பேக்கரிக்கு செல்லும் "கீ' கலெக்ஷன் கன ஜோர்!

Added : டிச 31, 2013
Share
Advertisement
( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்னபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.வெனிலா கேக், முந்திரி பக்கோடா சகிதமாக, சூடாக இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா"என்ன வரவேற்பு தடபுடலா இருக்கே, ஏதேனும் விஷேசமா என்ன,'' என்று சித்ரா கேட்டதும்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக, ஜெனீபர்
பேக்கரிக்கு செல்லும் "கீ' கலெக்ஷன் கன ஜோர்!

( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்னபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
வெனிலா கேக், முந்திரி பக்கோடா சகிதமாக, சூடாக இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா
"என்ன வரவேற்பு தடபுடலா இருக்கே, ஏதேனும் விஷேசமா என்ன,'' என்று சித்ரா கேட்டதும்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக, ஜெனீபர் கேக் கொடுத்து அனுப்புனா. அதுதான், வெனிலா கேக். முந்திரி பக்கோடா, நானே புத்தகத்தை பார்த்து செஞ்சது. இஞ்சி டீ காரசாரமா இருக்கட்டுமேன்னு கொடுத்தேன். அவ்ளோ தான்,'' என மித்ரா நழுவப்பார்த்தாள்
"இல்லையே... நீ சொல்றதுல உள்குத்து வேலை இருக்கிற மாதிரி தெரியுதே,'' என, சித்ரா விடாப்பிடியா கேள்வி கேட்க, "டூவீலர்ல போறவங்களை நிறுத்தி, செக்-அப் செய்றாங்களாம். ஏரியாவுக்கு தகுந்தமாதிரி வசூல் வேட்டை நடக்குதாம். லைசென்ஸ், ஆர்.சி., புக், இன்சூரன்ஸ் சரியா இருந்தா, டிபன் வாங்கித் தரச் சொல்றாங்களாம். இல்லைன்னா, வண்டியோட "கீ', பக்கத்துல இருக்கற பேக்கரிக்கு போயிருமாம். 300 முதல் 500 வரைக்கு கப்பம் கட்டிட்டு, "கீ'யை வாங்கிட்டு போகணுமாம். கடைக்காரங்க, கலெக்ஷன் தொகையை தனியா வச்சு, கணக்கு கொடுக்கணுமாம். மகாலட்சுமி புலம்புறா,'' என்று விளக்கினாள் மித்ரா
"ஓ... அங்கிருந்து வந்த கேக் தானா, இது; இதை சாப்பிடலாமா, வயித்தாலா போயிருமா?,'' என பயந்த சித்ரா, "லஞ்சமே வாங்க மாட்டோம்னு போலீஸ்காரங்க பல பேரு பீத்திக்கிறாங்களே; அதெல்லாம் டூப்பா...?,'' என அப்பாவியாய் கேட்க, "இன்னொரு கதை சொல்றேன்; அதை கேட்டு, மலைச்சுப் போயிடுவீங்க,'' என மித்ரா சொன்னதும், புருவத்தை உயர்த்தினாள் சித்ரா
"காங்கயம் பக்கத்துல அரிசி ஆலைக்காரங்ககிட்ட ஒரு கும்பல் பணத்தை கொள்ளையடிச்சிட்டு போச்சுல்ல... அதுல, ஆரம்பத்துல 23 லட்சம்னு போலீஸ்காரங்க சொன்னாங்க. அப்புறம், 22 லட்சமா குறைஞ்சுச்சு. கொள்ளை கும்பலை சேர்ந்த எல்லாத்தையும் பிடிச்சு, ஜெயில்ல போட்டுட்டாங்க. கொள்ளையடிச்ச கும்பல்கிட்ட மீட்டது 19 லட்சம்னு சொல்லி, திருப்பிக் கொடுத்திருக்காங்க. மிச்சத்த செலவு கணக்கு காட்டிட்டாங்க,'' என மித்ரா சொன்னதும், செலவு கணக்கா? அப்படின்னா? என சித்ரா கேட்க, "திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கிறாங்கள்ல, அவங்க, கார் எடுத்துக்கிட்டு ஊர் ஊரா சுத்துவாங்க; அதுக்கு செலவழிக்கிற தொகையை, இதுல நேர் செஞ்சிடுவாங்க. இதெல்லாம், போலீஸ் வட்டாரத்தில் சர்வ சாதாரணம். முழுசா ஏப்பம் விடாம, முக்கால்வாசி தொகையை திருப்பிக் கொடுத்தாங்களே, அதை நெனைச்சு பெருமைப்படுறாங்க,'' என்றாள் மித்ரா
"பொங்கல் கொண்டாட, ரேஷன் கடையில் 500 ரூபாய் கொடுக்கப் போறாங்களாமே,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா
"ரேஷன் கார்டே கெடைக்கறதில்லை; பொங்கல் பணம் எப்படி கிடைக்கும்,'' என புலம்பினாள் மித்ரா.
"ஏன், என்னாச்சு,'' என, சித்ரா கேள்வி எழுப்ப, "புது கார்டு கேட்டு போன வருஷம் 10 ஆயிரம் பேரு மனு கொடுத்தாங்க. அதுல, இரண்டாயிரம் பேருக்கு மட்டும் கார்டு வந்துருக்கு. மத்தவங்களுக்கு வருமா? வராதான்னு தெரியல. இந்த வருஷம் இதுவரைக்கும் ஏழாயிரம் பேருக்கு மேல மனு கொடுத்திருக்காங்க. இந்த பிரிவு ஸ்பெஷல் தாசில்தார், இந்த மாசம், ஜூடிசியல் டிரெய்னிங் போகப்போறாரு. அப்புறம், வேற போஸ்டிங் வாங்கிட்டு போயிடுவாரு. அடுத்து வர்ற தாசில்தார், இந்த மனுக்களை தொட்டு கூட பார்க்க மாட்டாரு. மனு கொடுத்தவங்களோ, கார்டு வந்துரும்னு நம்பி ஏமாந்துகிட்டு இருப்பாங்க,'' என மித்ரா சொன்னதும்
"திருப்பூர் மக்களை எப்படி எல்லாம் வதைக்கிறாங்க,'' என, நொந்தபடி, கிளம்பினாள் சித்ரா.
தட்டில், கேக், முந்திரி பக்கோடா, இஞ்சி டீ அப்படியே இருந்தன!


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X