திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு? விஜயகாந்திற்கு கருணாநிதி வலை

Updated : ஜன 01, 2014 | Added : டிச 31, 2013 | கருத்துகள் (66)
Advertisement
Vijayakanth, invite,Trichy, DMK, meet, திருச்சி, மாநாட்டு, அழைப்பு, விஜயகாந்த், கருணாநிதி, வலை

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, திருச்சியில், வரும் பிப்ரவரி, 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. மாநாட்டிற்காக, திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பிராட்டியூரில், 250 ஏக்கர் நிலத்தில், ஆறு லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தலும், 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 அடி உயரத்தில், பிரமாண்டமான மேடையும் அமைக்கும் பணி நடக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கும் வகையில், மேடைக்கு பின்னால், 10 அறைகள் கட்டப்பட உள்ளன. மேடை, பந்தல் அமைக்கும் பணியில் இரவு, பகலாக, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர், தி.மு.க.,வினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும், நான்கு மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறஉள்ளதால், இந்த மாநாட்டை பிரமாண்டமான மாநாடாக நடத்த, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. 'ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை, மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும்' என, கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில், கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஏற்றி, பலத்தை காண்பிக்க திட்டமிட்டுள்ளதால், சில தலைவர்களிடம் கூட்டணி இறுதி செய்வதற்காக, ஜரூராக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்தின் தே.மு.தி.க., இடம் பெற்றால், 'நாற்பதும் நமக்கே' என்ற, ஜெயலலிதாவின் சவாலை முறியடித்து விடலாம் என, தி.மு.க.,வினர் உறுதியாக நம்புகின்றனர். அதனால், 'இப்போதே கூட்டணி பற்றி பேசி விட்டால், நம் பேரத்திற்கு, தி.மு.க.,வினர் பணிய மாட்டார்கள்' என, இழுத்தடித்து வரும், தே.முதி.க., தலைவர் விஜயகாந்தையும், மாநாட்டிற்கு அழைக்க வேண்டும் என, கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 'தே.மு.தி.க., கூட்டணிக்கு வந்தால், மகிழ்ச்சியே' என, தெரிவித்துள்ள கருணாநிதியும், இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், சமீபத்தில் நடந்த போது, தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என, தே.மு.தி.க., - பா.ஜ., உட்பட, பல கட்சிகளின் தலைவர்களுக்கு, ஆதரவு கேட்டு, கருணாநிதி கடிதம் எழுதினார். அதேபோல், திருச்சி மாநாட்டிற்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இதற்கான, அழைப்பிதழ்கள் விரைவில் தயாராக உள்ளதாகவும் தெரிகிறது. 'பொங்கலுக்குப் பிறகு, திருச்சிக்கு வந்து, மாநாட்டுப் பணிகளை நேரில் பார்த்து வரப் போகிறார், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். மாநாட்டு பணியில் திருத்தங்கள் எதுவும் இருந்தால், சொல்வார். அதன்படி மாநாட்டுப் பணிகள் செய்து முடிக்கப்படும்' என்கின்றனர், திருச்சி தி.மு.க.,வினர்.


- நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201316:58:34 IST Report Abuse
Balaji Natarajan மாநிலத்திலும் மத்திய அரசில் இருந்த போது இந்த கெஞ்சல் இல்லயே ...தம் குடும்பத்தை முன்னிலை படுத்தி தமிழ் அரசு விழா .... எல்லாத்தயும் நடத்தி விட்டு இப்ப வந்து ஊரு ல வந்து கெஞ்சிகிட்டு .....என்ன பட்டும் திருந்த வில்லை வருந்த வில்லை ...."இன்றே இப்படம் கடைசி" நிலை தான் ...ஒன்னு திருந்தனும்/இனி அது நடக்கது ...காலம் கடந்து விட்டது எனவே வருந்தி தான் ஆகணும் வம்சமும் வருந்தனும் ....எத்தனை குடி கேட்டது இங்கு ....எத்தனை குடி அழிந்தது அங்கு ( இலங்கயில்)நெஞ்சு கொதிக்குது ....
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
31-டிச-201315:29:05 IST Report Abuse
Rangarajan Pg தலைவர் டாக்டர் கலைஞர் மிகவும் கஷ்டப்பட்டு, தீர்க்கமாக யோசித்து அரசியலில் காய் நகர்த்துபவர். இவர் நகர்த்திய நகர்தலில் பல காய்கள் கீழே விழுந்து காணாமல் போய் விட்டது. அந்த அளவுக்கு CLEAN JOB செய்ய கூடியவர் டாக்டரும் கலைஞருமான கருணா. பார்த்து கொண்டே இருங்கள். மாநாடு அன்று விஜயகாந்தை போல ஒருவரை பிடித்து வந்து மேடையேற்றி தொண்டர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களை குஷிபடுத்தி மக்களை அதிர்ச்சிகுள்ளாக்குவார் நம் அரசியல் ஞானி கருணா அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mani - chennai,இந்தியா
31-டிச-201315:25:13 IST Report Abuse
Mani ஒரு தொகுதியிலயவது டெபாசிட் கிடைக்குமா? இன்னமும் மக்களை வாத்து என்றுதான் அந்த குடும்பம் நினைக்கிறது. வாழ்க நிதி குடும்பம் வளர்க அவரது செல்வம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X