பொது செய்தி

தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு ஆய்வு : ஆனந்த் குழுவுக்கு அவகாசம் நீட்டிப்பு

Updated : செப் 20, 2010 | Added : செப் 20, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : முல்லைப் பெரியாறுஅணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய, ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்., ஆனந்த் தலைமையில்  ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இதன்படி இந்தக் கமிட்டி ஆறு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்தக்குழுவின் ஆய்வுக் காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. கடந்த ஆறு மாத காலத்தில் இந்தக் குழு 2 முறை மட்டுமே கூடி

புதுடில்லி : முல்லைப் பெரியாறுஅணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய, ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்., ஆனந்த் தலைமையில்  ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இதன்படி இந்தக் கமிட்டி ஆறு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்தக்குழுவின் ஆய்வுக் காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. கடந்த ஆறு மாத காலத்தில் இந்தக் குழு 2 முறை மட்டுமே கூடி ஆ‌லோசித்துள்ளது. இதனை அடுத்து தற்போது இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கையை கால அவகாசம் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை வழக்கு விசாரணையும் வருகிற பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்து அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


முல்லைப் பெரியாறுஅணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க, 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த முடியாத வகையில், கேரள மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. "இந்தச் சட்டம்அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா' என, கேள்வி எழுப்பி தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் சட்ட ரீதியான கேள்விகளை எழுப்பியதால், இதை விசாரிக்க நீதிபதிகள் ஜெயின், சுதர்சன் ரெட்டி,முகுந்தகம் சர்மா, லோதா மற்றும் தீபக் வர்மா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அரசியல் சாசன பெஞ்ச் வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் குழுவுக்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரங்கராஜ் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
20-செப்-201021:32:09 IST Report Abuse
ரங்கராஜ் ஒரு பிரச்னையை தீர்க்க முடியாவிட்டால் ,ஒரு விசாரணை கமிசனையோ ,ஒரு குழுவையோ அமைத்து விட்டால் போதும் .வேண்டுமளவு காலத்தை நீட்டிக்கலாம்;;அது நீர்த்து போகுமளவுக்கு விட்டுவிடலாம்;;பிரச்னையின் தன்மையை பொறுத்து விசாரணை வேண்டும் ;எங்காவது எவனாவது குண்டு வைத்தாலோ ரயிலை கவிழ்க்க வைத்தாலோ இனி கவனம் முழுவதும் அங்கே கொஞ்ச காலம் ஓட்டுவதும் ,,சிதம்பரமும் ,தற்பன்காரரும் மாற்றி,மாற்றி எச்சரிக்கை கொடுப்பதும் நடந்தால் என்ன லாபம் ?நாட்டில் பிரச்னைகளை தீர்க்கும் சக்தி அரசிடம் இல்லை;;அடுத்த தேர்தலை பற்றியே கவலை முழுவதுமாக அலைகிறார்கள் .சோனியா மகன் ராகுலுக்கு முடி சூட்டும் பணியில் அலைகிறார்.. எல்லாம் காலத்தின் கோலம் ..
Rate this:
Cancel
குழப்பவாதி - Chennai,இந்தியா
20-செப்-201020:13:26 IST Report Abuse
குழப்பவாதி எப்படியும் அடுத்த தேர்தல் வர ஒன்னும் ஆக போறது இல்லை.. அப்டீன்னு சொல்ல மாட்டேன்.. என்னிக்குமே இதுக்கு தீர்வு கிடைக்காது.. னு சொல்ல வரேன்
Rate this:
Cancel
சரவணா குமார் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-செப்-201017:07:11 IST Report Abuse
சரவணா குமார் இது ஒரு கண் துடைப்பு நாடகம்தான். காவேரி பிரச்னை மாதிரி எதுயும் நீடுக்கொண்டே தான் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X