கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் கனிமொழிக்கு வாழ்த்து : ஆதரவாளர்கள் கூட்டத்தால் களைகட்டியது சி.ஐ.டி., காலனி

Added : ஜன 06, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின், 46வது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் முன்னணி தலைவர்கள் பலர், நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கேரள புகழ் செண்டை மேளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் பிறந்த நாள் விழா, கோலாகலமாக நடந்தது.விமரிசையாக தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை, அந்தக் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடுவர். அதுபோல,
 கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் கனிமொழிக்கு வாழ்த்து : ஆதரவாளர்கள் கூட்டத்தால் களைகட்டியது சி.ஐ.டி., காலனி

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின், 46வது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் முன்னணி தலைவர்கள் பலர், நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கேரள புகழ் செண்டை மேளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் பிறந்த நாள் விழா, கோலாகலமாக நடந்தது.
விமரிசையாக தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை, அந்தக் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடுவர். அதுபோல, கருணாநிதியின் மகள், கனிமொழியின் பிறந்த நாளும், சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டில், நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அந்தப் பகுதி முழுவதும், கனிமொழியை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வாழை மரத்தோரணங்கள் மற்றும் மாவிலைகளும் கட்டப்பட்டிருந்தன. லயன்ஸ் கிளப் ரத்த வங்கி நடத்திய, ரத்ததான முகாமில், 50க்கும் மேற்பட்ட, கனிமொழியின் ஆதரவாளர்கள் ரத்ததானம் வழங்கினர்.

ராக்கெட் பரிசு : கேரள மாநிலம், திருச்சூர் செண்டை மேளம், தஞ்சாவூர் தப்பாட்டம், திண்டுக்கல் மேளம், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டத்துடன் கட்சியினர் பலர் வந்த, கனிமொழிக்கு பல பரிசுகளை வழங்கினர்.
குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுகணைத் தளம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து முயற்சித்து வரும் கனிமொழிக்கு, ராமாபுரத்தைச் சேர்ந்த சிலர், ராக்கெட் போல வடிவமைக்கப்பட்ட நினைவு பரிசை வழங்கினர். கனிமொழிக்கு, நேற்று காலையிலேயே, தி.மு.க., தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.
பின், குடும்பத்தினருடன் கனிமொழி, கேக் வெட்டினார். இந்நிகழ்ச்சியில், ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்த் உட்பட, பலர் உடன் இருந்தனர்.

வாழ்த்து அட்டை : புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜா, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுமான்கான், தங்கம் தென்னரசு, கே.பி.பி.சாமி, பூங்கோதை, இந்திரகுமாரி, எம்.பி.,க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கே.பி.ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன் மற்றும் கிள்ளை ரவிச்சந்திரன், அகரம் ரவி, பெப்சி முரளி, ருக்மாங்கதன் உட்பட, பலர் கனிமொழியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார். தொலைபேசி மூலமாக, மத்திய அமைச்சர் வாசன் வாழ்த்து தெரிவித்தார்.

முன்தினமே... : கோவையில், நேற்று நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் பங்கேற்றதால், நேற்று முன்தினமே, அவர் கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரின் ஆதரவு மாவட்டச் செயலர்கள் சிலர், தங்களின் ஆதரவாளர்களை அனுப்பி, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KANNA - SINGAPORE,சிங்கப்பூர்
06-ஜன-201412:04:18 IST Report Abuse
KANNA மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு எங்கும் தினமும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்கும், குடும்பத்துல அவ்வளவு உறுபினர்கள்.
Rate this:
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
06-ஜன-201407:27:50 IST Report Abuse
Ootai Vaayan போய் பெற்ற தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், மனைவி மற்றும் உங்கள் குழந்தைகள் பிறந்த நாள் கொண்டாடுங்கள். இந்த நாதேரிக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
Rate this:
Cancel
aravindhan - chennai,இந்தியா
06-ஜன-201405:19:10 IST Report Abuse
aravindhan தி மு க எனும் கட்சிக்கு சவக்குழி தோண்டிய ராணி வாழ்க .. வாழ்க ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X