கமுக்கமாய் முடிந்தது பேரம்... கை கொடுத்தது புள்ளி விவரம்| Dinamalar

கமுக்கமாய் முடிந்தது பேரம்... கை கொடுத்தது புள்ளி விவரம்

Added : டிச 31, 2013
Share
( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்) "அக்கா! ஸ்ட்ராங்கா ஒரு "பில்டர் காபி' போடு...அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன்,''போனில் வந்த மித்ராவின் அன்புக் கட்டளையை ஏற்று, சித்ரா "பில்டர்' இறக்கி வைத்திருந்தாள். அரை மணி நேரம் கழித்து வந்தவள், "சாரிக்கா! அதுக்குள்ளாற ஏதோ கோவில் திருவிழான்னு "டிராபிக்'கை
கமுக்கமாய் முடிந்தது பேரம்... கை கொடுத்தது புள்ளி விவரம்

( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)
"அக்கா! ஸ்ட்ராங்கா ஒரு "பில்டர் காபி' போடு...அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன்,''

போனில் வந்த மித்ராவின் அன்புக் கட்டளையை ஏற்று, சித்ரா "பில்டர்' இறக்கி வைத்திருந்தாள். அரை மணி நேரம் கழித்து வந்தவள், "சாரிக்கா! அதுக்குள்ளாற ஏதோ கோவில் திருவிழான்னு "டிராபிக்'கை "டைவர்ட்' பண்ணி விட்டாங்க; காபியைக் கொடு...!'' என்று கூறி, முகத்தைக் கழுவச் சென்றாள் மித்ரா.

"நான் சூடா காபி கொடுக்குறேன்; உங்கிட்ட சூடா என்ன இருக்கு?,'' ராகி பக்கோடாவையும், காபியையும் மித்ரா முன் வைத்து கேட்டாள் சித்ரா.


"இப்போதைக்கு சூடா இருக்குறது, ஆளுங்கட்சி மாநகர் மாவட்டத்துக்காரங்கதான்; பக்கத்துல இருக்கிற நீலகிரியிலயும், புறநகர்லயும் மாவட்டத்தை மாத்துறாங்க. இங்க மட்டும் ஒண்ணுமே நடக்கமாட்டேங்குதேன்னுதான் கொதிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


"ஆளுங்கட்சியில இன்னொரு மேட்டர் ஓடுது தெரியுமா... தனக்கு எதிரா, எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள்ன்னு நிறைய்யப்பேரு போர்க்கொடி தூக்குறதால, தனக்கு ஒத்தாசையா இருப்பார்ன்னுதான், வேலுமணிக்கு திரும்பவும் மாவட்டச் செயலாளர் பதவியை சிட்டி வி.ஐ.பி.,தான் வாங்கிக் கொடுத்திருக்கார்ன்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. நிஜமாவா இருக்கும்?,'' என்றாள் சித்ரா.


"இருந்தாலும் இருக்கும்...அவரோட "இன்புளூயன்ஸ்'சைப் பாத்து, உளவுத்துறையே ஒடுங்கிப்போயிருக்கே''என்றாள் மித்ரா.


"உளவுத்துறை போலீசை விடு...இந்த வி அண்ட் ஏ.சி., வீடியோ பைரஸி செல், நார்கோட்டிக்ஸ், புட்செல் இதெல்லாம் இருக்கா இல்லையான்னே தெரியலையே. எல்லா டிபார்ட்மென்ட்லயும் பயங்கரமா லஞ்சம் விளையாடுது; முன்னெல்லாம், மாசத்துக்கு ரெண்டு "டிராப்' இருக்கும்; இப்போ ஒண்ணுமே பண்றதில்லையே. எல்லாம் திருந்திட்டாங்களா? விஜிலென்ஸ்க்கும் மாமூல் கரெக்டா போயிடுதான்னு தெரியலை,''


"அதான...எனக்குத் தெரியல, சமீபமா ஒரு "டிராப்' கூட கேள்விப்படலையே,''


"அவுங்க மட்டுமா? இங்க இருக்கிற வீடியோ பைரஸி செல்தான், 4 மாவட்டத்துக்கு பொறுப்பு. எங்க பார்த்தாலும், திருட்டு "விசிடி' சீரழியுது; டிரெயின்ல கூவிக்கூவி விக்கிறான்; கோயம்புத்தூர் டி.எப்.ஓ., ஆபீசுக்கு ஒருத்தன் அடிக்கடி வந்து, புதுப்புது "விசிடி'யா வித்துட்டுப் போறான். எவனையும் பிடிக்கிறதில்லை; கடைகள்ல இருந்தும், ஏஜன்சிகள்ல இருந்தும் காசு கொட்டுது. மாசாமாசம் ஆபீசுக்கே 5 லட்ச ரூபா மாமூல்வருதாம்,'' என்றாள் சித்ரா.


"ஆமாக்கா! நீ சொல்றது உண்மைதான். சிட்டிக்குள்ள காலேஜ் ஏரியாக்கள்ல கஞ்சா வாடை தூக்குது. நார்கோட்டிக்ஸ் போலீஸ் என்னதான் பண்றாங்களோ? ரேஷன் கடைகள்ல இருந்து, பட்டப்பகல்லயே அரிசி, பருப்பு எல்லாம் கடத்துறாங்க; புட்செல் போலீசும் தூங்குது,'' என்றாள் மித்ரா."மது விலக்கு போலீசை விட்டுட்டியே? அன்னிக்குப் பேசுனோமே...ஒரு இன்ஸ்பெக்டரைப் பத்தி; அவரைத் தூக்கிட்டாங்க தெரியுமா?,'' என்றாள் சித்ரா.


"அவரைத் தூக்கி என்ன பிரயோஜனம்? சிட்டி முழுக்க விடிய விடிய, சரக்கு வியாபாரம் ஜோரா நடக்குதே. லோக்கல் போலீஸ், மது விலக்கு எல்லாருக்கும்தான் மாமூல் போகுது,''


"உண்மைதான்டி! ஒரு இன்ட்ரஸ்ட்டிங் மேட்டர் கேள்விப்பட்டேன்...சிட்டிக்குள்ள இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன் "லிமிட்'ல 10 "பார்' இருக்குது; ஒவ்வொண்ணுல இருந்தும், அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு மாசாமாசம் 3 ஆயிரம் ரூபா "மாமூல்' கொடுத்திருக்காங்க. அவருக்கு அது பத்தலையாம். அந்த "பார்'காரங்களைக் கூப்பிட்டு, "ரமணா' விஜயகாந்த் ஸ்டைல்ல, "ஒரு குவாட்டர் விலை 70 ரூபா. நீங்க விக்கிறது 100 ரூபாய்க்கு. ஒண்ணுக்கு லாபம் 30 ரூபான்னா...' ஆரம்பிச்சு, பெரிய்ய்ய்ய....புள்ளி விபரம் சொல்லிருக்காரு. பயந்து போன "பார்'க்காரங்க, "அய்யா! அஞ்சாயிரமே கொடுத்துர்றோம்'ன்னு ஒத்துக்கிட்டாங்களாம்,''


சித்ரா சொன்ன தகவலைக் கேட்டு, விழுந்து விழுந்து சிரித்த மித்ரா, தன்பங்கிற்கு ஒரு போலீஸ் மேட்டரைச் சொன்னாள்.


"சிட்டிக்குள்ளே "லேண்ட்' பிரச்னைக்கு "கம்பிளைன்ட்' கொடுக்கப்போனா, அங்க இருக்கிற போலீஸ் ஆபீசர், "இந்த "லேண்ட்'டை காப்பாத்திக் கொடுத்தா, உங்களுக்கு இவ்வளவு கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்கும்?'னு கேக்குறாரு. அதுவும் காசு கேக்குறதில்லை; அங்க ஒரு "சைட்' வாங்கிக் கொடுங்க, அதுல ரெண்டு "சென்ட்'டை இந்த பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணிக்கொடுங்கன்னு கேக்குறாராம்,'' என்று சொல்லும்போதே, அவளது மொபைலில், "முத்து மணி மாலை....' என்று பாட்டு அழைத்தது; எடுப்பதற்குள் "கட்' ஆனது.


"சொன்னது மாதிரியே ரெண்டு "புளோரை' இடிச்சிட்டாங்களே...!,'என்றாள் சித்ரா.


"அதுல பிரச்னை இல்லையே. மத்த ரெண்டு "புளோரை' இடிக்கணும்னு நினைச்சா இடிக்கலாம்; காப்பாத்த நினைச்சா காப்பாத்தலாம்; அதுக்குதான் இப்போ, பெருசா பேரம் நடக்குதுன்னு பேச்சு,'' என்ற மித்ரா, "சரி! நான் கௌம்புறேன்; அட்வான்ஸ் ஹேப்பி நியு இயர்!,'' என்று கை காட்டிக் கிளம்பினாள்.
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X