இறந்தவருக்கு வந்த "மெமோ' ; அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்"

Added : டிச 31, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)"புத்தாண்டு நேரத்துல இலவச பொருட்கள் வாங்கியாச்சுன்னு, ரெண்டாவது மண்டலத்துல ஒரே ஜாலியா இருக்காங்க,'' என்றபடி, ஹாலுக்குள் நுழைந்தாள் மித்ரா."ஜாலி இருக்கட்டும்; விழா செலவையும் மக்கள் தலையில் கட்டிட்டாங்களாமே. அதைப்பத்தி ஏதாச்சும் தெரியுமா?,'' என்று கேட்டாள்
இறந்தவருக்கு வந்த "மெமோ' ; அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்"

( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)
"புத்தாண்டு நேரத்துல இலவச பொருட்கள் வாங்கியாச்சுன்னு, ரெண்டாவது மண்டலத்துல ஒரே ஜாலியா இருக்காங்க,'' என்றபடி, ஹாலுக்குள் நுழைந்தாள் மித்ரா.
"ஜாலி இருக்கட்டும்; விழா செலவையும் மக்கள் தலையில் கட்டிட்டாங்களாமே. அதைப்பத்தி ஏதாச்சும் தெரியுமா?,'' என்று கேட்டாள் சித்ரா.
"அட, நானும், அதைத்தான் சொல்லவந்தேன். 17, 29, 30 என மூன்று வார்டுகளில் மிக்ஸி, கிரைண்டர், பேன் கொடுத்தாங்க. பயனாளிகளிடம் டோக்கன் கொடுக்கும்போதே, 150 ரூபாய் வாங்கிட்டாங்களாம். "கவர்மென்ட் இலவசமா கொடுக்குது; ஒங்களுக்கு எதுக்கு பணம் கொடுக்கணும்'னு பப்ளிக் கேட்டிருக்காங்க. விழா செலவுக்காக கவுன்சிலர் வாங்கச் சொன்னாருன்னு, கட்சிக்காரங்க வாங்கியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"கவர்மென்ட் ஆபிசுல பதிவேட்டை ஒளிச்சு வைச்சிட்டாங்களாம்,'' என்று அடுத்த தகவலுக்கு தாவினாள் சித்ரா.
"ஏன், என்னாச்சு? வழக்கமா பைலை காணலைன்னு தானே சொல்லுவாங்க. பதிவேட்டை எதுக்கு ஒளிச்சி வைக்கிறாங்க. இது, எந்த அலுவலகத்துல நடந்த கூத்து. கொஞ்சம் விளக்கமா சொல்லேன்,'' என, மசாலா டீயை உறிஞ்சியபடி, கேட்டாள் மித்ரா.
"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, மன்னார்குடியில் இருந்து திருப்பூர் வந்த அரசு பஸ், படியூர் பக்கத்துல, ரோட்டோரத்துல நின்ற லாரி மீது மோதியிருச்சு. பஸ்சில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கண்டக்டர், ஸ்பாட்டிலேயே இறந்துட்டாரு. இது தெரியாம, அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகள், அவருக்கு மெமோ அனுப்பியிருக்காங்க. அதுல,"நீங்கள் பணியில் இருந்தபோது, டிக்கெட் கொடுக்கும் மெஷினை தொலைச்சிட்டீங்க. அதுக்கு "பெனால்டி' கட்டணும்னு,' குறிப்பிட்டிருக்காங்க. அதை படித்துப்பார்த்த, சம்பந்தப்பட்ட பிரிவு ஊழியர்கள், திருப்பூரை சேர்ந்த அதிகாரிகளிடம் விவரத்தை சொல்லி, மெமோ அனுப்பிய உயரதிகாரி பார்வைக்கு திருப்பிஅனுப்பிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
"அப்ப, ஒரு ஊழியர் இறந்த விஷயத்தை கூட உயரதிகாரிகளுக்கு சொல்லாம விட்டுட்டாங்களா? இதேமாதிரி, எத்தனை விஷயங்களை சொல்லாம மறைச்சிருப்பாங்க,'' என அப்பாவியாய் மித்ரா கேட்க, "இன்னொரு விஷயமும் நடந்திருக்கு. பொறுமையா கேளு. விபத்து நடந்தஅன்னைக்கு கண்டக்டர் கூட பணியில் இருந்த டிரைவர், என்ன நடந்துச்சுன்னு விளக்கம் கொடுக்கணுமாம். அவர், "பஸ் முன்புற வலதுபக்க கண்ணாடி சரியில்லாமல் சிலந்தி வலைபோல் இருந்துச்சு. அதை மாத்தச் சொல்லியிருந்தேன்; மாத்தலை. அதன் காரணமாக, நைட்டுல சரியா கவனம் செலுத்த முடியலை,'ன்னு பதிவேட்டில் எழுதியிருக்காரு. அதை படித்துப்பார்த்த மத்த ஊழியர்கள், "குட்டு' வெளிப்பட்டு போயிருமேன்னு ரிஜிஸ்டரை ஒளிச்சு வச்சிட்டாங்களாம். இப்ப, மத்த வண்டிகளுக்கான "கம்ப்ளைன்ட்' எழுதுறதுக்கு வழியில்லாம இருக்காம்,'' என ஒரே மூச்சில் கூறிமுடித்தாள் சித்ரா.
மதிய நேரமாக இருந்ததால், ஓட்டலில் இருந்து வரவழைத்த "காம்போ' பிரியாணியை, சித்ராவுக்கு பரிமாறிக்கொண்டே, "இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்மூர்ல பெரிய கடை வீதின்னு ஒரு வீதி இருக்கு; இப்ப, குறுகலா, பிரியாணி கடை வீதியா மாறிடுச்சு. வழக்கமா, ரோட்டோரத்தை ஆக்கிரமிச்சு, அடுப்பு வச்சு சமைப்பாங்க. இப்ப, கவுன்சிலர் கமிஷன் கேட்குறாருன்னு புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
"கமிஷன் கொடுக்குறதும், வாங்கறதும் பெரிய விஷயமா? ஊர் உலகத்துல நடக்காததா?,'' என சித்ரா கேட்க, ""பிரியாணி கடைக்காரங்க, கமிஷனா பணம் கொடுக்க வேண்டியதில்லையாம். தினமும் ஒரு பிரியாணி பார்சல் கொடுத்தா போதுமாம். அதையும் கவுன்சிலர் வந்து வாங்க மாட்டாராம். அவரோட வீட்டுக்கு தெனமும் கொடுத்து அனுப்பனுமாம். அதுதான் இப்ப பிரச்னை. வியாபாரத்தை விட்டுட்டு, வீட்டுக்கு பார்சல் அனுப்ப முடியுமா? அதுக்குத்தான் கடைக்காரங்க கண்டபடி திட்டிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X