பதிவு செய்த நாள் :
கருத்துகள் (422)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: டில்லியில் இன்றைய நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் நரேந்திரமோடியை நேரடியாக தாக்கி பேசுகையில்: மோடி பிரதமரானால் நாட்டில் பேரழிவு ஏற்படும். ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற மோடிக்கு என்னை பற்றி விமர்சிக்க தகுதியில்லை என்றார். பிரதமராகும் தகுதி ராகுலுக்கு உண்டு என்றும், தான் 3 வது முறை பிரதமராக இருக்க மாட்டேன் என்றும்,தமது ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.
அடுத்த பிரதமர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்தவராகத்தான் இருப்பர் பலவீனமான பிரதமர் என்று பா.ஜ., கூறுகிறது. அப்படியானால் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றால்தான் பலம் வாய்ந்தவரா? அப்படி பிரதமர் இந்த நாட்டுக்கு தேவையில்லை. மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது.யார் அந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் ? என்றும் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் பொருளாதார சீர்குலைவு, உணவு பணவீக்கமும், தலைவிரித்தாடிய நேரத்தில் கூட அது குறித்து நாட்டு மக்களுக்கு வாய்திறந்து விளக்கம் தர முன்வராத பிரதமர் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். 4 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் அடுத்து வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் கலந்து கொள்ளும் 3வது செய்தியாளர்கள் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் பிரதமர் மன்மோகன்சிங் பதவியேற்றது முதல் 1,364 முறை மட்டுமே வாய் திறந்து பேசியுள்ளதாக ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதற்கு முன் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், 2010ம் ஆண்டு மே மாதமும் செய்தியாளர்களிடையே பிரதமர் உரையாற்றி உள்ளார்.
வேளாண் வளர்ச்சி : இன்றைய பேட்டியில்

பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்; நாடு எப்போதும் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நம்புகிறேன். சமீபத்திய
தேர்தலில் அதிக ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதை வரவேற்கிறேன். இது நமது ஜனநாயகத்தின் வெளிப்பாடு. தோல்வியை ஏற்று கொள்கிறோம்.

சமீபத்திய தேர்தலில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுள்ளது. உலக அளவிலான பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது இந்தியாவும் தப்ப முடியவில்லை. இதனை இந்தியா சிறப்பாக சமாளித்தது. எதிர்காலத்தில் நிலை சிறப்பாக அமையும் என நம்புகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டி உள்ளது; வேளாண் துறை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை சீராக்கிட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசு அரும்பாடு பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ளவர்களின் எண்ணிக்கை 13. 8 கோடியாக குறைந்துள்ளது.கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான அறிவியல் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். சிவில் சப்ளை துறையை முன்னேற்ற நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புக்களை நிதானப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். புதிய இளம் தலைமுறை தலைவர்கள் வரும் தேர்தலில் நல்லதொரு முன்னேற்றத்தை கொண்டு வருவர் என நான் நம்புகிறேன். இவர்கள் வழியில் நான் பணியாற்ற தயாராக இருக்கின்றேன். தொடர்ந்து நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர்: நான் 3 வது முறை பிரதமராக இருக்க மாட்டேன். பிரதமர் பதவிக்குரிய நபர் யார் என்று காங்கிரஸ் உயர்

Advertisement

மட்டம் உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பதவிக்காலம் முடியும் வரை நான் நீடிப்பேன். ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை.இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
இலங்கை தமிழர் நிலையில் முழுக்கவனம்:

* தெற்காசியாவில் அமைதி நிலவிட இந்தியா- பாகிஸ்தான் நல்லுறவு இருக்க வேண்டும். * 9 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் எப்படி இருந்தேனோ அதே போல் இப்போதும் இருக்கிறேன்.
பலவீனமான பிரதமர் என்று கூறப்படுகிறதே ?
*நான் ஏரளாமான பணிகள் புரிந்துள்ளேன். நேர்மையான ஆட்சியை தந்துள்ளேன். எனது திறமையை வரலாறு கூறும். *சோனியா எனக்கு எப்போதும் ஆதரவாகவேஇருந்தார்* பிரதமராகும் முழுத்தகுதி ராகுலுக்கு உண்டு*3 வதுமுறை ஐக்கிய முற்போக்கு கூட்டணியே ஆட்சி அமைக்கும்.
தினமலர் நிருபர் கேள்வி
* தினமலர் நிருபர் வெங்கட்ராமன் எழுப்பிய கேள்வி : இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதே ? தேவயானிக்கு அளித்த முக்கியத்துவம் கூட அளிக்கப்படவில்லையே ?நாள்தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனரே, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து வருகின்றனரே ?

பதில்: இப்படி கூறுவது சரியல்ல , இலங்கையில் வாழும் தமிழக மக்களின் நிலையில் முழுக்கவனத்தில் கொண்டுள்ளோம். பல்வேறு பேச்சுக்கள் நடத்தியுள்ளோம். வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இங்கு தமிழர் ஆட்சி ஏற்பட்டுள்ளதால் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இங்கு மத்திய அரசு இலங்கை தமிழர் விவகாரத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. மீனவர்கள் பிரச்னைக்கு இரு நாடுகளும் இணைந்து அமர்ந்து பேச்சு நடத்தி தீர்வு காணப்படும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (422)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201422:27:35 IST Report Abuse
g.s,rajan நமது இந்தியாவில் "நல்லவை பார்க்காதே ,நல்லவை செய்யாதே ,நல்லவை பேசாதே " இதுதான் தற்போது நம் பிரதமர் மன்மோகனின் பாணி ,சரிதானே ? ஜி.எஸ்.ராஜன்சென்னை .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201422:23:14 IST Report Abuse
g.s,rajan இதே இந்த மன்மோகனைத்தவிர வேறு யாராவது இருந்தால் நிச்சயம் ஒரு முழம் கயிறைத்தான் தேடுவார்கள் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201411:53:47 IST Report Abuse
g.s,rajan Any way bid Good bye to you Mr Manmohan singh,here after take a Long rest. g.s.rajan,chennai.
Rate this:
Share this comment
Cancel
Yuvaraj - Karur,இந்தியா
04-ஜன-201409:49:23 IST Report Abuse
Yuvaraj நீங்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட MP அல்ல. காங்கிரஸ் கட்சியால் பொருக்கி எடுத்த பொம்மை. உங்கள் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார மேதை, நல்ல மனிதர் என்று நிறைய மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இவ்வளவு அநாகரீகமாக பேசி அவர்களையும் எரிச்சல் அடைய வைத்துவிட்டீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sanjisanji - Chennai,இந்தியா
04-ஜன-201407:17:34 IST Report Abuse
Sanjisanji இவரின் இந்த அபாயகரமான பேச்சு இந்திய இறையாண்மையை, நீதித்துறையை, மக்களை கேவலப்படுத்தியுள்ளது .இவர் வாயினால் உதிர்ந்த இச்சொல் யாரேழுதிகொடுத்திருந்தாலும் எந்த பிரதமரும் செய்யாத மாபெரும் தவறை செய்து மீண்டும் அப்பதவியை கேவலப்பபுத்தியுள்ளார். இந்த காங்கிரஸ் நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். ஜெய் ஹிந்த் ........
Rate this:
Share this comment
Cancel
sugumaran - chennai,இந்தியா
04-ஜன-201406:17:45 IST Report Abuse
sugumaran மன்மோகன் சிங்க் இன்னும் அவராக இல்லை, ஒரு கீழ்தர அரசியல்வாதியை போல் யாரோ எழுதிகொடுத்ததை படிக்கும் இவர் இந்தியாவின் பத்து வருட சாபகேடு.
Rate this:
Share this comment
Cancel
C Suresh - Charlotte,இந்தியா
04-ஜன-201402:16:36 IST Report Abuse
C Suresh இத்தன கேவலமான ஒரு ஆளை உலகம் கண்டதில்லை. இந்தியாவின் வளர்ச்சியை கெடுத்த கேடு கெட்ட மனிதர்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Thirumavalavan - Oxford,யுனைடெட் கிங்டம்
04-ஜன-201401:43:51 IST Report Abuse
Natarajan Thirumavalavan சிங் பேசிட்டாரு ..எல்லாரும்..ஒரு முறை ஜோரா கை தட்டுங்கோ...
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
04-ஜன-201401:37:27 IST Report Abuse
John Shiva   U.K மோடி 1000 பேரை கொலை செய்தாரம்.இந்த போீரை பிரதமர் ஈழத்தில் 140,000 மேல் குழந்தைகள் உட்பட கொன்று குவித்தார் .இந்த போர் குற்றவாளிக்கு யார் தண்டனை கொடுப்பது .வரும் தேர்தலில் சோனியா பிரதமர் எல்லோரும் மண்ணை கவ்வுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
James Elango - Chennai,இந்தியா
04-ஜன-201400:37:12 IST Report Abuse
James Elango வாய் திறந்தா முத்து கீழ விழுந்திருமா? மூணு வருசத்துக்கு ஒரு தடவை தான் வாய் திறப்பீங்களோ? ஊமை கோட்டான் மாதிரி இருந்துகிட்டு ஊரை ஏமாத்தி இத்தனை வருஷம் ஒட்டியும் ராகுலுக்கும் சேவை செய்யனும் என்று நினைக்கிற உங்க மனசு யாருக்கு வரும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X