சென்னை:கொடநாட்டில் தங்கி இருந்து, அரசு திட்டங்களை துவக்கி வைப்பதால், முதல்வர் தங்கியுள்ள பங்களா, மினி தலைமைச் செயலகமாக மாறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர், 24ம் தேதி, கொடநாடு சென்றார். அவர் ஓய்வெடுக்க அங்கு செல்வதாக, கூறப்படும் குற்றச்சாட்டை தவிர்க்க, அங்கு இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.அரசு வெளியிடும் செய்தி குறிப்பிலும், 'கொடநாடு முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி' என்றே குறிப்பிடுகின்றனர்.கடந்த வாரம், ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக, அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம், அங்கு நடந்தது.
துணை மின் நிலையங்கள் திறப்பு, புதிய பஸ்கள் இயக்கம், போன்றவை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்தது.இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க, துறை அமைச்சர்கள், துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள், கொடநாடு செல்கின்றனர். இதனால், கொடநாடு முகாம் அலுவலகம், மினி தலைமைச் செயலகம் போல், செயல்படத் துவங்கி உள்ளது.அதிகாரிகள் அங்கு செல்வதால், தலைமைச் செயலகத்தில், துறை செயலர்களை பார்ப்பது அரிதாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE