பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

Updated : டிச 30, 2013 | Added : டிச 30, 2013 | கருத்துகள் (245)
Advertisement
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

பட்டுக்கோட்டை: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (245)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shivarama Subramanian - Chromepet,இந்தியா
31-டிச-201317:16:50 IST Report Abuse
Shivarama Subramanian இயற்கையை ஒட்டி வாழ அழைத்த நம் ஆழ்வார் அவர்கள் இறைவனடி ஏத்தினாலும்.. அவரின் பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம் அதுவே அவருக்கு நாம் அளிக்கும் சிறப்பு..
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
31-டிச-201315:55:58 IST Report Abuse
JAIRAJ நல்லெண்ணம் கொண்ட திறமையாளர் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி.
Rate this:
Share this comment
Cancel
Anandan - Dublin,அயர்லாந்து
31-டிச-201315:09:06 IST Report Abuse
Anandan அய்யா உமது உடல் இந்த நரகத்தை விட்டு போனாலும், நரகத்தையும் சொர்க்கம் ஆக்கிய உமது செயல் எம் மனதில் என்றும் நிலைத்து இருக்கும். ஆழ்வார் என பெயர் கொண்ட நீர் உண்மையிலயே ஆழ்வார், உம்மை அந்த சீனிவாசன் தன்னுள் ஆட்கொள்வான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X