பதிவு செய்த நாள் :
கருத்துகள் (55)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

லோக்சபா தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா
எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது தொடர்பாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில், தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட்டுகள், தனிப்பெரும்பான்மை பெற வாய்ப்பு இல்லாததால், தமிழகம், புதுவை உட்பட, 40 லோக்சபா தொகுதிகளிலும், தங்கள் கட்சி வெற்றி பெற்றால், முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக

வாய்ப்புள்ளதாக, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையில், கடந்த சில நாட்களாக, முதல்வர் ஜெ., கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம், அவரை, 'வருங்கால பிரதமர்' என்றே, அ.தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். அத்துடன், அவரை வரவேற்று வைக்கும், பேனர்கள் மற்றும் விளம்பரங்களிலும், இதே வாசகங்கள் இடம் பெறுகின்றன.உற்சாகம்: இதை அங்கீகரிக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, 'அ.தி.மு.க., என்ற ரயில் வண்டி, தமிழகத்தில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை எக்ஸ்பிரசாக மாறி, இலக்கை அடைந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், 'ரெட் போர்ட்' எக்ஸ்பிரசாக மாறி, செங்கோட்டை என்ற இலக்கை அடையும். ரயில் புறப்பட, பச்சைக்கொடி காட்ட, தமிழகம் மற்றும்

புதுவை மக்கள் தயாராகி விட்டனர்' என்றார். இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம், பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, சமீபத்தில், விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, முதல்வர் ஜெ., தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என, விருப்பம் தெரிவித்து, கட்சி நிர்வாகிகள், 1,171 பேர் மனு அளித்தனர். இவர்களில் பலர், ரிசர்வ் தொகுதிகளுக்குக் கூட, ஜெயலலிதா பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

மற்ற தொகுதிகளை விட, திருச்சி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் தான், ஜெ., போட்டியிட விருப்பம் தெரிவித்து நிறையப் பேர் மனுக்கொடுத்துள்ளனர். அதனால், இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில், ஜெயலலிதா போட்டியிடுவார் என, கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் நம்புகின்றனர். அரசு நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு

Advertisement

செய்தால், தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அமைச்சர்கள் மற்றும் முதல்வருக்கு, இதில் விதி விலக்கு உண்டு. அதனால், முதல்வர் ஜெயலலிதா, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யாமலேயே, லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம். அதனால், 'கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட வேண்டும்' என, கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.ஆறு மாதம்: அதேநேரத்தில், வேறு சிலரோ, 'லோக்சபா தேர்தலுக்குப் பின், தேசிய அளவில் கட்சிகள் பெறும் இடங்கள் மற்றும் தமிழகத்தில், அ.தி.மு.க., பெறும் இடங்களைப் பொறுத்து, ஜெயலலிதா எம்.பி.,யாவது பற்றி முடிவு செய்யலாம். பிரதமர் பதவி ஏற்றபின் எம்.பி.,யாக ஆறு மாதம் அவகாசம் கிடைக்கும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்' என, கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்த விஷயத்தில், முதல்வரே இறுதி முடிவெடுக்க உள்ளார்.


- நமது சிறப்பு நிருபர் -


மேலும் சிறப்பு கட்டுரைகள் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-ஜன-201422:31:43 IST Report Abuse
Lion Drsekar மத்திய அரசில் அங்கம் வகிப்போர்கள் எதிர்கட்சியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் தேர்தல் நேரத்தில் மட்டுமே கத்துவார்கள், மற்ற நேரங்களில் நகமும் சதையுமாக இருப்பார்கள், இவர்கள் வீட்டுத் திருமணதிற்கு அவர்கள் வருவார்கள், அவர்கள் வீட்டுட்டு விழாக்களுக்கு இவர்கள் போவார்கள், ஒருவருக்கொருவர் சிரித்து பேசுவார்கள், ஒன்றாக உணவு உண்பார்கள், இப்படி ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதமே இல்லாமல் நாட்டின் நலனே முக்கியம் என்ற நிலையில் மிக மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள், அப்படி இருக்க??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201420:36:56 IST Report Abuse
Pugazh V ரிசர்வ் தொகுதியில் கூட ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனு கொடுக்கும் அளவு அதிமுக வில் பலரும் ரொம்பத் தெளிவான அரசியல் அறிவுடன் இருப்பது கேலிக்குரியது. கொட நாட்டில் முதல்வருக்கு கேம்ப் ஆபீஸ் அமைக்க ஆகும் செலவு எவ்வளவு என்று ஆர் ட்டி ஐ விண்ணப்பம் மூலம் கேட்கப்பட்டிருக்கிறது.பதில் வருமா என்று பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
03-ஜன-201420:11:53 IST Report Abuse
Natarajan Ramanathan ஜெயாவுக்கு இந்த ஜென்மத்தில் பிரதமராகும் வாய்ப்பு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
shivamurugan - toronto,கனடா
03-ஜன-201417:39:34 IST Report Abuse
shivamurugan பெங்களூர் தீர்ப்பு வந்தால் நீங்க போட்டி இட முடியாது
Rate this:
Share this comment
Cancel
shivamurugan - toronto,கனடா
03-ஜன-201417:32:28 IST Report Abuse
shivamurugan நீங்க எங்கு போட்டி இட்டாலும் தோல்வி தான்
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - mumbai,இந்தியா
03-ஜன-201416:39:47 IST Report Abuse
Ramakrishnan Natesan ஜெயாவுக்கு 40 MP கிடைத்தாலும் மீதி 234 MP எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை எந்த முட்டாளாவது 234 MP வைத்து கொண்டு 40 MP உள்ள ஜெயாவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் இந்த BASIC விஷயம் கூட தெரியாமல் 40 MP வைத்து பிரதமர் ஆவது கனவில் மட்டுமே முடியும்
Rate this:
Share this comment
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
03-ஜன-201416:37:36 IST Report Abuse
Sri Gugan இவர் பிரதமரானால் துக்ளக் ஆட்சிதான் நடைபெறும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜன-201416:21:20 IST Report Abuse
Pugazh V இந்தம்மா தமிழ்நாட்டில், எங்கே நின்னாலும் ஜெயிச்சுடுவாங்க, கண்டவர்களெல்லாம் கண்ட கண்ட இடங்களில் இரட்டை இலையில் போட்டியிட்டு ஜெயிக்கும் போது இவருக்கா பிரச்னை ? நம்ம கவலையெல்லாம் அடுத்த முதல்வர் யார்? சின்னம்மாவா?
Rate this:
Share this comment
Cancel
03-ஜன-201415:37:05 IST Report Abuse
கூடல்நகர் வெ இராசா இராமன் அகில இந்திய அளவில் மூன்றாவது அணி போட்டிபோடும் இடங்கள்: அ இ அ தி மு க + 301, கம்யுனிஸ்ட் + 70, முலாயம் கட்சி +80, தெலுகு தேசம் + 30, பிஜு ஜனதா தாள் + 25, அகாலி தள் +25 மற்றும் உதிரி கட்சிகள் ஆகா மொத்தம் 546 இடங்கள். இதில் தமிழக முதல்வர் முனைவர் மகாத்மா ஜெ ஜெயலலிதா அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார் என சூளுரைக்கிறேன். இது சத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
ponnambalam s - CHENNAI,இந்தியா
03-ஜன-201415:23:01 IST Report Abuse
ponnambalam s வரும் தேர்தல் ஒன்னும் , பஞ்சாயத்து தேர்தல் அல்ல............. "அல்லக்கை" அதிமுகவினர், ஒரு அடிமைத்தனத்தில், மட்டுமே இப்படி பிதற்றுகின்றனர்.......... "மோடியே" பிரதமர் என்று 96 % பேர் வாக்கு அளித்து உள்ளனர்............ இப்படிப்பட்ட சூழலில் , ......... எப்படி இந்த செய்தியை வெளியிடுகிறது ?...................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X