கீழே விழுந்தோம்; மீசையில் மண் ஒட்டவில்லையே...

Added : ஜன 02, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
'தமிழகம், புதுச்சேரி என, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும்' என, சமீபத்தில் நடந்த, பொதுக்குழுவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், அந்த அணியில் இடம் பெற்றுள்ள, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், அ.தி.மு.க., கூட்டணியில், 'சீட்' இல்லை என்ற, நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், 'கீழே விழுந்தோம்; மீசையில் மண் ஒட்டவில்லையே' என்ற ரீதியில், அந்தக்
கீழே விழுந்தோம்; மீசையில் மண் ஒட்டவில்லையே...

'தமிழகம், புதுச்சேரி என, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும்' என, சமீபத்தில் நடந்த, பொதுக்குழுவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், அந்த அணியில் இடம் பெற்றுள்ள, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், அ.தி.மு.க., கூட்டணியில், 'சீட்' இல்லை என்ற, நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், 'கீழே விழுந்தோம்; மீசையில் மண் ஒட்டவில்லையே' என்ற ரீதியில், அந்தக் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். அதேநேரத்தில், தி.மு.க.,வினரோ, 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என, ரோஷமாக இல்லாமல், 'கதவு திறக்கட்டும்; அதுவரை காத்திருப்போம்' என, காத்திருப்பது கேவலமில்லையா என, விமர்சிக்கின்றனர். இதுதொடர்பாக, இரு தலைவர்கள் போட்ட, 'டிஷ்யூம்' இதோ:
அ.தி.மு.க., கூட்டணியில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில், எந்த மாற்றமும் கிடையாது. சட்டசபை தேர்தலில் உருவான கூட்டணி, ராஜ்யசபா தேர்தலிலும் தொடர்ந்தது; லோக்சபா தேர்தலிலும் தொடரும். அ.தி.மு.க., சார்பில் நடந்த, ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழாவில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்றனர். அ.தி.மு.க., பொதுக்குழுவில், 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், முதல்வர் ஜெ., பேசியுள்ளார். அதனால் கம்யூ., கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்ற அர்த்தமில்லை. முதல்வர் எங்களோடு இன்று வரையில் இணக்கமாகத்தான் இருக்கிறார் என்பதற்கு, ஒரே சாட்சி - எங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர், நல்லக்கண்ணுவின் பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்துச் சொன்னதுதான். ஆளுங்கட்சியுடன் கூட்டணி உருவாவதற்கு, எதிர்கட்சிகள் தடையாக இருக்கும் என்ற அர்த்தத்தில், 'சில கட்சிகள் சதி செய்கின்றன' என, தா.பாண்டியன் கூறியுள்ளார். எங்கள் தரப்பில் யாரை நினைத்து, குற்றச்சாட்டு வைக்கிறோம் என்பது, அந்த காரியத்தில் ஈடுபட்டவர்களுக்கு தெரியும். மத்திய அரசை அகற்றுவதிலும், இலங்கை தமிழர்கள் நலன் காப்பதிலும், அ.தி.மு.க.,வுக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவாக உள்ளன. சட்டசபையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டு வந்த தீர்மானங்களை, நாங்கள் ஆதரித்துள்ளோம். மத்திய அரசின் விலைவாசி உயர்வை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.

சி.மகேந்திரன், மாநில துணை செயலர். இந்திய கம்யூ.,
மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடை பிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள். '40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிடும்' என, முதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்தும், 'ஒரு சில கட்சிகள் எங்கள் கூட்டணியை பிரிக்க சதி செய்கின்றன' என, பூசி மெழுகுகிறார், தா.பாண்டியன். அவருக்கு தைரியம் இருந்தால், எந்தக் கட்சி சதி செய்கிறது என, சொல்ல வேண்டும். 'கம்யூனிஸ்ட்களை உண்டியல் கட்சிகள்' என, விமர்சித்தவர், ஜெயலலிதா. கூட்டணி கட்சிகளை, தி.மு.க., தலைமை மதிக்கும்; ஒரு கட்சிக்கு வாக்குறுதி கொடுத்து விட்டால், அதை செயல்படுத்தி காட்டும். டி.கே.ரங்கராஜனுக்கும், டி.ராஜாவுக்கும் ராஜ்யசபா எம்.பி., வழங்கியது தி.மு.க., தலைமையே. இதையெல்லாம் தா.பாண்டியன் மறந்து விட்டு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என, பேசக் கூடாது. இலங்கை தமிழர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மீனவர் பிரச்னை, சேது சமுத்திர கால்வாய் திட்டம் போன்றவற்றில், காங்கிரஸ் செய்த துரோகத்தை தட்டி கேட்டு, மத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக, இரண்டு முறை, தி.மு.க., ஆட்சியை இழந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அந்த பயத்தில் தான், தா.பாண்டியன் புலம்புகிறார் போலும்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தி.மு.க., வழக்கறிஞர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
02-ஜன-201413:03:00 IST Report Abuse
N.Purushothaman தி.மு.க என்னமோ கம்யுனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்யாதது போல் சீன் போடுவது சரியான காமடி....தி.மூ.க வின் கடை தரப்ப்பிற்கு காரணமே அவர்கள் செய்த ஊழலின் பாரத்தை மற்ற கட்சிகளுக்கும் பிரித்து கொடுப்பது தான்... இன்றைய அளவில் அதற்க்கு சிலரே ஏமாறலாம்...பலர் ஏமாற வாய்ப்பு இல்லை....
Rate this:
Cancel
TIRUVANNAMALAI Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
02-ஜன-201401:55:45 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran உண்மையான கம்யூனிசம் தோழர் ஜீவா காலத்தோடு சரி
Rate this:
Murugu - paris,பிரான்ஸ்
02-ஜன-201412:13:47 IST Report Abuse
Muruguபொதுகுழுவில் 40 தொகுதிகளிலும் போட்டி இடுவது என்பதோடு கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஜெவுக்கு அதிகாரம் கொடுத்தும் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.ஆக கூட்டணி உண்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X