காஷ்மீர் பண்டிட்கள்:அரசு நடவடிக்கை வெற்றி பெறவில்லை: ஒமர் அப்துல்லா வேதனை

Added : ஜன 06, 2014 | கருத்துகள் (39)
Advertisement
காஷ்மீர் பண்டிட்கள்:அரசு நடவடிக்கை வெற்றி பெறவில்லை: ஒமர் அப்துல்லா வேதனை

ஜம்மு:காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்கள் மீண்டும் அவரவர் வீடு திரும்புவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார்.ஜம்முவில் உள்ள பட்டா போரியில் நடந்த அகில இந்திய இளைஞர் காஷ்மீரி சமாஜ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஒமர் அப்துல்லா இவ்வாறு பேசினார். காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்களை யாரையும் வலுக்கட்டாயமாக அழைத்து வர முடியாது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்க முடியும்.25 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறினர். அவற்றில் 50 முதல் 100 குடும்பங்கள் மட்டுமே காஷ்மீர் திரும்பியுள்ளனர்.


காஷ்மீர் முழுமை அடையவில்லை:


காஷ்மீர் பண்டிட்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமை அடையவில்லை.இதை நாங்கள் எப்போதும் சொல்லிக்கொண்டேதான் இருப்போம்.அவர்கள் காஷ்மீர் திரும்ப விரும்பினால் அதை முழு மனதுடன் வரவேற்கிறேன். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். காஷ்மீரில் இருந்து, பண்டிட் குடும்பங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது.எனினும், அவர்களை யாரும் வலுக்கட்டாயமாக காஷ்மீருக்கு அழைத்து வர முடியாது. ஆனால் பண்டிட்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கும் என்பதை ஒமர் அப்துல்லா உறுதிபட கூறினார்.


உணர்வு பாதுகாப்பு:


காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நாங்கள் உணர்வுபூர்வமான பாதுகாப்பு மட்டுமே அளிக்க முடியும். உறுதியான பாதுகாப்பு அளிக்க மூடியாது என்றார். இது குறித்து நசிர் ஆஸ்லம் வானி கூறும் போது, காஷ்மீரில் உள்ள பூங்கா, பூங்காவாக இல்லை. ஏனென்றால் பல்வேறு வகையான மலர்கள் இல்லாமல் பூங்கா எப்படி இருக்கும் என்றார்.அதை உமர் அப்துல்லா உறுதிபடுத்தினார்.அதாவது, துலிப் பூங்காவில் ஒரே வகையான மலர்கள் மட்டும்தான் உள்ளது.அதுவும் மார்ச்மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதுவும் மூடப்படும் அதுவரை ஒய்வு காலமாக அதற்கு ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு யாரும் வர மாட்டார்கள்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kadangkot Ravi Panickar - Palakkad,இந்தியா
07-ஜன-201401:23:47 IST Report Abuse
Kadangkot Ravi Panickar நல்லதை நினைப்பவனும், நலன் விரும்பியும் எல்லாம் பெயர் மாற்றி கருத்து சொல்வதால் மதசாற்பற்றவனாக மாறமுடியாது. மதவெறியர்கள்தான் இப்படி கண்மூடித்தனமாக கருத்து சொல்வார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் சென்று பாருங்கள்.100 இந்து குடும்பங்களுக்கு இடையில் 10 இஸ்லாமிய குடும்பங்கள் வரை நல்லுறவோடு உடன்பிறப்புகளாக பழகுகிறார்கள்,அதுவே 15/ 20 குடும்பங்களாக மாறிவிட்டால் பெண்கள் நட்புடனும்,ஆண்கள் அன்னியர் போலவும் பழகுகிறார்கள்.ஓரிரண்டு குடும்பம்கூட பெருகிவிட்டால் பிரச்சினை உருவாகிறது, கோவிலுக்கு அருகிலேயே மசூதி உருவாகிறது,சிறுபான்மையினரை ஒடுக்கியதாக விளம்பரம், மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவு,அதைமையமாகக்கொண்டு, ஏதேனும் ஒரு இந்துகுடும்பத்தாரிடம் ரகளை, எதிர்த்து கேட்டால் கலவரம் வெடிக்கும்.சிறுபான்மையினருக்கு எதிராக RSS /BJP குண்டர்களின் வெறியாட்டம் என்று விளம்பரம். .இஸ்லாமிய நண்பர்கள், உண்மையான இறையாண்மை உள்ளவராயின் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ஓரிடத்திலாவது இந்துக்கள் வலியவந்து வழக்கிட்டிரிக்கிரார்களா .சிந்தித்துப்பாருங்கள்.. இந்தியனாக ஒன்றுபடுவோம்.மதத்தை போற்றுவோம்.மனிதனாக வாழ்வோம் ..வாழ்க பாரதம்....தற்சமயம் லண்டனில் இருந்து ஜோதிடர் K ,R .பணிக்கர் ....
Rate this:
Share this comment
Cancel
நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்
06-ஜன-201421:15:17 IST Report Abuse
நல்லவனுக்கு நல்லவன் என்னாது குஜராத் கலவரம் நடந்தப்ப சிறுபான்மை மக்கள் இடம் பெயர்ந்து மாநிலத்தை விட்டு வெளியேறவில்லையா ? அடபாவிங்கள நீங்கல்லாம் இந்தியாவில்தான் இருக்கிங்களா இல்லை ..எதும் விவரம் தெரியாமதான் உளறிங்கள..கலவரம் நடந்தப்ப சிறுபான்மை மக்கள் உயிரை காப்பற்றி கொள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அகதிகளாக ..அகதி முகாமில் தங்கினார்கள் ...இதைப்பற்றி குஜராத் தலைமை செயலகத்தில் மோ(ச)டி அவர்களை பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்டபொழுது ...குஜராத் மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அகதிகளாக அகதி முகாமில் கஷ்டபடுகிறார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதுக்கு ..அதுக்கு மோ(ச)டி சொன்னார் அவர்கள் அகதிமுகாமில் கஷ்டப்படவில்லை ..அவர்கள் சந்தோசமாக இனபெருக்கம் செய்து கொண்டு இருகிறார்கள் என்று ஒரு மாநிலத்தின் முதல்வர் தன மக்கள் அடுத்த மாநிலத்தில் கஷ்டபடுறத கொஞ்சம் கூட உணராத முதல்வர் அவர்கள் நிலைமையை கொச்ச படுத்திய பேசியவர்தான் வருகால பிரதமர் பதவிக்கு வேட்பாளராக நிற்கிறார் ...இந்த மாதிரி எண்ணம் உள்ளவரலாம் இந்திய நாட்டின் பிரதமர வந்துட்ட நாடு விளங்கிரும் .....காஷ்மீர்ல உள்ள ( இந்து) மக்களுக்கு பிரச்னை என்றதும் இவ்வளவு கூப்பாடு போடும் வாசகர்கள் . அங்கேயே பெருபான்மையான (முஸ்லிம் ) மக்கள் நமது ராணுவத்தால் தினமும் படுகிற கஷ்டம் ஏராளாம் அதாலம் யாரும் இங்க வாய் திறக்க கானம் ..நமக்கு வந்த இரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா? மக்களே யாரு தப்பு பண்ணினாலும் ஒரே கண்ணோட்டத்தோடு பாருங்க ....
Rate this:
Share this comment
Cancel
venkat - ngr,இந்தியா
06-ஜன-201418:22:10 IST Report Abuse
venkat மத சார்பற்ற கட்சிகளின் வாயில் என்ன இருக்குது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X