முந்தைய காங்., அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை: கெஜ்ரிவால் உறுதி

Updated : ஜன 03, 2014 | Added : ஜன 03, 2014 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி சட்டசபையில், நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்கிரஸ் ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' அரசு வெற்றி பெற்றது. எனினும், ''முந்தைய காங்., ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்; ஊழல்வாதிகளை தப்ப விட மாட்டோம்,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.மொத்தம், 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட, டில்லி சட்டசபைக்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்,
Aam Aadmi Party, win,trust vote, கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி

புதுடில்லி: டில்லி சட்டசபையில், நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்கிரஸ் ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' அரசு வெற்றி பெற்றது. எனினும், ''முந்தைய காங்., ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்; ஊழல்வாதிகளை தப்ப விட மாட்டோம்,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
மொத்தம், 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட, டில்லி சட்டசபைக்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்க தேவையான, 36 இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, தேர்தலுக்கு முன் வரை, தங்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்க, காங்., கட்சி ஆதரவு அளித்தது. அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராகவும், அவர் கட்சியை சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். டில்லி மக்களுக்கு, தினமும், 667 லிட்டர், இலவச குடிநீர், மின் கட்டணம் பாதியாக குறைப்பு போன்ற, அதிரடியான பல அறிவிப்புகளை, முதல்வர் கெஜ்ரிவால், அடுத்தடுத்து வெளியிட்டார். இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, நேற்று, டில்லி சட்டசபை கூடியது. டில்லி மாநில அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான, மணீஷ் சிசோடியா, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ''நாங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்ல; மக்களின் பிரதிநிதிகள். ஆட்சி அமைப்பதற்காக, எந்த சமரச முயற்சியிலும், நாங்கள் ஈடுபடவில்லை. நேர்மையான அரசியலையும், நிர்வாகத்தையும், மக்களுக்கு கொடுப்பதற்காகவே, ஆட்சி அமைத்துள்ளோம்,'' என்றார். பின், தீர்மானத்தின் மீது, விவாதம் நடந்தது.

எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ஹர்ஷவர்த்தன் பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ள திட்டங்கள், ஏமாற்றம் அளிக்கின்றன. டில்லி மக்கள், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். ஆனால், காங்கிரசின் ஊழலை ஒழிக்கப் போவதாக கூறிய கெஜ்ரிவால், அந்த கட்சியின் ஆதரவுடன், முதல்வராகியுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நெருக்கடி, ஆம் ஆத்மிக்கு ஏற்பட்டது ஏன்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

காங்., சார்பில் பேசிய, அரவிந்தர் சிங் லவ்லி, ''ஆம் ஆத்மி அரசுக்கு, எங்களால் எந்த ஆபத்தும் வராது. எனவே, எந்த ஒரு முடிவையும், அவசரமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. டில்லி மக்கள் மீது, மீண்டும் ஒரு தேர்தலை திணிக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் தான், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்தோம்,'' என்றார்.

இறுதியாக, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்துக்கு பதில் அளித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: ஊழலை ஒழித்து கட்டுவது தான், ஆம் ஆத்மி கட்சியின் லட்சியம். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும், ஆம் ஆத்மி தான். அரசியல் கட்சி துவங்குவோம் என, ஒருபோதும் நாங்கள் நினைத்தது இல்லை. சுதந்திரத்துக்கு பின், இந்த நாட்டை ஆண்ட கட்சிகள், ஊழலை ஒழிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலும், முக்கியமான அரசியல் கட்சிகள், எங்களுக்கு சவால் விட்டதாலும் தான், கட்சி துவங்கினோம். இதனால் தான், சாமானியர்களான நாங்கள், தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. டில்லி சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சிக்கு, மக்கள் ஆதரவு அளித்தனர். இதை, இந்திய அரசியலின் அதிசயம் என்றே கூறலாம். எனக்கு, கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், தேர்தலுக்கு பின், அந்த நம்பிக்கை வந்து விட்டது. உண்மை, எப்போதும் தோற்காது என்ற நம்பிக்கை வந்து விட்டது. டில்லியில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், எங்களின் குறிக்கோள். ஊழல்வாதிகளை, தப்பிக்க விட மாட்டோம். டில்லியில், முந்தைய ஆட்சியாளர்கள் செய்த முறைகேடுகள் குறித்து விசாரிப்போம். இவ்வாறு, கெஜ்ரிவால் பேசினார். பின், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஆம் ஆத்மியின், 28 எம்.எல்.ஏ.,க்கள், காங்., கட்சியை சேர்ந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள், ஐக்கிய ஜனதா தளம், எம்.எல்.ஏ., ஆகியோர், அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதையடுத்து, 37 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன், நம்பிக்கை ஓட்டெடுப்பில், ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. பா.ஜ.,வின், 31 எம்.எல்.ஏ.,க்களும், அதன் கூட்டணி கட்சியான, சிரோன்மணி அகாலி தளத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.,வும், தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்தனர்.
சபாநாயகர் பதவிக்கு பா.ஜ., மனு:

டில்லி மாநிலத்தில், காங்கிரஸ் ஆதரவுடன், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்துள்ளது. புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மூத்த எம்.எல்.ஏ., ஜகதீஷ் முக்திக்கு, அழைப்பு விடப்பட்டது; அவர், அதை ஏற்க மறுத்து விட்டார். இதனால், காங்., கட்சியை சேர்ந்த, மதீன் அகமது, தற்காலிக சபாநாயகராக இருந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பா.ஜ.,வின் ஜகதீஷ் முக்தி, நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மெட்ரோ ஊழியர்கள் போராட்டம்:

டில்லி, மெட்ரோ ரயில் நிர்வாகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். பணிகளை நிரந்தரமாக்க கோரி, ஏராளமான, மெட்ரோ ரயில் ஊழியர்கள், நேற்று, முதல்வர் கெஜ்ரிவால் வீடு முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Erode kingcobra - erode,இந்தியா
03-ஜன-201421:42:37 IST Report Abuse
Erode kingcobra டெல்லி இன் விஜயகாந்த் இவர் ? காங்கிரஸ் இவரிடம் வாலாட்டினால் ,பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு இவர் கட்சி சின்னமான துடபத்தை ,காங்கிரஸ் மீது வீசுவர் .அப்போது பீஜி பீ இவருக்கு சப்போர்ட் கொடுக்கும் .
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201416:23:39 IST Report Abuse
Pugazh V பா ஜ க ஆதரவு தருவதாக சொன்னது என்று ஹர்ஷவர்தன் புது கரடி விடுகிறார் கவனித்தீர்களா? ப ஜ. கூடாரம் ஆடிப் போயிருக்கிறது. அவர்களின் வழக்கமான அமளியை ஆரம்பித்து விட்டார்கள், அதையும் கவனிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் முதல் சட்ட மன்ற கன்னிப் பேச்சு தொலைக்காட்சியில் பார்த்தேன். தெளிவாக உறுதியாக அழகாகப் பேசினார். யாரையும் திட்டவில்லை, குற்றப் படுத்தவில்லை. வெரி டீசன்ட்டாக நாகரீகமாகப் பேசினார்..
Rate this:
Alani Adana - hanilton,கனடா
03-ஜன-201421:31:54 IST Report Abuse
Alani Adanaதமிழ் மக்கள் இதயத்தால் யோசிக்கிறார்கள் .இவர் திடீரென்று பெரிய ஆள் ஆனது எப்படி ??பத்திரிகை .ஏன் இவை இவரை தூகுகின்றன .காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டு இரண்டாக பிரியும் அந்த காப்பில் காங்கிரஸ் ஜெயிக்கும் என்பது காங்கிரஸ்/மீடியா பிளான் .ஆனால் சொதப்பிவிட்டது .இவரால் ஒன்றும் செய்ய முடியாது மோடி மாத்திரம் வரகூடாது ,வந்தால் காங்கிரஸ் ,100 வருடங்கள் ஆன பத்திரிகைகளின் ஊழல் மாட்டும் .இது போல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் கருது எழுதுவதை விட்டு படி ...........
Rate this:
adalarasan - chennai,இந்தியா
03-ஜன-201422:14:17 IST Report Abuse
adalarasanஆம் ஆத்மி கட்சி, காங்கிரசுக்கு [லஞ்சம்] எதிராக பேசி, ஆட்சிக்கு வந்தது. இப்பொழுது காங்கிரசின் ஆதரவில் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது. பா.ஜா.க. அதிகபட்ச சீட்டுக்கள் இருந்தாலும், மற்றக்கட்சி எதுவும் ஆதரவு தராததால், எதிர்கட்சியாக செயலபடும் என்று அறிவித்தது. அதே சமயம், முதல் வோட்டு எடுப்பில், ஆட்சியை கவிழ்க்காது என்றும் கூறியது. அதற்காக, எந்த விதமான எதிர் கருத்தையும். கூறக்கூடாது என்று சொல்வது, ஜனநாயகத்திற்கு அழகு இல்லை இதுதான் உண்மை...
Rate this:
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
03-ஜன-201413:22:40 IST Report Abuse
Narayan ஊழல் எதிர்ப்பு என்ற போர்வையில் தொடங்கிய கட்சி, நாங்கள் புதியவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் இன்று ஊழல்களின் ஊற்று கண், 66 வருட ஒட்டுமொத்த குப்பைகளின் இமயம் காங்கிரஸ் உடன் சேர்ந்து இருக்கிறது. மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்லர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X