காங்., பிரதமர் வேட்பாளரின் பரிதாப நிலை

Updated : ஜன 06, 2014 | Added : ஜன 06, 2014 | கருத்துகள் (45)
Share
Advertisement
பெங்களூரு : காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்டு வந்த இன்போசிஸ் துணை நிறுவனரும், ஆதார் திட்டம் தலைவருமான நந்தன் நீலேகனி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குறும் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. சுமார் 1.2 பில்லியன் இந்தியர்களுக்கு ஆதார் எண் வழங்கியவர், தேர்தலில் போட்டியிட சீட் தர ஆள் இல்லாத பரிதாப நிலையில் உள்ளார். கர்நாடக
Nilekani not on Cong shortlist of candidates for LS polls,காங்., பிரதமர் வேட்பாளரின் பரிதாப நிலை

பெங்களூரு : காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்டு வந்த இன்போசிஸ் துணை நிறுவனரும், ஆதார் திட்டம் தலைவருமான நந்தன் நீலேகனி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குறும் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. சுமார் 1.2 பில்லியன் இந்தியர்களுக்கு ஆதார் எண் வழங்கியவர், தேர்தலில் போட்டியிட சீட் தர ஆள் இல்லாத பரிதாப நிலையில் உள்ளார்.


கர்நாடக காங்கிரஸ் :

மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டு வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கர்நாடக காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 21 முதல் 22 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. முதல்வர் சித்தராமையாவிற்கு எதிராக கட்சிக்குள் பலர் போர்க்குகொடி உயர்த்தியதாலும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்ததாலும் நந்தன் நீலேகனிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் எம்.பி., ஆவதற்கு முன்னரே, அவர் தான் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவின. சுமார் 1.2 பில்லியன் இந்தியர்களுக்கு ஆதார் எண் வழங்கியதால், லோக்சபா தேர்தலில் பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டால் பெரும்பாலான ஓட்டுக்களை அவர் பெறுவார் என நம்பப்பட்டது.


யார் இந்த நீலேகனி? :

இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், முன்னாள் ஒருங்கிணைப்பு நிர்வாகியாகவும் இருந்த நந்தன் நீலேகனி, ஆதார் திட்ட தலைவராக நியமிக்கப்பட்டதால் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துடன் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலில் தெற்கு பெங்களூருவில் வெற்றி பெற்றால் அது காங்கிரசிற்கு பெரும் பலமாக இருக்கும் என கட்சி தலைமை நினைப்பதால், அந்த தொகுதியைச் சேர்ந்த நீலேகனிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. 1980 கள் தவிர கடந்த 40 ஆண்டுகளாக தெற்கு பெங்களூருவில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதனால் தெற்கு பெங்களூருவை குறிவைத்து நீலேகனிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்த நீலேகனி, டில்லியில் யாரும் எதிர்பார்க்காத அளவில் கட்சி தலைமையுடன் நெருக்கமாக இருந்ததுடன் உயரிய பதவிகளையும் பெற்றார். தற்போது மீண்டும் எதிர்பாராத வகையில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.


நீலேகனி புறக்கணிப்பு :

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தேர்வில் கர்நாடக காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. சில தொகுதிகளில் தற்போதுள்ள எம்.பி.,க்களையே மீண்டும் போட்டியிட செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பல வேட்பாளர்கள் போராடி சீட் கேட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை வெற்றி பெறாத தெற்கு பெங்களூரு தொகுதி வேட்பாளராக பேருக்கு நீலேகனியின் பெயரை கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நீலேகனி சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு, தற்போது கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்பது போல புறக்கணிக்கப்பட்டுள்ளார். டில்லியில் பெற்ற வெற்றி காரணமாக பெங்களூருவில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதால், அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. தெற்கு பெங்களூருவில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்ற நிலை உள்ளதால் அங்கு நீலேகனிக்கும், ஆம் ஆத்மிக்கும் கடும் போட்டி இருக்க வாய்ப்பு உள்ளது.


காங்கிரஸ் குற்றச்சாட்டு :

தெற்கு பெங்களூரு வேட்பாளராக நீலேகனி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு வந்தாலும், அங்கு போட்டியிட நீலேகனி விரும்பவில்லை. நீலேகனிக்கு காங்கிரசின் தோல்வி தொகுதியான தெற்கு பெங்களூரு ஒதுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், நீலேகனி கட்சியில் தனது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், லோக்சபா வேட்பாளர் பட்டியலில் நீலேகனியின் பெயர் இதுவரை சேர்க்கப்படவில்லை; அவரது பெயரை சேர்ப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்; நீலேகனி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை; கடந்த 5 ஆண்டுகளாக கட்சிக்காகவும் அவர் பணியாற்றவில்லை; அவருக்கு எதிராக கட்சி தலைமைக்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டதாக கூறப்படுவது தவறானது; அவர் என்னை சந்திக்கும் போது தேர்தலில் போட்டியிட விரும்வுதாகவே கூறினார்; அவரை போன்றவர்கள் காங்கிரசார் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்; இருப்பினும் இது குறித்த இறுதி முடிவை கட்சி தலைவர் தான் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு, வேட்பாளர்கள் குற்ற பின்னணி இல்லாமல் இருக்க வேண்டும், உள்ளூர்வாசியாக இருக்க வேண்டும், புது முகமாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 நிபந்தனைகளை கர்நாடக காங்கிரஸ் விதித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SHivA - cheNNAi,இந்தியா
06-ஜன-201423:58:53 IST Report Abuse
SHivA ஏதோ ராகுலை பத்திதான் எழுதி இருக்காபுலே ன்னு நினைச்சா பாவம் நிலேகணியை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள் ன்னு புரியுது..
Rate this:
Cancel
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
06-ஜன-201422:59:46 IST Report Abuse
NVRAMANAN ஆதார் அட்டை வழங்கினார், அதனால் அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், என்றால் தினமும் ஆயிரம் ஆவின் பால் அட்டைகளை விற்கும் நம்ப முனுசாமியையும் சேர்த்து கொள்ளலாமே , இதுவும் ஒரு அட்டைதனே? படித்தவர் பத்து ஆண்டு சோதனை செய்துவிட்டு போவாரா? இல்லையா? என்கிற சந்தேகம், ஒருபக்கம் ,இப்போ அட்டை வழங்கினார் அதனால் இந்திய நாட்டயே அடையாள அட்டயக்க திட்டமா ? உருப்படுமா இந்த இந்திய ? இப்போவே கண்ண கட்டுதே
Rate this:
Cancel
Mutha Murugan - Accra,கானா
06-ஜன-201422:15:15 IST Report Abuse
Mutha Murugan பா. சிதம்பரம் போல் காங்கிரஸில் ஒரு ஊழல் அரசியல்வாதி இல்லை - தாமலேரி முத்தூர் மதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X