பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு ; ஜன.,10ம் தேதிக்கு தள்ளிவைப்பு?

Updated : ஜன 04, 2014 | Added : ஜன 04, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
சேலம்: நாடு முழுவதும், ஜன.,6ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு, வரும், 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜன.,1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, அக்.,1ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி, ஜன., 6ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். நாடு முழுவதும்,
வாக்காளர் பட்டியல் வெளியீடு ; ஜன.,10ம் தேதிக்கு தள்ளிவைப்பு?

சேலம்: நாடு முழுவதும், ஜன.,6ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு, வரும், 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜன.,1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, அக்.,1ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி, ஜன., 6ம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். நாடு முழுவதும், ஒரே நாளில் இந்த பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் பட்டியல் அச்சடிப்பு பணி முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

அதே வேளையில், மற்ற மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் பணி முழுமையடையவில்லை. அந்த பணிகளை விரைவாக முடிக்க, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால், நாளை(6ம் தேதி) வெளியிடப்பட இருந்த, வரைவு பட்டியல், 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குள், ஜன.,25ம் தேதி வழங்கப்பட வேண்டிய, வாக்காளர் அடையாள அட்டை பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், பிற மாநிலங்களில், அந்த பணிகள் முழுமையடையாத நிலை உள்ளது. அதனால், வரும், 10ம் தேதிக்கு, வாக்காளர் பட்டியல் வெளியீட்டை நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இறுதியான அறிவிப்பு இதுவரை வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - chennai,இந்தியா
04-ஜன-201418:07:41 IST Report Abuse
sathish ஏன் ஒரு குருபிட்ட மாதம் தான் வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறீர்கள், இந்த கணினி காலத்தில் எல்லா வேலை நாட்களிலும் பட்டியலை சரிபார்க்கலாமே, விடுபட்டு போனவர்களை வேலை நாட்களில் வந்து ஆதார் அட்டைக்கு எடுத்தது போல் பெயர்களை நீக்கவும், சேர்க்கவும் செய்யலாமே. ஏன் அதற்காக ஒரு நாள் மட்டும் செய்ய வேண்டும். மற்ற நாட்களில் வேலை இல்லயா. ஏன் என்றால். நான் இரு முறை மனு கொடுத்து விட்டேன். ஆனால் எனக்கு இன்னும் அட்டை வரவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X