யானை முகாமில் யானைகளை தாக்கிய கும்கி யானை

Updated : ஜன 04, 2014 | Added : ஜன 04, 2014 | கருத்துகள் (1) | |
Advertisement
மட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் யானை புத்துணர்வு முகாமில், மதம் பிடித்ததால் கும்கி யானை ஒன்று மற்ற யானைகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் கரையோரத்திலும், நெல்லித்துரை அருகேயுள்ள விளாமரத்தூர் பகுதியிலும் யானை புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற நஞ்சன்

மட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் யானை புத்துணர்வு முகாமில், மதம் பிடித்ததால் கும்கி யானை ஒன்று மற்ற யானைகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் கரையோரத்திலும், நெல்லித்துரை அருகேயுள்ள விளாமரத்தூர் பகுதியிலும் யானை புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற நஞ்சன் என்ற கும்கி யானைக்கு கடந்த ஒரு மாதமாகவே மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்நிலையில் இன்று பவானி ஆற்றில் குளித்த போது, கும்கி யானை, வனத்துறைக்கு சொந்தமான யானை ஒன்றை முட்டியது. இதனால் அந்த யானை காட்டிற்குள் சென்றது. பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஜான் என்ற யானையை கொம்பால் குத்தியது. இதனையடுத்து பாகன்கள் பட்டாசுகளை வெடித்தனர். பின்னர் சங்கிலியால் கட்டி இழுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TIRUVANNAMALAI Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-201408:21:46 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran கும்கி யானைக்கு மட்டும் அம்மா புத்துணர்வ கொஞ்சம் ஓவரா கொடுத்தி்ருப்பாங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X