படித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது லக்:பழசுகளுக்கு கல்தா - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ., - Jayalalitha | Jayalalithaa's plan for loksabha election | Dinamalar

படித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ.,

Updated : ஜன 07, 2014 | Added : ஜன 06, 2014 | கருத்துகள் (82)
Share
 படித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ.,

லோக்சபா தேர்தல் தேதி, அடுத்த சில நாட்களில், அறிவிக் கப்பட உள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளில், அ.தி.மு.க., முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது தேர்தலில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன விண்ணப்ப கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள்,
ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது' என, தெரிந்தும் கூட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், நிர்வாகி என்ற முறையில், பணம் கட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம்,கொடநாட்டில் முகாமிட்டுள்ள முதல்வர், ஜெ., அங்கிருந்தபடியே, வேட்பாளர்களை, தேர்வு செய்யும் பணியை துவக்கி உள்ளார்.ஒவ்வொரு, லோக்சபா தொகுதிக்கும், மூன்று பேர் பட்டியல், தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஜாதகமும், சாதக, பாதகங்களும் அலசப்படுகின்றன. பின், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள தகுதியானவர்களா என்பதும், பரிசீலிக்கப்படுகிறது. அதன்பின், மூன்று பேரில் ஒருவர், வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.அத்துடன், முதல்வர் ஜெயலலிதா, சென்னை திரும்பியதும், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்கள், அழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட உள்ளது.'படிக்காதவர்கள், எம்.பி.,யானால், பார்லிமென்டில் பேசவே பயப்படுவர்; கூட்டமாக கோஷம் போட மட்டுமே லாயக்கானவர்களாக இருப்பர்' என்பதால், இம்முறை, படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு, கூடுதல் வாய்ப்பு வழங்க, முதல்வர் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது, கட்சி நிர்வாகிகளிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதேநேரத்தில், கட்சியிலும், அரசிலும், முக்கிய பொறுப்புகளை வகிக்கும், மூத்த தலைவர்கள் சிலர், தங்களின் வாரிசு களை, அரசியல் களமிறக்க விரும்பி, இம்முறை, அவர்களுக்காக, 'சீட்' கேட்டு, விருப்ப மனு அளித்துள்ளனர். தலைவியின்கருணையால், தங்களின் செல்லங்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும், கனவு காண்கின்றனர். இதற்கிடையில், கொடநாட்டில் தங்கியுள்ள, முதல்வர் ஜெயலலிதா, சில நாட்களுக்கு முன், அ.திமு.க.,வின், 'நால்வர் அணி' நிர்வாகிகளான, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தி லிங்கம் உட்பட எட்டு அமைச்சர்களை, அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். அவர்களுடன், லோக்சபா தேர்தல் பணி குறித்தும் பேசி உள்ளார்.அப்போது, லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச் சேரி உள்பட, 40 தொகுதிகளில், அ.தி.மு.க.,வின், 'பலம்' குறித்து, அவர் கேட்டறிந்து உள்ளார். கிருஷ்கிரி, கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் லோக் சபா தொகுதிகளில், அமைச்சர்களாக இருக்கும் சிலரை, வேட்பாளராக நிறுத்தப்போவதாகவும், அதனால், அந்த அமைச்சர்கள், இலாகா பணிகளுடன், லோக்சபா தேர்தல் பணிகளையும், சேர்த்து பார்க்க வேண்டும் என,உத்தரவிட்டதாகவும், மற்றொரு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X