பேரழிவு சக்தியாக மோடியை சித்தரிப்பது, காங்கிரசின் போலி மதவாத மிரட்டல்?

Updated : ஜன 07, 2014 | Added : ஜன 07, 2014 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரஸ் கட்சி மதசார்பின்மையை வைத்து அரசியல் மிரட்டல் விடுப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொள்கை ஆராய்ச்சி மைய தலைவர் பிரதாப் பானு மேத்தா, தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கருத்துக்கள் பற்றி பிரதாப் பானு
'Congress uses secularism as a point of political blackmail', மதசார்பின்மையை வைத்து அரசியல் மிரட்டல் விடுக்கிறது காங்கிரஸ்

புதுடில்லி : காங்கிரஸ் கட்சி மதசார்பின்மையை வைத்து அரசியல் மிரட்டல் விடுப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொள்கை ஆராய்ச்சி மைய தலைவர் பிரதாப் பானு மேத்தா, தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கருத்துக்கள் பற்றி பிரதாப் பானு மேத்தாவிடம் கேட்கப்பட்டது. பேட்டியில் அவர் கூறியதாவது : பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும் என பிரதமர் கூறியது மதசார்பின்மையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி விடுத்து வரும் அரசியல் மிரட்டலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்; ஆனால் இந்த தந்திரம் வாக்காளர்களிடம் அதிக காலம் வேலை செய்யாது. இவ்வாறு மேத்தா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்து வரும் மோடி மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதாலும், அவர் பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவரது ஓட்டு வங்கி அதிகரித்து வருவதாலும் அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பிரதமர் இத்தகைய கருத்து கூறி உள்ளாரா என மேத்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மேத்தா, அரசியல் கட்சிகள் மீது மக்கள் பெருத்த அதிருப்தியும், வெறுப்பும் கொண்டுள்ளனர்; மதசார்பின்மை கொள்கையை பயன்படுத்தி வருவது காங்கிரஸ் தொடர்ந்து செய்து வரும் மிகப் பெரிய தவறாகும்; இது அரசியல் மிரட்டல்; தாங்கள் தான் மதசார்பற்ற கட்சி; மற்றவர்கள் அனைவரும் மதவாதிகள் என காங்கிரஸ் கூறி வருகிறது; மக்களிடம் தங்கள் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்த அது மட்டும் போதும் என காங்கிரஸ் நினைக்கிறது; ஆரம்பம் முதல் தற்போது வரை இது வெறும் காங்கிரசின் அரசியல் மிரட்டலே என மக்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்; மீண்டும் அவர்களுக்கே ஓட்டளிக்க வேண்டுமா அல்லது அவர்களுக்கு மாற்றாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் தொடர்பாக "எண்ணங்கள் 2014" என்ற தலைப்பில் பிரபலங்கள் பலரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதில் அவர்களின் பார்வையில் சிறந்த அரசியல் கட்சி அல்லது அரசியல் தலைவர் யார் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
08-ஜன-201408:19:07 IST Report Abuse
Ramasami Venkatesan ராகுலின் இமேஜை உயர்த்த 500 கோடி ரூபாயா - அல்லது மோடியின் இமேஜை பிரஸ் மூலம் அழிக்க முயற்சியா. மக்களே சிந்தியுங்கள். நல்ல மனம் கொண்ட ஒருவரை அழித்து ஆள நினைக்கும் ஒரு கட்சி (எவ்வளவு பணம் செலவானாலும்) இனி என்னதான் செய்யமாட்டார்கள். இந்த பணம் - ராகுல் இமேஜை உயர்த்துவதை விட மோடியின் இன்றைய செல்வாக்கை அழித்தாவது (அவதூறுகள் பல கற்பித்து) ஆள நினைக்கிறார்கள். தேர்தலில் தன பலம் காட்ட வேண்டியதுதானே. அதை விட்டு ஏன் இந்த குறுக்கு வழி ஆட்சியில் நீடிப்பதற்கு. இதற்க்கு பின்னால் ஏதோ இருக்கிறது. ஆட்சி மாறினால் பல உண்மைகள் வெளிவரலாம். அந்த பயமும் இருக்கலாம்.
Rate this:
Cancel
E.Manoharan - madurai,இந்தியா
08-ஜன-201407:25:50 IST Report Abuse
E.Manoharan இப்படி போலி மதசார்பின்மை பேசியே மக்களை துண்டாடி ஆட்சியில் குளிர் காய்ந்து வரும் காங்கிரெஸ் வரும் தேர்தலுக்குள் பெரும்பான்மை மக்களை ஓட ஓட விரட்டி, பிஜேபி பக்கம் தள்ளுவது நல்லதற்கே. அப்பொழுதுதான் காங்கிரெஸ்-ஐ துடைத்தெரிய வசதியாக இருக்கும். இந்த முறை மக்கள் விழிப்புணர்வு அடைந்து தேசத்தை காக்க, தேச பக்தியுடன் இத்தாலி காங்கிரஸ்-ஐ ஒழிக்கவில்லை என்றால் மண்ணு மோகன் சொன்ன மாதிரி நாடு மிக பெரிய அழிவை சந்திக்கும். 'ஜெய் ஹிந்த்'
Rate this:
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
08-ஜன-201403:43:31 IST Report Abuse
Tamilar Neethi இந்தயாவில் இப்போது தொழிலதிபர்கள் ஆதிக்காம் , மதவெறி , தீவிரவாதம் , லஞ்சம் , அரசு அதிகாரிகள் மெத்தனம் சோம்பேறி தனம், அரசுசார் தீவிரவாதம், இதில் அரசியல் வியாபாரிகள் அரசியல் கட்சிகள் ... தேசியா அளவில் சில மாநில அளவில் பல ... அதிகாரம் வைத்துகொண்டு அடக்கி .. தேசத்தை ..மீடியாக்களை உடமை கொண்டுள்ளார்கள் .. மகளுக்கு ஒருபக்சம் உடமைமீது அதிகாரம் இல்லாமல் , சரியாக விவரம் சொல்லாமல் .. வறுமை அடிமைத்தனம் வீழ்ந்து .. உணர்வு இல்லாமல்..எல்லாம் இழந்த பின் .. இலவசம் வாங்கி ... பிறகு இன்னும் இல்லாமல் போய்.. ஒரு தலைவர் தேடுகிறார்கள் ..அதாவது எய்த அமைப்பை ..பிரச்சனைகளை நேரடியாக மோதாமல் .. ஒருதலைவரை .. ஜாதி பேரில் , மதம் பேரில் ..தேடி அலைந்து இன்னும் இல்லாமல் போகிறார்கள் ... சேவை செய்து தலைமை பொறுப்பு இல்லாமல்..சீரழித்து ஒரு கூட்டத்தை அழிபவர்களை.. தலைமைக்கு தேடுகிறார்கள்..ஆக்குவோர் இல்லாமல்..போகிறார்கள்.. மனிதர்களை அழிபவர்களை.. இன்னொரு மனிதன் தேர்வு செய்கிறான் .. இது இந்தியாவில் அதிகம் ..மரம் வெட்டுவோர்..சினிமாவில் வீரம் காட்டுவோர் ,, தமிழகத்தில் இருந்துகொண்டு இலங்கை ஈழம் பேசுவோர்,, மார்வாடி விரிந்திட ..விதிடுவோர் ..வட்டிகடை காப்போர் எல்லாம் கூடினால் ஓட்டுவாங்கி .. அழிக்கும் முயற்சி அரசியல் பேரில்.., அரக்கர்கள்.. தூங்கும் அரக்கர்கள்..தேர்தல் மூலம் வெளிவர துடிகிரார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X