தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு| High Court ruled that the CAG can audit private telecom companies | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு

Updated : ஜன 06, 2014 | Added : ஜன 06, 2014 | கருத்துகள் (18)
Share
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு

புதுடில்லி: தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப்நந்த்ரோஜாக், காமேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இது தொடர்பான மனுவை விசாரித்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.


நாங்கள் தனியார் கம்பெனிகள், எங்களின் கணக்கை பார்க்க இந்த ஆணையத்திற்கு உரிமை கிடையாது, ஸ்பெக்ட்ரம் என்பது நாங்கள் விலைக்கு வாங்கவில்லை, இதற்கான லைசென்ஸ்தான் பெற்றுள்ளோம் என்று தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வைத்த வாதத்தை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது.


இதன்படி மத்திய தணிக்கை துறை, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்கை ஆய்வு செய்ய முடியும். மேலும் தங்களின் வரவு செலவுகளை முழுமையாக இந்த ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் அதிர்ந்து போய் இருக்கின்றன.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் :

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கணக்காயம் தான் வெளியே கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய டில்லி ஐகோர்ட் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. டில்லியில் புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி இதனை வலியுறுத்தி வந்தது. எனவே இது இந்த கட்சிக்கு கூடுதல் பூஸ்டாக கருதப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X