பொது செய்தி

தமிழ்நாடு

'மறைநீர்' பயன்பாட்டை அறிந்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு

Updated : ஜன 03, 2014 | Added : ஜன 01, 2014 | கருத்துகள் (11)
Share
Advertisement
மதுரை:நாட்டில் 'மறைநீரை' அறிந்து, நீர்மேலாண்மையை கடைபிடித்தால், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம்.ஒரு பொருளுக்குள் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நீர், 'மறைநீர்' ஆகும். ஒரு கிலோ அரிசி என்பது 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீருக்குச் சமம். ஒரு கிலோ அரிசியை உருவாக்க இந்தளவு தண்ணீர் தேவைப்படுகிறது என பொருள். அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி
மறைநீர்,தண்ணீர் பிரச்னை

மதுரை:நாட்டில் 'மறைநீரை' அறிந்து, நீர்மேலாண்மையை கடைபிடித்தால், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம்.

ஒரு பொருளுக்குள் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நீர், 'மறைநீர்' ஆகும். ஒரு கிலோ அரிசி என்பது 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீருக்குச் சமம். ஒரு கிலோ அரிசியை உருவாக்க இந்தளவு தண்ணீர் தேவைப்படுகிறது என பொருள். அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மறைநீராக உள்ளது. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கும், வேளாண் சார் பொருட்களுக்கும் மறைநீர் தேவையாக உள்ளது.

வேளாண் பொருட்களைவிட, இதர பொருள் உற்பத்திக்கே, மறைநீர் பயன்பாடு அதிகம் உள்ளது. மழைநீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் பல தரப்பினரால் வீணடிக்கப்படுகிறது. மறுசுழற்சிக்கும் பயன்படுத்துவதில்லை. விவசாயத்தில் ஒவ்வொரு துளி நீரும் மறுசுழற்சிக்கு ஏதோ ஒருவகையில் வரும்.

மதுரை நீர்மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: நிலத்தடி நீரை பயன்படுத்துவோர், பயன்படுத்திய நீரைப் போல, இருமடங்கு நீரை தங்கள் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடியில் சேமிக்க வேண்டும். நீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சிக்கோ, மரம், புல் வளர்க்கவோ வழங்கலாம். காடுகள், மேய்ச்சல் நிலங்களை உருவாக்கலாம். ஒவ்வொரு வீடும் மழைநீர் சேமிப்பு கலனாக மாற வேண்டும். நீரின் தேவை, பொருட்களின் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப உற்பத்தி திட்டங்களை வகுத்தால், இதை சாதிக்கலாம், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDARAGOPAL.N.V. - salem city,இந்தியா
05-ஜன-201420:37:40 IST Report Abuse
SUNDARAGOPAL.N.V. தமிழ் நாட்டில் சுமார் 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு 20 லிட்டர் கேன் குடி நீரை ருபாய் 10 வீதம் , மாதத்திற்கு 6 கேன்கள் கொடுத்து குடி நீர் பிரச்சினை தீர வழி வகுக்கலாம்.கடல் நீரில் இருந்து 2 மெகா வாட் மின் உற்பத்தி செய்த பின் ஆர்வோ முறையில் ஒரு நாளைக்கு 10-20 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யலாம்.இந்த முறை இனை ரிசர்ச் டிஸ்க்ளோசர்.காம் என்ற இனைய தளத்தில் ,டிசம்பர் 2013 ஜர்னலில் வெளியிட்டுள்ளேன். நீரினால் பரவும் 20 வகை நோய்களை தடுத்து மக்களின் ஆரோக்யத்தைக் காக்க முடியும். கோடிக்கணக்கில் ஒரு லிட்டர் நன்னீர் ப ட்டேல்களை தினமும் தயார் செய்து பத்து ருபாய் வீதம் விற்று வருடத்திற்கு 3000 கோடிகளுக்கு மேல் அரசிற்கு வருமானம் கிடைக்கவும் செய்ய முடியும்.அரசின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகின்றேன் சுந்தரகோபால்.என்.வி.. 194/56,கிருஷ்ணன் கோவில் தெரு , சேலம்-636001. கைபேசி : 9444208960.. . .
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
05-ஜன-201410:23:33 IST Report Abuse
Rajarajan ஊருக்கு உபதேசம் செய்யறது இருக்கட்டும். இதுக்குன்னு இருக்குற அரசு துறை ஊழியர் என்ன ம...இரு பு....இங்கிட்டு இருக்கறாங்க. அவங்க வேலையே இத சரி பண்றது தான. சம்பளம் வாங்கறது இதுக்குதான. அவங்கள நிக்கவெச்சி செ....பால அடிக்கணும். மானம் கெட்டவனுங்க. நாட்டுக்கு துரோகம் செயற இவங்க எல்லாம் நாண்டுக்கிட்டு சாவலாம். பொது மக்கள் கஷ்டம் சரி பண்ணாத இவங்கெல்லாம், இருக்கவே வேண்டாம்.
Rate this:
Cancel
SINGA RAJA - Madurai,இந்தியா
02-ஜன-201413:25:48 IST Report Abuse
SINGA RAJA நீர் மேலாண்மையில் இன்னொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நீர் ஆதாரம் குறைவாக உள்ள நிலங்களைக்கொண்ட பகுதிகளில், நீரின் அளவிற்கேற்ற பயிர்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். தென்னை, பருத்தி மற்றும் கரும்பு உற்பத்திக்கான நீரின் தேவை அதிகப்படியானதாகும். இந்த விவசாயப் பொருட்களை நாம் நமது தேவைக்கு அண்டை மாநிலங்களிலிருந்து விலைகொடுத்து எளிதில் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், இந்த விளை பொருட்களின் உற்பத்திக்காக நாம் அதிகப்படியான நீரை செலவிட்டு வருகிறோம். நம் தமிழகத்தில் நீரின் உற்பத்தி ஆதாரங்கள் குறைவு. நீரின் பயன்பாட்டைக்கட்டுப்படுத்துவதன் மூலமாகவே, நமது மாநிலத்தின் எதிர்கால நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே, கரும்பு, பருத்தி, தென்னை போன்ற பயிர்களை நீர் ஆதாரம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே விவசாயம் செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும். வாழ்விடங்களின் குடி நீர் தேவையின் அளவை நீர் மேலாண்மைக்குழு ஆராய்ந்து அதற்கேற்ப விவசாய பயன்பாட்டை வழிமுறைப்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர் வற்றும்போது, பூமியில் வறட்சி ஏற்பட்டு நாளடைவில் பாலை வனமாகும் அபாயமிருக்கிறது. இன்று பல விவசாய நிலங்களில், நிலத்தடிநீர் பன்மடங்கு குறைந்து, கீழே சென்று விட்டது. நிலப்பயன்பாடும், நீர்ப் பயன்பாடும் குறித்த விழிப்புணர்வு ஒன்றே எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X