திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு: டில்லி கோர்ட் தீர்ப்பு

Updated : ஜன 06, 2014 | Added : ஜன 06, 2014 | கருத்துகள் (97)
Share
Advertisement
திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு: டில்லி கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி: 'திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, முறைகேடான செயல்; எந்த மதமும் இதை ஏற்காது' என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:


நட்பு, காதல்...:

கடந்த, 2006ல், டில்லியில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது, இணையதளம் மூலமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும், அடிக்கடி சந்தித்தோம். எங்களின் நட்பு, காதலாக மாறியது.என்னை திருமணம் செய்து கொள்வதாக, அந்த இளைஞர் வாக்குறுதி அளித்தார். இதை நம்பி, அவருடன், அடிக்கடி, உடல் உறவில் ஈடுபட்டேன்; இதனால், கர்ப்பமடைந்தேன். ஆனால், அந்த இளைஞர், என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அந்த பெண் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டில்லி கோர்ட் நீதிபதி, வீரேந்திர பட் அளித்த தீர்ப்பு:ஒரு பெண், வளர்ந்து, நன்றாக படித்து, பொறுப்பான வேலைக்கு செல்லும்போது, யாராவது ஒரு ஆணுடன் நெருங்கி பழகி, திருமணம் செய்வதாக, அவர் அளிக்கும் வாக்குறுதியை நம்பி, அவருடன் உடலுறவில் ஈடுபடுவது, அந்த பெண்ணுக்கு, பேராபத்தை ஏற்படுத்தும். இதற்கு, சம்பந்தப்பட்ட பெண்ணே, பொறுப்பு. விவரம் தெரிந்த, நன்றாக படித்த பெண்கள், வெறும், வாய்மொழி வாக்குறுதிகளை நம்பி, ஏமாந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. இதை, கற்பழிப்பு குற்றமாகக் கருதவும் முடியாது.


குற்றமில்லை:

திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, ஒழுக்க கேடான செயல். எந்த மதமும், இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிப்பது இல்லை. 'திருமணம் செய்வதாக, அந்த இளைஞர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான், உடல் உறவுக்கு சம்மதித்தேன்' என, அந்த பெண் கூறுகிறார். ஆனால், இதற்கான எந்த ஆதாரத்தையும், அவர் தாக்கல் செய்யவில்லை. எனவே, இதை, கற்பழிப்பு குற்றமாகக் கருத முடியாது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manikandan - coonoor,இந்தியா
07-ஜன-201420:21:02 IST Report Abuse
manikandan இன்னும் நமது நாட்டில் திருமணம் மற்றும் உடலுறவு சம்மந்தமாக குழப்பமான கொள்கையை தான் ஏற்று வந்திருக்கிறோம் இந்த வழக்கை பொறுத்தவரையில் பாதிக்கபட்ட அந்த பெண்மணி என்ன நினைக்கிறார் தன்னை ஏமாற்றிய அந்த நபரை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று விரும்புகிறார? அவ்வாறு திருமணம் செய்தால் அந்த வாழ்வு நிரந்தர மகிழ்வானவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்குமா அல்லது மீண்டும் டைவர்ஸ் என்ற திசை நோக்கி பயணிக்கும? இதனால் இருவருக்கும் என்ன லாபம்? எனவே பெண்மணிகள் தன்னை உண்மையில் நேசிப்பவரை அடையாளம் காணும் திறன் உடையவராக இருக்கவேண்டும் மேலும் தனது மனதை மட்டும் பறிகொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்மே தவிர சாதாரண வாக்குறுதியை நம்பி உடலை பறிகொடுக்கும் நிலையை தவிர்க்கவேண்டும் இந்த நிலையில் சட்டம்உங்களுக்கு ஒருபோதும் துணை நிற்காது....
Rate this:
Cancel
haris jayaraj - perambalur,இந்தியா
07-ஜன-201412:46:43 IST Report Abuse
haris jayaraj நமது குசுப்பு என்ன சொல்ல போகின்றார்
Rate this:
Cancel
suresh - birmingham  ( Posted via: Dinamalar Android App )
07-ஜன-201403:04:50 IST Report Abuse
suresh i am really feeling sad for our Indian people. especially who commented such a rude comments against that woman. marrage is far from religion and should not be confused with how we want to live. that idiot judge sendibg the message that we should not live togather without getting married...please touch your heart who are already married how many of you not thought about any other women in your life....... in this case that judge was wrong. even if you give a hope and have a sex before or after marrage is all the same.....every one of us should be accointable for what we do....justice should not be based on the relihionand should condider every human being the same......all the stereotype idiot indians who commrnted that she was like s prostitute should consider thrir mum n daughters n sisters the same...
Rate this:
subbu - Tirunelveli,இந்தியா
07-ஜன-201409:00:23 IST Report Abuse
subbuசார் உங்கள மாதிரி ஆளுங்கதான் இந்த பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்து புரட்சியை ஏற்படுத்தணும் வாங்க சார் அந்த பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுங்க சார்....
Rate this:
subbu - Tirunelveli,இந்தியா
07-ஜன-201421:51:44 IST Report Abuse
subbuசார் உங்கள மாதிரி ஆளுங்கதான் சார் இந்த பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்து காப்பாத்தனும் வாங்க வந்து மறுவாழ்வு கொடுங்க சந்தோசமா வாழுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X