அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி- அமித்ஷாவுக்கு எதிரான புகார் ; பதிவு செய்ய போலீஸ் மறுப்பு

Updated : ஜன 06, 2014 | Added : ஜன 06, 2014 | கருத்துகள் (55)
Advertisement
மோடி- அமித்ஷாவுக்கு எதிரான புகார் ; பதிவு செய்ய போலீஸ் மறுப்பு

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரான அமித்ஷாவுக்கு எதிராக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கொடுத்த புகாரை வாங்க அம்மாநில போலீசார் மறுத்து விட்டனர். குஜராத்தில் பெண் ஒருவரை போலீசார் உளவு பார்த்ததாகவும், இவரது போன் ஓட்டு கேட்கபட்டதாகவும் ஒரு புகார் எழுந்தது. இதில் மோடியும், அமித்ஷாவும், இதன் பின்னணியில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


இந்த சர்ச்சையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஒரு சிறப்பு புலனாய்வு கமிஷனை நியமித்துள்ளது. தொலை தொடர்பு துறை சட்டத்தின் படி இது சட்ட மீறல் என்று உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே விளக்கம் அளித்தார். இதற்கு பா.ஜ., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இந்நிலையில் குஜராத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, காந்திநகர் செக்ஷன்- 7 போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனுவை கொடுத்தார். ஆனால் போலீசார் இந்த புகாரை எப்.ஐ.ஆராக பதிவு செய்ய மறுத்து விட்டனர்.


இது குறித்து பிரதீப்சர்மா நிருபர்களிடம் பேசுகையில்; பெண் உளவு பார்த்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக மோடி, முன்னாள் அமைச்சர் அமித்ஷா, போலீஸ் உயர் அதிகாரி ஆகியோர் இதன் பின்னணியில் உள்ளனர். இது தொடர்பாக என்னிடம் ஒலிப்பதிவு ஆதாரம் உள்ளது. ஆனால் எனது புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர். நான் கோர்ட்டை அணுகவுள்ளேன். இது போன்று மாநில சட்டப்பிரிவுகளில் பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன. இவ்வாறு சர்மா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA.ARUL - Neelangarai Chennai,இந்தியா
07-ஜன-201407:42:29 IST Report Abuse
SIVA.ARUL தேர்தலுக்குள் மோடி செல்வாக்கை குறைக்க எப்படியாவது ஊடகங்களில் காட்டி விட்டால் போதும் என்று காங்கிரஸ் நல்ல திட்டங்கள் போட்டுப் பார்க்கின்றது. பாவம் இவர்களின் திட்டங்கள் திரு.மோடியின் இமேஜை மேலும் அதிகரிக்கத்தான் செய்கிறது. அனைத்து வகைகளிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வத்தான் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Meto Enjoy - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-201407:35:15 IST Report Abuse
Meto Enjoy இதான்ய அந்த மாநிலத்தின் சிறப்பான, நேர்மையான நிர்வாகம்.
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
07-ஜன-201405:45:08 IST Report Abuse
Tamilar Neethi சந்யாசி மோடி ..பாவம் விடுங்கள் ..நம்மூர் நித்தி போல துறவிற்கு பெண் தேடியிருப்பார் .. இதை பெருசு படுத்தினால் பாதிக்கப்பட்ட பெண், மோடியினால் ஒதுகிவைக்கபட்டுள்ள முதல் மனைவி எல்லோரும் ..கூட கட்சி தொண்டர்கள் மனசு வேதனை படும் ..இதில் நம்மூர் காரர் தகவல் சட்டம் ஆர்வலர் செல்வராஜ் என்பவர் மோடி தேர்தல் கமிஷன் வசம் மோடி தவறான விவரம் கொடுத்து உள்ளதை ..பான், வருமானவரி நம்பர் கொடுத்துளதை இரு ஆண்டுக்கு முன் குஜராத் காவல் தலைமையிடம் கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது கண்டு நொந்து போயுள்ளார் ...
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
07-ஜன-201410:11:24 IST Report Abuse
rajen.tnlமோடியை உளவு பார்த்த பெண் யார் தெரியுமா ..பொய் ரொம்ப நாளைக்கு நிடிக்காது ,,பாகிஸ்தான் ISI அனுப்பிய பெண் ..மோடியை குண்டு வைத்து கொல்ல அனுப்பபட்டவள் ..அதை கண்டு பிடித்த மோடியின் உளவு பிரிவு அவளை கண்காணித்தார்கள் ..அவளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது ..பாகிஸ்தானுக்கு போக சொல்லி ... 6 முறை எச்சரிக்கை விடப்பட்டது .அவள் போக வில்லை ..அதன் பிறகுதான் என்கௌன்டர் போடப்பட்டது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X