கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு

Updated : ஜன 06, 2014 | Added : ஜன 06, 2014 | கருத்துகள் (18)
Advertisement
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு

புதுடில்லி: தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப்நந்த்ரோஜாக், காமேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இது தொடர்பான மனுவை விசாரித்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.


நாங்கள் தனியார் கம்பெனிகள், எங்களின் கணக்கை பார்க்க இந்த ஆணையத்திற்கு உரிமை கிடையாது, ஸ்பெக்ட்ரம் என்பது நாங்கள் விலைக்கு வாங்கவில்லை, இதற்கான லைசென்ஸ்தான் பெற்றுள்ளோம் என்று தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வைத்த வாதத்தை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது.


இதன்படி மத்திய தணிக்கை துறை, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்கை ஆய்வு செய்ய முடியும். மேலும் தங்களின் வரவு செலவுகளை முழுமையாக இந்த ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் அதிர்ந்து போய் இருக்கின்றன.




2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் :

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கணக்காயம் தான் வெளியே கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய டில்லி ஐகோர்ட் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. டில்லியில் புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி இதனை வலியுறுத்தி வந்தது. எனவே இது இந்த கட்சிக்கு கூடுதல் பூஸ்டாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
07-ஜன-201407:41:22 IST Report Abuse
Rajarajan தனியார் நிறுவனம் என்றால் இப்படிதான் கொடைவார்கள். ஏனெனில் அவர்கள் லாப நோக்கோடு இருப்பதால். அது சரி, இதேபோல் அரசு நிறுவனம் எல்லாத்தையும் தணிக்கை பண்ணி, நஷ்டத்துல ஓடுற நிறுவனத்தை ஏன் லாபத்தில் ஓட்ட கூடாது ??? அல்லது விற்றுவிட கூடாது ????? நஷ்டத்தை ஏன் அரசு தாங்க வேண்டும் ??? இவர்கள் மட்டும் நஷ்டத்தில், அதிக சம்பளம், சலுகை பெற வேண்டுமா ???? இவர்கள் மட்டும் நாட்டுக்கு நேரடியான பெரிய தொல்லை / கேடு இல்லையா ??? நஷ்ட அரசு நிறுவன தண்ட ஊழியர்க்காக, பொது மக்கள் மற்றும் தனியார் ஊழியர்கள், இவர்களின் நஷ்டத்தை, வரிகள் மற்றும் விலைவாசி உயர்வாக தாங்க வேண்டுமா ??? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மானியம் விரயம் இல்லையா ??? இவர்களுக்கு வாரி வாரி வழங்க, விலைவாசி அவ்வப்போது உயரவில்லையா ??? இது யார் வீட்டு பணம் ???? அது சரி. அடிக்கடி பஞ்சப்படி உயர்வு, 3 - 5 வருடத்திருக்கு ஒருமுறை சம்பள settlement, முன்தேதி இட்ட ஊதியம், இடைக்கால ஊதிய உயர்வு, தகுதி இல்லாதவனுக்கு promotion, ஏகப்பட்ட விடுமுறை, ஏகப்பட்ட சலுகைகள். ச்சே ச்சே. சோம்பேறிகளின் சொர்க்கம். இந்த தணிக்கை என்பது, ஊருக்கு ஒரு வழி, ஒன்றரை கண்ணனுக்கு ஒரு வழி.
Rate this:
Share this comment
Cancel
Muthusamypillai Dhandapani - DINDIGUL ,இந்தியா
06-ஜன-201421:14:13 IST Report Abuse
Muthusamypillai Dhandapani தனியார் நிறுவனங்களை ஆய்வு செய்ய சொன்னீங்க சரி. பயனடஞ்ச தனியார்கள் கணக்க அப்படியே அம்போன்னு விட்டுராதிங்க.
Rate this:
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜன-201417:51:08 IST Report Abuse
gummanguthu gopi அப்படியே வருமானவரி விலக்கு பெரும் கிரிகெட் வாரியங்களையும் ஆய்வு செய்தால் சரியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X