூக்கி எறிந்துவிட்டார். சட்டசபையில்
எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., எங்களுடன் கூட்டணி அமைப்பதன் மூலம்,
அ.தி.மு.க.,வுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியும். எங்களுடன் கூட்டணி
சேர, தே.மு.தி.க., வர வேண்டும் என, விரும்புகிறோம். இதை, நாங்கள்
வெளிப்படையாகக் கூறியுள்ளோம். அ.தி.மு.க.,வின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி
எப்படி என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்கள் கணக்கு பண்ணட்டும்.
இதற்கு, தே.மு.க.தி.க.,வும் துணைக்கு வந்தால் கூடுதல் பலம்.
டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க., அமைப்பு செயலர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE