காங்., நம்பும் கவர்ச்சி அறிவிப்புகள்: மோடி பிரசாரத்தை முறியடிக்க புதிய தந்திரம்

Updated : ஜன 02, 2014 | Added : ஜன 02, 2014 | கருத்துகள் (33)
Share
Advertisement
கடந்த, 2004 மற்றும், 2009ல் நடந்த, லோக்சபா தேர்தல்களில், தோல்வியை சந்தித்த, பாரதிய ஜனதா கட்சி, 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என, திட்டமிட்டு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, பிரதமர் வேட்பாளராக அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தை செய்து
Congress, glammour schemes,modi,காங்.,  கவர்ச்சி அறிவிப்புகள், மோடி பிரசாரம்

கடந்த, 2004 மற்றும், 2009ல் நடந்த, லோக்சபா தேர்தல்களில், தோல்வியை சந்தித்த, பாரதிய ஜனதா கட்சி, 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என, திட்டமிட்டு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, பிரதமர் வேட்பாளராக அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தை செய்து வருகிறது.மோடியை பிரதமர் பதவியில் எப்படியும் அமர்த்தி விட வேண்டும், அவருக்கு ஆதரவாக வீசும் அலையை சாதகமாக பயன்படுத்த வேண்டும் என, தமிழக பா.ஜ.,வினரும், 'வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை' என்ற பிரசாரத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் டில்லி மாநில தேர்தல்களில், பா.ஜ., பெரு வெற்றி பெற்றதும், அந்தக் கட்சித் தலைவர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. 'காங்கிரசை நிச்சயம் மோடி வீழ்த்துவார்; பிரதமர் நாற்காலியில் அமர்வார்' என, நம்புகின்றனர். அதனால், வரும் லோக்சபா தேர்தலில், புதுவிதமான அணுகுமுறைகளை பின் பற்றவும் தீர்மானித்து உள்ளனர்.இது ஒருபுறமிருக்க, டில்லி மாநிலத்தில், நடந்த சட்டசபை தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், துவக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, அதிக இடங்களைப் பிடித்து, காங்கிரசை படுதோல்வி அடையச் செய்துள்ளது.மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் எழுச்சி, காங்கிரஸ் மேலிடத்திற்கு, கடும் கவலையையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அதனால், பா.ஜ.,வை போல, காங்கிரஸ் கட்சி சார்பிலும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனேகமாக, இந்த மாத இறுதிக்குள், காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடிக்கு ஆதரவாக உருவாகியுள்ள அலையை முறியடிக்கவும், வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும், லோக்சபா தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையில், பல கவர்ச்சியான அறிவிப்புகளையும் வெளியிடவும் காங்., தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அதாவது, மானியக் குறைப்பு என்ற பெயரில், கடந்த சில ஆண்டுகளில், அமல்படுத்திய, ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ஒன்பது காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும் என்பதை, ஆண்டுக்கு, 12 ஆக உயர்த்துவது, ஏழைகள் அனைவரும் இலவச மொபைல் போன்கள் வழங்குவது, விவசாய கடன்கள் தள்ளுபடி, உர மானியத்தை மீண்டும் தொடர்வது மற்றும் மகளிருக்கான பல நலத்திட்டங்கள் என, மக்களை கவர்ந்திழுக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த அறிவிப்புகள் மூலம், தங்களின், 10 ஆண்டு கால ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களை மறைக்க முடியும் எனவும், வாக்காளர்களை காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட வைக்க முடியும் என்றும், காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது.கவர்ச்சி அறிவிப்புகளை, தயார் செய்யவும், அது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கவும், விரைவில், குழு ஒன்றையும், அமைக்க உள்ளது.மேலும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான, 'சீட்' வழங்கும் போது, ஊழல் கறைபடித்த நபர்களை, ஓரம் கட்டி, இளம் வயதினரை, புதியவர்களை அதிக அளவில் களமிறக்கவும் ராகுல் திட்டமிட்டு உள்ளார்.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
03-ஜன-201400:21:10 IST Report Abuse
jay முழியே சரி இல்ல ..
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
02-ஜன-201422:19:36 IST Report Abuse
mohan 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மாற்றுங்கள். நாடு முழுவதும் மரம் நட்டு அதை பாதுகாக்க செயல் படுத்துங்கள். மழை நன்றாக பெய்யும், விலை வாசி குறையும்....
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
02-ஜன-201422:18:02 IST Report Abuse
mohan எல்லாம் சரிதான், எல்லா கவர்ச்சியை அறிவித்து விட்டு, அரிசி கிலோ 1000 ரூபாய் என்று சொல்ல போகின்றனர். அப்பொழுது மக்கள் என்ன செய்வர்.. ஏற்கனவே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினால் இந்தியா தலை கீழாக போய் கொண்டு இருக்கிறது.... ஏற்கனவே செல் போனினால், பல நிறுவனகள் சரிவர இயங்க முடிவதில்லை.... பல தனியார் நிறுவனகள், அதிக அளவில் செலவு செய்து ஆட்களை தேர்ந்தேடுப்பர். நல்ல பயிற்சியும் கொடுப்பார். கடைசியில், அடுத்த கம்ம்பெனியில் 1000 ரூபாய் சம்பளம் அதிகம் என்றால் அங்கே போய்விடுவர். ட்ரைனிங் கொண்டுத்த நிறுவனம் என்ன ஆவது... இந்த சுழற்சி, செல் போன், வந்த பின்னர் மிக அதிகமாகி விட்டது... இதனால் உலகம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனகள் சரிவர இயங்க முடிவதில்லை. இது மட்டுமல்லாமல், அடிக்கடி இட மாறுதல் அடையும் நபரும் முன்னேறுவதில்லை. இந்த நிலையில் சாதாரண நிலையில் உள்ள மனிதர்கல்லுக்கு அனைவருக்கும் செல் போன் இலவசம் என்றால், நாடு குட்டி சுவர் ஆவது நிச்சயம்... சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாது... குற்ற செயல்கள் அதிகரிக்கும்....தனியார் நிறுவனங்கள் நடத்த முடியாது... இன்னும் பலவிசயங்கல் உள்ளன... ஆதலால் எந்த அரசு வந்தாலும், செல் போன் இலவசமாக கொடுக்காதீர்கள்.... நாட்டில் உள்ள அணைத்து மனிதர்களும், இந்தியா எனது தாய் நாடு, அதற்க்கு நான் கெடுதல் செய்ய மாட்டேன், தான் செய்யும் வேலையினால் எந்த ஒரு தனியார் மற்றும் அரசு நிறுவனம் பாதிப்டையாது என்கின்ற common standard மனப்பான்மை அடையும் வரை, செல் போன் மிக ஆபத்தான ஆயுதம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X