சாலையில் பறிக்கும் ரூவா... சாமிக்கு போகுது பூவா!

Updated : டிச 30, 2013 | Added : டிச 30, 2013 | கருத்துகள் (5)
Advertisement
சாலையில் பறிக்கும் ரூவா... சாமிக்கு போகுது பூவா!

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்புவதற்கு இன்னும் நேரம் இருந்தது; ஜன்னலோர இருக்கையில் மித்ரா உட்கார்ந்திருந்தாள்.
"என்னடி! சென்னைக்கு நீ போற விஷயமாவது "சக்சஸ்'சா முடியுமா?,'' வெளியில் நின்றபடி கிண்டலாய்க் கேட்டாள் சித்ரா.
"நம்ம கவுன்சிலர்கள் முயற்சியைச் சொல்றியா...?,''
"ஆமா! கடைசி வரைக்கும் சி.எம்.ட்ட நேரடியா பெட்டிஷன் கொடுக்க முடியலை; ஏதோ சி.ஐ.டி., போலீஸ் ஆபீசர்ட்ட கொடுத்தாங்களாம். எப்படியும் கொஞ்ச நாள்ல அது கோயம்புத்தூர் வி.ஐ.பி.,க்கு வந்துரும்,''
"நீலகிரி மாவட்டச் செயலாளரை அஞ்சே நாள்ல காலி பண்ணுனதும் "பெட்டிஷன்'தான்...ஆனா, கோயம்புத்தூர்ல இருந்து போறது மட்டும் ஏன் அந்தம்மாட்ட போறதில்லேன்னுதான் கட்சிக்காரங்களுக்கே புரியலை. கடும் விரக்தியில இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"ஆளும்கட்சிக்காரங்க மட்டுமா, புலம்புறாங்க. உடன் பிறப்புகளும்தான்!,'' என்றாள் சித்ரா.
"அவுங்களுக்கு என்னாச்சாம்? அதுதான், ஆளும்கட்சிக்காரங்களோட நல்லா "டை-அப்' போட்டு, சத்தமில்லாம சம்பாதிச்சிட்டு இருக்காங்களே!,''
"தி.மு.க., பொதுக்குழுவுக்கு, கவுன்சிலர் மீனா லோகுவுக்கும் அழைப்பு வந்துருக்கு. அவுங்க, பொதுக்குழு உறுப்பினரே கிடையாது. ஆனா, கருணாநிதி, ஸ்டாலினைப் பத்தி பாட்டுப் போட்டு, எப்படியோ பேரு வாங்கிட்டாங்க; அதனாலதான் கூப்பிட்டுருக்காங்க. அங்க கூப்பிட்டது மட்டுமில்லாம, பொதுக்குழு தீர்மானத்தை விளக்கி, திருப்பூர்ல நடக்கப்போற கூட்டத்துக்கு அவுங்களையே தலைமையா போட்டுட்டாங்க. அதுலதான், கட்சி சீனியர்கள் எல்லாம் புலம்பிட்டுத் திரியுறாங்க,''
"பொம்பளைங்க முன்னேறுனா, சிலருக்குப் பிடிக்காதே!,'' என்றாள் மித்ரா.
"யாருக்குப் பிடிக்காட்டாலும், வர்ற எலக்ஷன்ல, கோயம்புத்தூர்ல பெண் வேட்பாளருக்குதான் வாய்ப்பிருக்கும் போலிருக்கே!,'' என்று புதிர் போட்டாள் சித்ரா.
"எனக்குத் தெரிய, திராவிடக் கட்சிகள்ல அதுக்கு வாய்ப்பேயில்லை!,''
"நீ சொல்றது கரெக்ட்தான்; நான் சொன்னது, தேசியக் கட்சியைப் பத்தி. கோயம்புத்தூர் தொகுதியில, "சீட்' வாங்க பா.ஜ.,வுல பயங்கர போட்டி இருக்கு; ஆனா, வானதி சீனிவாசனுக்குதான் அதிக வாய்ப்புன்னு கட்சியில பேசிக்கிறாங்க; அந்தம்மா ஜெயிச்சா, கண்டிப்பா மினிஸ்டராயிருவாங்களாம்,''
"அரசியலை விடுக்கா! சிட்டிக்குள்ள டிராபிக் போலீஸ் வசூல், ரொம்ப மோசமாயிருச்சுன்னு எல்லாரும் சொல்றாங்க!,'' என்றாள் மித்ரா.
"உண்மைதான்டி! சிட்டி டிராபிக்கைக் கவனிச்சிக்கிற முக்கியமான போலீஸ் ஆபீசருக்கு "வசூல்ராஜா'ன்னு பேரு வக்கிற அளவுக்கு, வசூல்ல பட்டையைக் கிளப்புறாரு. நிறையா தகவல் வருது. லேட்டஸ்ட்டா கேள்விப்பட்டது இது. அந்த ஆபீசர், டிராபிக் இன்ஸ்பெக்டர் ஒருத்தரைக் கூப்பிட்டு, புதுசா "டிராக்சூட்' வேணும்னு கேட்ருக்காரு. அவரும், ஏகப்பட்ட "டிராக்சூட்'டைக் கொண்டு வந்து, "உங்களுக்குப் பிடிச்சதை எடுத்துக்கோங்க சார்!'ன்னு சொல்லி இருக்காரு. ஒடனே, அந்த ஆபீசர், வீட்டுக்காரம்மாவைக் கூப்பிட்டு, "எல்லாத்தையும் எடுத்து பீரோவுல வை'ன்னு சொல்லிட்டாராம். மொத்த அமவுன்ட், 35 ஆயிரம் ரூபா. அதை வசூல் பண்றதுக்காக அந்த டிராபிக் இன்ஸ்பெக்டர், ரோடு ரோடா அலையுறாரு,'' என்றாள் சித்ரா.
"அடக்கொடுமையே!,'' என்றாள் மித்ரா.
"இதுக்கே அசந்தா எப்புடி? அதே ஆபீசர், அடிக்கடி குடும்பத்தோட தியேட்டருக்குப் போவாரு; டிக்கெட் எடுத்துக் கொடுக்குற பொறுப்பு, அந்தந்த ஏரியா டிராபிக் எஸ்.ஐ.,யோடது; இன்டர்வெல்ல "ஸ்நாக்ஸ்' வாங்கியும் கொடுக்கணும்; சமீபத்துல, 450 ரூபாய்க்கு "ஸ்நாக்ஸ்' வாங்கிக் கொடுத்து, நொந்திருக்காரு ஒரு டிரைவர். இதெல்லாம் பரவாயில்லடி...அவர் தினமும் சாமி கும்பிடுறதுக்கு, ராமநாதபுரத்துல இருக்கிற ஒரு பூக்கடையில இருந்துதான் பூ வருது. அதுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபா கொடுக்கிறதும் ஒரு டிராபிக் எஸ்.ஐ.,தான்!,'' என்றாள் சித்ரா.
"அய்யே...இதென்னக்கா கேவலமா இருக்கு? அந்த சாமியாவது, வசூல்ராஜாட்ட இருந்து, டிராபிக் போலீஸ்காரங்களைக் காப்பாத்துமா?,'' என்றாள் மித்ரா.
"இவரையெல்லாம் தூக்கி சாப்பிடுறாரு ஒரு இன்ஸ்பெக்டர். சிட்டிக்குள்ள ராத்திரி முழுக்க சரக்கு விக்கிறதுக்கு, ஒரு "பார்'க்கு மாசம் 5 ஆயிரம் ரூபா மாமூல் கேட்ருக்காரு. "பார்' நடத்துறவுங்க, கூட்டத்தைப் போட்டு, கமிஷனர்ட்ட "கம்பிளைன்ட்' கொடுக்கலாம்னு கௌம்பி இருக்காங்க. இந்த தகவலை மோப்பம் பிடிச்ச அவரு, ஏதோ பேரம் பேசி, 3ஆயிரம் ரூபாய்க்கு ஒத்துட்டு இருக்காருன்னு தகவல்,'' என்றாள் சித்ரா.
"நீ சொல்ற ஆபீசர், பணம் கொடுக்கலைன்னு "ரெக்கார்டு பீரோ'வுல இருந்து சில ஆவணங்களை எடுத்துக் கிழிச்சவராச்சே. அவர் மேலதான், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க. என்ன மாயம்னே தெரியலை,'' என்று சித்ரா சொல்லவும், விசில் சத்தம் கேட்டது.
"உங்க அண்ணன் பையன் ரஞ்சித்தை ரொம்பக் கேட்டதாச் சொல்லுடி என்று சித்ரா கைகாட்ட, மெதுவாய் நகர்ந்தது ரயில்.



பேக்கரிக்கு செல்லும் "கீ' கலெக்ஷன் கன ஜோர்!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்னபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.

வெனிலா கேக், முந்திரி பக்கோடா

சகிதமாக, சூடாக இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா.
"என்ன வரவேற்பு தடபுடலா இருக்கே, ஏதேனும் விஷேசமா என்ன,'' என்று சித்ரா கேட்டதும்,
"கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக, ஜெனீபர் கேக் கொடுத்து அனுப்புனா. அதுதான், வெனிலா கேக். முந்திரி பக்கோடா, நானே புத்தகத்தை பார்த்து செஞ்சது. இஞ்சி டீ காரசாரமா இருக்கட்டுமேன்னு கொடுத்தேன். அவ்ளோ தான்,'' என மித்ரா நழுவப்பார்த்தாள்.

"இல்லையே... நீ சொல்றதுல உள்குத்து வேலை இருக்கிற மாதிரி தெரியுதே,'' என, சித்ரா விடாப்பிடியா கேள்வி கேட்க, "டூவீலர்ல போறவங்களை நிறுத்தி, செக்-அப் செய்றாங்களாம். ஏரியாவுக்கு தகுந்தமாதிரி வசூல் வேட்டை நடக்குதாம். லைசென்ஸ், ஆர்.சி., புக், இன்சூரன்ஸ் சரியா இருந்தா, டிபன் வாங்கித் தரச் சொல்றாங்களாம். இல்லைன்னா, வண்டியோட "கீ', பக்கத்துல இருக்கற பேக்கரிக்கு போயிருமாம். 300 முதல் 500 வரைக்கு கப்பம் கட்டிட்டு, "கீ'யை வாங்கிட்டு போகணுமாம். கடைக்காரங்க, கலெக்ஷன் தொகையை தனியா வச்சு, கணக்கு கொடுக்கணுமாம். மகாலட்சுமி புலம்புறா,'' என்று விளக்கினாள் மித்ரா.

"ஓ... அங்கிருந்து வந்த கேக் தானா, இது; இதை சாப்பிடலாமா, வயித்தாலா போயிருமா?,'' என பயந்த சித்ரா, "லஞ்சமே வாங்க மாட்டோம்னு போலீஸ்காரங்க பல பேரு பீத்திக்கிறாங்களே; அதெல்லாம் டூப்பா...?,'' என அப்பாவியாய் கேட்க, "இன்னொரு கதை சொல்றேன்; அதை கேட்டு, மலைச்சுப் போயிடுவீங்க,'' என மித்ரா சொன்னதும், புருவத்தை உயர்த்தினாள் சித்ரா.

"காங்கயம் பக்கத்துல அரிசி ஆலைக்காரங்ககிட்ட ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடிச்சிட்டு போச்சுல்ல... அதுல, ஆரம்பத்துல 23 லட்சம்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. அப்புறம், 22 லட்சமா குறைஞ்சுச்சு. கொள்ளை கும்பலை சேர்ந்த எல்லாத்தையும் பிடிச்சு, ஜெயில்ல போட்டுட்டாங்க. கொள்ளையடிச்ச கும்பல்கிட்ட மீட்டது 19 லட்சம்னு சொல்லி, திருப்பிக் கொடுத்திருக்காங்க. மிச்சத்த செலவு கணக்கு காட்டிட்டாங்க,'' என மித்ரா சொன்னதும், செலவு கணக்கா? அப்படின்னா? என சித்ரா கேட்க, "திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கிறாங்கள்ல, அவங்க, கார் எடுத்துக்கிட்டு ஊர் ஊரா சுத்துவாங்க; அதுக்கு செலவழிக்கிற தொகையை, இதுல நேர் செஞ்சிடுவாங்க. இதெல்லாம், போலீஸ் வட்டாரத்தில் சர்வ சாதாரணம். முழுசா ஏப்பம் விடாம, முக்கால்வாசி தொகையை திருப்பிக் கொடுத்தாங்களே, அதை நெனைச்சு பெருமைப்படுறாங்க,'' என்றாள் மித்ரா.
"பொங்கல் கொண்டாட, ரேஷன் கடையில் 500 ரூபாய் கொடுக்கப் போறாங்களாமே,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
"ரேஷன் கார்டே கெடைக்கறதில்லை; பொங்கல் பணம் எப்படி கிடைக்கும்,'' என புலம்பினாள் மித்ரா.

"ஏன், என்னாச்சு,'' என, சித்ரா கேள்வி எழுப்ப, "புது கார்டு கேட்டு போன வருஷம் 10 ஆயிரம் பேரு மனு கொடுத்தாங்க. அதுல, இரண்டாயிரம் பேருக்கு மட்டும் கார்டு வந்துருக்கு. மத்தவங்களுக்கு வருமா? வராதான்னு தெரியல. இந்த வருஷம் இதுவரைக்கும் ஏழாயிரம் பேருக்கு மேல மனு கொடுத்திருக்காங்க. இந்த பிரிவு ஸ்பெஷல் தாசில்தார், இந்த மாசம், ஜூடிசியல் டிரெய்னிங் போகப்போறாரு. அப்புறம், வேற போஸ்டிங் வாங்கிட்டு போயிடுவாரு. அடுத்து வர்ற தாசில்தார், இந்த மனுக்களை தொட்டு கூட பார்க்க மாட்டாரு. மனு கொடுத்தவங்களோ, கார்டு வந்துரும்னு நம்பி ஏமாந்துகிட்டு இருப்பாங்க,'' என மித்ரா சொன்னதும்,

"திருப்பூர் மக்களை எப்படி எல்லாம் வதைக்கிறாங்க,'' என, நொந்தபடி, கிளம்பினாள் சித்ரா.
தட்டில், கேக், முந்திரி பக்கோடா, இஞ்சி டீ அப்படியே இருந்தன!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iyyappan Kalyanasundaram - Higashimatsuyama,ஜப்பான்
31-டிச-201308:11:12 IST Report Abuse
Iyyappan Kalyanasundaram "பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா" எனக்கு இந்த தைரியம் வருமா?...பாரதியே துணை...
Rate this:
Share this comment
Cancel
Iyyappan Kalyanasundaram - Higashimatsuyama,ஜப்பான்
31-டிச-201308:08:20 IST Report Abuse
Iyyappan Kalyanasundaram ஜப்பான்ல இந்த தொந்தரவு( ஊழல்,லஞ்சம்,கரண்ட் கட்,சாலை விதி மீறல் )எல்லாம் இல்லாம ரெண்டு வருடம் இருந்துட்டு, அடுத்த வருடம் கோயம்புத்தூர் வர்ரத நெனச்சா...கடவுளே காப்பாத்து( என்னையும் ,உன்னையும் )
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
31-டிச-201308:03:30 IST Report Abuse
எல்.கே.மதி கோயம்புத்தூர் மட்டுமில்லை. அதே கதை இங்கு சென்னையிலும் நடப்பது பலருக்குத்தெரிய வாய்ப்பில்லை. தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் உள்ள சரவண பவன் ஹோட்டலிலும், பிராட்வே பஸ் ஸ்டண்டு எதிரில் உள்ள சரவண பவன் ஹோட்டலிலும் சென்று பாருங்கள். காலையில் பதினைந்து பேருக்குக்குறையாமல், இந்த பகுதியில் பணிக்கு வரும் 'ட்ராஃபிக் போலீஸ்' கூட்டம் இங்குதான் முதலில் 'அட்டெண்டென்ஸ்' கொடுக்கிறது. இவர்களுக்கு ஏதாவது சலுகை விலையில் தருகிறீர்களா என்று சப்ளையரைக் கேட்டால், எல்லாம் தரும /ஓ.சி.கேஸ் என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டேன். அந்த ஹோட்டலின் விலையைப் பார்த்ததுமே நமக்கு பசி பாதி குறைந்து போய் விடும். காபி கூடக் குடிக்காமல், ஒரு பிளேட் இட்லி,ஒரு தோசை என்று முடித்துக் கொள்வோம். ஆனால், இவர்கள் சாப்பிட்ட ஐட்டங்களைப் பார்த்து பிரமிப்பேற்படும். மூச்சு பிடிக்க வயிறு முட்ட இப்படித் தின்பதால்தான், தனியே பிய்ந்து விழும்படி காவலர்களின் தொந்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை வைத்துக்கொண்டு இவர்களால் ஓடத்தான் முடியுமா? சென்னை வரும் வாசகர்கள், இந்தக் காட்சியை நேரில் கண்டு மகிழுங்கள். உண்மைத் தன்மையை உணருங்கள். இதுதான் நமது நேர்மையான காவல்துறை சேவை
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393