கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டி? தொண்டர்கள் படு உற்சாகம்

Added : ஜன 04, 2014
Advertisement
கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டி? தொண்டர்கள் படு உற்சாகம்

தே.மு.தி.க., தலைவர், விஜய காந்தின் மனைவி பிரேமலதா, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதனால், அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு தொகுதிகள், சேலம் மாவட்டத்திலும், மற்றவை விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளன. ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றார். கெங்கவல்லி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக, தே.மு.தி.க.,வை சேர்ந்த, சுபா உள்ளார். மீதமுள்ள நான்கு தொகுதிகள், அ.தி.மு.க., வசம் உள்ளன.


கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், தே.மு.தி.க., வேட்பாளராக, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டுக்களை பெற்றார். மேலும், விஜயகாந்தின் மனைவி, பிரேமலதாவின் சொந்த ஊரான, மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சங்கராபுரம் சட்டசபை தொகுதியில்தான் வருகிறது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, அந்த கட்சி நிர்வாகிகள் பலரும், 'கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், பிரேமலதா போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி தொகுதியின் தற்போதைய எம்.பி.,யாக இருப்பவர், தி.மு.க.,வை சேர்ந்த, ஆதிசங்கர். தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி ஏற்பட்டால், தே.மு.தி.க.,வுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதியை வழங்க, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தாலும், விஜய காந்த் கேட்கும் தொகுதி களை, அந்தக் கட்சி வழங்கி விடும். அதனால், பிரச்னை இருக்காது என, நம்பப்படுகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா போட்டியிட உள்ளார் என, தகவல் வெளியாகியுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிரேமலதா போட்டியிட்டால், அவருக்கு எதிராக, பெண் வேட்பாளர் ஒருவரை, அ.தி.மு.க., தலைமை களமிறக்கலாம் என, நம்பப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X