கனிமொழி பிறந்த நாள் விழா: தடபுடல் ஏற்பாட்டால் ஸ்டாலின் 'அப்செட்'

Added : ஜன 04, 2014 | கருத்துகள் (5)
Advertisement
கனிமொழி பிறந்த நாள் விழா: தடபுடல் ஏற்பாட்டால் ஸ்டாலின் 'அப்செட்'

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் பிறந்த நாள் விழாவை, இன்று தடபுடலாக நடத்த, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதனால், அதிருப்தி அடைந்துள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கனிமொழியை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்க, கோவையில் இன்று நடக்கும், மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கனிமொழியின் பிறந்த நாளை ஒட்டி, அவரை வாழ்த்தி, 'சிங்க மகளே, அமைதி புறாவே, வேடந்தாங்கலே, வெற்றிக்கனியே, உங்களின் திறமை கழகத்தின் பெருமை' என்ற, வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள், சென்னையில், பல இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளன. போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகங்கள், ஸ்டாலின் ஆதரவாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. ஸ்டாலினின் தங்கை செல்வியும், கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக, கருணாநிதியை சந்தித்த செல்வி, 'கோபாலபுரம் முழுவதும், போஸ்டர்களை எப்படி ஒட்டலாம்' என, புகார் தெரிவித்தார். வரும், 30ம் தேதி, தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரியின் பிறந்த நாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் மிசா பாண்டியன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 'தி.மு.க.,வின் கலங்கரை விளக்கே' என்றும், தம்பி பாலன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், 'வருங்கால முதல்வரே' என்றும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு போஸ்டரில், தி.மு.க., பொதுக் குழுவில், கருணாநிதி அருகில் அழகிரி இருப்பது போல, கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் குறித்து, கருணாநிதியிடம் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். ஒரு பக்கம் கனிமொழி மீது செல்வியும், மற்றொரு பக்கம் அழகிரி மீது ஸ்டாலினும் தெரிவித்த புகாரை, தன் காதில் வாங்கிய கருணாநிதி, அவர்களிடம், அழகிரி மற்றும் கனிமொழிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். பின், அழகிரி மற்றும் கனிமொழியை தொடர்பு கொண்டு, 'ஆதரவாளர்களை கண்டித்து வையுங்கள்' என, தெரிவித்துள்ளார். இதையடுத்தே, 'மதுரையில், கிராபிக்ஸ் உடன் கூடிய பொதுக்குழு போஸ்டர் ஒட்டியவர்கள், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். கனிமொழியின் பிறந்த நாளை ஒட்டி, முன்னாள் அமைச்சர் சாமி, முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன் ஏற்பாட்டில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் திருவொற்றியூர் மற்றும் எழும்பூரில் வழங்கப்படுகின்றன. கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, ஸ்டாலினுக்கு வாய்ப்பு இல்லை. காரணம், கோவையில் இன்று, அவரது தலைமையில், இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது; அந்தக் கூட்டத்தில், அவர் பங்கேற்கிறார். கனிமொழியை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பதை தவிர்க்கவே, அவர் கோவை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அழகிரி இன்று, கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pandiyan - sivagangai  ( Posted via: Dinamalar Android App )
06-ஜன-201422:10:11 IST Report Abuse
pandiyan ராஐன் சென்னை இவரின் வார்த்தைகள் சரியானதே காரணம் பனைமரத்தி்ல் காக்கா ஒக்காரப்போக பனம்பழம் விழுந்தது கதை இது எப்பூபூபூடி இருக்கு அரிதான பிறவியாச்சே எனக்கு சிப்பு சிப்பா வருதுங்கோ
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
06-ஜன-201407:30:08 IST Report Abuse
Ootai Vaayan கனியை எனக்கு ரொம்ப பிடிக்கும். தி.மு.கா வையே அடியோடு தோண்டி புதைக்க அவர் ஒருவரால் தான் முடியும்.
Rate this:
Share this comment
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
05-ஜன-201413:06:21 IST Report Abuse
பஞ்ச்மணி வாழ்த்து சொல்றதுக்கு ரூம் போட்டு யோசிப்பாங்களோ ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X