தமிழ்நாடு

மாவட்ட திட்டக்குழு அதிகாரி பணியிடங்கள் தோற்றுவிப்பு: வளர்ச்சி பணிகள் சிறக்க வாய்ப்பு

Updated : ஜன 01, 2014 | Added : ஜன 01, 2014
Advertisement
மாவட்ட திட்டக்குழு அதிகாரி பணியிடங்கள் தோற்றுவிப்பு: வளர்ச்சி பணிகள் சிறக்க வாய்ப்பு

திருப்பூர் : மாவட்ட திட்டக்குழுவுக்கு புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, நடப்பு நிதியாண்டு செலவினமாக, 10.55 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உதயமாகி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, மாவட்ட திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர், திட்டக்குழுவின் தலைவராகவும், கலெக்டர் துணை தலைவராகவும் பணியாற்றுகின்றனர். மாவட்ட ஊராட்சி செயலாளராக இருப்பவர், மாவட்ட திட்டக்குழுவின், திட்டமிடும் அலுவலராக பணியாற்றுகிறார்.
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு, கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு மாவட்ட திட்டக்குழுவுக்கான பணியிடங்கள் மற்றும் வாகனம் மற்றும்
நிர்வாக செலவுகளை அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் வெளியான அரசாணையில் (எண்: 155), அரியலூர், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டக்குழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட திட்டக்குழு பணிகளை மேற்கொள்ளும், திட்டமிடும் அலுவலருக்கு, தனியாக வாகனமும் வழங்கவும், செலவுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட திட்டக்குழு பணிகளை நிர்வகிக்க ஏதுவாக, தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் மற்றும் டிரைவர்கள் பணியிடமும்
தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட திட்டக்குழு தலைவர் சண்முகம் கூறுகையில், ""அரியலூர், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு, மாவட்ட திட்டக்குழு
பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, நிர்வாக செலவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
""இரண்டு ஆண்டுகளாக, மாவட்ட ஊராட்சி வாயிலாகவே திட்டக்குழு செயல்பட்டு வந்தது. புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அலுவலர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளதால், மாவட்ட திட்ட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X