'தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை': ஸ்டாலின் பதிலடி

Updated : ஜன 07, 2014 | Added : ஜன 07, 2014 | கருத்துகள் (68)
Share
Advertisement
'தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.250 ஏக்கரில்...:தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான,
 'தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை':  ஸ்டாலின் பதிலடி

'தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.


250 ஏக்கரில்...:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று திருச்சி வந்தார். மாநாட்டிற்கான, பந்தல், மேடைகளை பார்வையிட்ட அவர், மாநாட்டு பணிகளை கவனிக்கும் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்காக, 1,100 அடி நீளம், 600 அடி அகலமுடைய பிரமாண்ட பந்தல், 200 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கான்கிரீட் மேடை, கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடிக்கம்பம் போன்றவை அமைக்கப்படுகின்றன. தலைவர்கள் தங்க, குடில்கள் கட்டப்படுகின்றன. தொண்டர்கள் தங்க, திருச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, 100 திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இளைஞர்களுக்கு வாய்ப்பு:

மாநாட்டிற்கு, 10 லட்சம் பேர் வருவர். பிப்., 15ம் தேதி நிர்வாகிகளும், 16ம் தேதி கூட்டணிக் கட்சி தலைவர்களும் பேசுகின்றனர்.லோக்சபா தேர்தலில், இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், கணிசமான தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும். தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, கட்சியில் இருக்கிறாரா என்பதை, கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தேவையில்லை' என, தெரிவித்திருப்பது குறித்து கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.


மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 92வது வயதை குறிக்கும் வகையில், மாநாடு பந்தல் முகப்பில், 92 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. இந்த கொடிக்கம்பத்துக்கு, மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது. அதேபோல், திங்கள்கிழமையான நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthusamypillai Dhandapani - DINDIGUL ,இந்தியா
07-ஜன-201423:43:09 IST Report Abuse
Muthusamypillai Dhandapani நீங்க இப்படி டமாலுன்னு ஒரு பேட்டி குடுங்க. அண்ணாச்சி அப்படி டுமீல்னு ஒரு பேட்டியை தட்டி விடட்டும். தலைவர் படார், படார்ன்னு பல பேட்டிகளை அள்ளி விடட்டும். இந்த டமால், டுமீல், படார் சத்தத்திலே ஸ்பெக்ட்ரம் புஷ்வாணம் ஆகிடும். பலே பலே
Rate this:
Cancel
Prasanna Sampathkumar - Chennai,இந்தியா
07-ஜன-201421:24:20 IST Report Abuse
Prasanna Sampathkumar எது தேவையற்றது என சொன்னால் தேவை எதுவென தெரியும்
Rate this:
Cancel
Thirumalai Chakravarthy Raman - Kanchipuram,இந்தியா
07-ஜன-201419:23:27 IST Report Abuse
Thirumalai Chakravarthy Raman செய்தியை படித்தால் பார்த்தால் தான் அது தேவையா இல்லையா என்று தெரியும். இவரு படிக்காமலே அது தேவையில்லை என்று முடிவுக்கு வந்து விட்டார். பகுத்தறிவின் புதிய பரிமாணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X