அன்று கெஞ்சியவர்கள் இன்று கொக்கரிக்கலாமா?

Added : டிச 31, 2013 | கருத்துகள் (6)
Share
Advertisement
மத்தியில், எந்தக் கட்சி அல்லது கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதன் பக்கம் சாய்ந்து கொள்வதை, தி.மு.க., வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த அணுகுமுறை, அரசியல் அரங்கில் எப்படி பார்க்கப்படுகிறது என, எதிரும், புதிருமாக இருக்கும், இரண்டு அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டோம். அவர்கள், வார்த்தைகள் மூலம் போட்ட, டிஷ்யூம் இங்கே:முதல் ஐந்தாண்டு காலம், பா.ஜ.,
அன்று கெஞ்சியவர்கள் இன்று கொக்கரிக்கலாமா?

மத்தியில், எந்தக் கட்சி அல்லது கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதன் பக்கம் சாய்ந்து கொள்வதை, தி.மு.க., வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த அணுகுமுறை, அரசியல் அரங்கில் எப்படி பார்க்கப்படுகிறது என, எதிரும், புதிருமாக இருக்கும், இரண்டு அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டோம். அவர்கள், வார்த்தைகள் மூலம் போட்ட, டிஷ்யூம் இங்கே:

முதல் ஐந்தாண்டு காலம், பா.ஜ., தலைமையிலான அரசிலும், அடுத்த, 10 ஆண்டுகள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும், அங்கம் வகித்து, தி.மு.க.,வினர் அதிகார சுகத்தை அனுபவித்தனர். லோக்சபா தேர்தல் நேரங்களில், கூட்டணியை விட்டு வெளியேறுவதை அந்தக் கட்சி, வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
எப்படியாவது, பதவி மற்றும் அதிகார சுகத்தை ருசிக்க வேண்டும் என்பதே, தி.மு.க.,வின் பிரதான நோக்கம். இலங்கை தமிழர் விவகாரத்தில், காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது எனக்கூறி, மத்திய அரசிலிருந்து வெளியேறிய தி.மு.க., கனிமொழியை எம்.பி.,யாக்க, காங்கிரஸ் தயவை நாடியது ஏன்?
சரி, நாங்கள்தான் துரோகம் செய்து விட்டோம்; நீங்கள் கனிமொழியின் எம்.பி., பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்க வேண்டாமா.
இதை கேட்டால், ராஜ்யசபா தேர்தலில், கனிமொழிக்கு ஓட்டுப்போட்ட, காங்கிரசின், ஐந்து எம்.எல்.ஏ.,க்களும், தி.முக., ஆதரவுடன் எம்.எல்.ஏ., ஆனவர்கள். அவர்கள் எல்லாம் ராஜினாமா செய்வார்களா?, என, சாமர்த்தியமாக பேசுகிறார் கருணாநிதி.
தி.மு.க., ஆதரவுடன், காங்கிரசார் ஐந்து பேர் எம்.எல்.ஏ., ஆனார்கள் என்றால், தி.மு.க.,வின், 23 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரஸ் ஆதரவுடன் எம்.எல்.ஏ., ஆனவர்கள்தானே. அவர்கள் ராஜினாமா செய்வார்களா என, தி.மு.க., யோசித்து
சொல்லட்டும். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியதால், நிம்மதி அடைந்துள்ளோம்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக காங்., முன்னாள் தலைவர்

மத்தியில், 10 ஆண்டுகளாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடந்திருக்கிறது. இரு ஆட்சிகளிலும், காங்கிரஸ் மைனாரிட்டி அரசாகவே இருந்தது. கூட்டணிக் கட்சிகளின் பலத்துடனே, ஆட்சி நடந்தது.
மைனாரிட்டியாக இருக்கிறோம். நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை என, சொல்லி, மற்றவர்கள்,
ஆட்சி அமைக்க, காங்கிரஸ் வழி விட்டிருக்கலாமே. ஐ.மு.கூட்டணி வெற்றி பெற்றதும், சோனியாவை பிரதமராக்க வேண்டும். அதற்கான தகுதிகள் நிறைந்தவர் என, எந்த காங்கிரஸ்காரரும் கூறவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதியே அறிவித்தார். ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்ய, காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லாதபோது, ஜெயந்தி நடராஜன் யார் ஆதரவில் எம்.பி.,யானார். 19 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டதால்தான், அவர் எம்.பி.,யானார். இதற்கு கைமாறாக, இப்போது, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தான், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்டு உள்ளனர். இன்னும், 15 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை, காங்கிரஸ் தி.மு.க.,வுக்கு அளிக்க வேண்டும். 2014 மார்ச்சில் நடக்கும், ராஜ்யசபா தேர்தலிலும், 2016ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலிலும், இந்த கைமாறை, தி.மு.க.,வுக்கு, காங்கிரஸ் செய்ய வேண்டும்.
அந்தளவுக்கு இன்று காங்கிரசிடம் எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. இந்த கணக்கு தெரியாமல்தான், கனிமொழியை ராஜினாமா செய்யச் சொல்லி அபத்தமாக பேசி வருகின்றனர்.

கே.பி.ராமலிங்கம் தி.மு.க., - எம்.பி.,

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devaraj - moolekaodu ,சுரிநாம்
31-டிச-201319:57:31 IST Report Abuse
Devaraj எவ்வளவு அடிச்சாலும் நல்லா தான்கிறான்பா தம்பி ரொம்ப நல்லவன். திமுக எப்பிடி அடிச்சாலும் காங்கிரஸ் கட்சி காரன் வாய் திறந்து பேச மாட்டான். ஏனென்றால் மேலிடம் உதைக்கும் என்கிற பயம். இத்தாலி அம்மா தீடீரென கருணாவுக்கு சால்வை போற்றி வணக்கம் என்று சொல்லி விடுவார்கள் எனவே இவர்கள் பேசுவதை ஒரு பேச்சாக எடுக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
Rate this:
Cancel
Arichandran - From Singapore  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201319:43:33 IST Report Abuse
Arichandran பிச்சை பாத்தி்ரம் ஏந்தி் வந்தேன்......... DMK and Congress. ...PTE LTD
Rate this:
Cancel
Prakash Muthusamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201315:59:10 IST Report Abuse
Prakash Muthusamy உனக்கு எனக்கு .... மக்களுக்கு? உங்களுக்கெல்லாம் எதற்கு பதவி? மக்களுக்கு சேவை செய்வதை தவிர எல்லா வேலைகளையும் செய்து கொண்டு இருக்கும் இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்களை முதலில் நாடுகடத்த வேண்டும், இல்லை இல்லை மற்ற நாட்டையும் கெடுத்து விடுவார்கள், குடியுரிமையை பறித்து பாஸ்போர்ட் மற்றும் சொத்துக்களை முடக்கி கூவம் ஆற்று குடிசைகளில் சிறையிட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X