டில்லியில் ஆம் ஆத்மி படு சுறு, சுறு ; ஒரே நாளில் 800 பேர் இடமாற்றம்

Updated : ஜன 07, 2014 | Added : ஜன 07, 2014 | கருத்துகள் (100)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் படு வேகமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க கடுமையாக பாடுபடுவேன் என உறுதியுடன் களம் இறங்கியிருக்கிறார். இதன் முதல் கட்டமாக குடிநீர் விநியோக துறையில் ஒரே நாளில் 800 ஊழியர்களை இட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த துறைக்கான மூத்த ஐ.ஏ.எஸ்.,
 சிறப்பு தொலைபேசி

புதுடில்லி: டில்லியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் படு வேகமான செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க கடுமையாக பாடுபடுவேன் என உறுதியுடன் களம் இறங்கியிருக்கிறார். இதன் முதல் கட்டமாக குடிநீர் விநியோக துறையில் ஒரே நாளில் 800 ஊழியர்களை இட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த துறைக்கான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி, பொறுப்பேற்ற சில நாட்களில் மக்களுக்கு வரியில்லா குடி நீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. மின்சார கட்டணம் பாதியாக குறைப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை செயல்படுத்த சட்ட ரீதியிலான சிக்கல் நிலவி வருகிறது.


இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 800 பேர் அதிரடியாக ஒரே நாளில் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த துறை அதிகாரிகள் 3 பேர் லஞ்சம் கேட்டதாக எழுந்துள்ள புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்குவர் என தெரிகிறது. குடி நீர் விநியோகம் முறையாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காத்தான் ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த துறை ஊழியர்கள் கடந்த 3 ஆண்டு காலமாக இட மாற்றம் இல்லாமல் பணியாற்றி வந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சிறப்பு தொலைபேசி இதற்கிடையில் ஊழல் புகார்களை பதிவு செய்ய சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த எண் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu sambath - pune,இந்தியா
08-ஜன-201408:27:51 IST Report Abuse
muthu sambath இங்கே சும்மா உக்காந்து கொண்டு தொன்றிதேல்லாம் கருத்து என உளறிக்கொண்டுஇருக்கும் நண்பர்களே. இந்த உலகத்திலே மிகவும் சுலபமானது விமர்சனம் செய்வது.அவர் ஆட்சி பொறுப்பு ஏற்று பத்து நாள் கூட ஆகவில்லை.பொருத்து இருங்கள் சில மாதம். காத்திருக்கிறேன் நானும்...
Rate this:
Cancel
E.Manoharan - madurai,இந்தியா
08-ஜன-201408:01:29 IST Report Abuse
E.Manoharan ஊழல் நாற்றத்தை உடலில் இயற்கையாகவே கொண்டுள்ள காங்கிரெஸ்-ன் மடியில் உட்கார்ந்து கொண்டு ஊழலை ஒழிக்க போகிறேன் என்று துள்ளும் இந்த கத்துக்குட்டி கேஜ்ரிவாலை மடியில் வைத்தே அவரின் மூச்சை பிடிக்க போகிறது, காங்கிரஸ். 'ஜெய் ஹிந்த்'
Rate this:
Cancel
TAMIL JEGAN - RAMANATHAPURAM,இந்தியா
08-ஜன-201402:35:15 IST Report Abuse
TAMIL JEGAN சும்மா காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து கொண்டு ஊழலை ஒழிக்க போகிறேன் என்று கூறுவது மக்களை மடையனாக்கும் செயல். முன்னாள் முதல்வர் ஷீலா ஆட்சி செய்தபோது எவ்வளவு ஊழல் நாளிதழில் தினம் ஒரு ஊழல் செய்திதான் இதை எல்லாம் விசாரிக்க வேண்டியது தானே இங்கு ஆம் ஆத்மிக்கு ஜால்ரா போடும் மக்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள் அந்த கட்சி ஒரு மாநில கட்சிதான் தேசிய கட்சி இல்லை சும்மா நாடளுமன்ற தேர்தலில் நிற்போம் 200 தொகுதியை பிடிப்போம் பிரதமர் பதவியை பிடிப்போம் என்று சும்மா சவுடால் விடாதிங்க நீங்க டெல்லி தர்பாரை எத்தனை நாளைக்கு ஆட்சி நடதுறாங்கனு பார்க்கலாம்.
Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
08-ஜன-201406:42:57 IST Report Abuse
மு. தணிகாசலம் தமிழ் ஜெகன் அவர்களே, ஆம் ஆத்மி கட்சி உண்மையிலேயே மனப்பூர்வமாக விருப்பபட்டா காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது? இல்லவே இல்லை. ஆம் ஆத்மிக்கு வேறு வழியே இல்லாததால்தான் காங்கிரஸ் ஆதரவை ஏற்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஒழலை ஒழிப்பது நேர்மையான நிர்வாகம் இவைகள் தான் ஆம் ஆத்மியின் முக்கிய எண்ணம்போல் தோன்றுகிறது. அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அதே சமையத்தில் திறமையான நல்ல நிர்வாகமும் வேண்டும். திறமையான நல்ல நிர்வாகத்தை ஆம் ஆத்மியால் கொடுக்க இயலாமல்போகும் பட்சத்தில் ஊழல் அரசு இருந்தாலும் பரவாயில்லை திறமையான நல்ல நிர்வாகத்தை கொடுக்கும் அரசுதான் வேண்டும் என்று மக்கள் எண்ண ஆரம்பித்து விடுவார்கள். யாரும் உங்களைபோல் தடாலென ஆம் ஆத்மியை குறைகூறி காருத்து சொல்லக்கூடாது. ஆம் ஆத்மிக்கு சிறிது காலம் அவகாசம் கொடுத்து பார்க்கவேண்டும். எல்லோருமே உங்களைபோல் கருத்துகொண்டிருந்தால் ஊழலை ஒழிக்கவும் நேர்மையான நிர்வாகத்தை கொடுக்கவும் யார்தான் முன்வருவார்கள்? மக்கள் ஆசைப்படுவது, ஊழலற்ற நேர்மையான நியாயமான திறமையான ஒரு நல்ல நிர்வாகத்தை கொடுக்கும் அரசு வேண்டும் என்பதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X