முத்துக்கு முத்தாக...சொத்துக்கு சொத்தாக...!| Dinamalar

முத்துக்கு முத்தாக...சொத்துக்கு சொத்தாக...!

Added : ஜன 07, 2014
Share
"ஏய் மித்து! எங்கடி இருக்க...பொங்கலுக்கு கொஞ்சம் "பர்ச்சேஸ்' பண்ணணும்...ரங்கே கவுடர் வீதி வரைக்கும் போயிட்டு வரலாமா?,''மொபைலில் வந்த சித்ராவின் அழைப்புக்கு அடிபணிந்து, அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜரானாள் மித்ரா. இருவரும் "கால்டாக்சி' பிடித்து, ராஜவீதியில் இறங்கி, "வேட்டை'யில் இறங்கினார்கள்; அப்போதே ஆரம்பமானது அரட்டைக் கச்சேரி."அக்கா! கடைசி வரைக்கும்
முத்துக்கு முத்தாக...சொத்துக்கு சொத்தாக...!

"ஏய் மித்து! எங்கடி இருக்க...பொங்கலுக்கு கொஞ்சம் "பர்ச்சேஸ்' பண்ணணும்...ரங்கே கவுடர் வீதி வரைக்கும் போயிட்டு வரலாமா?,''
மொபைலில் வந்த சித்ராவின் அழைப்புக்கு அடிபணிந்து, அடுத்த அரை மணி நேரத்தில் ஆஜரானாள் மித்ரா. இருவரும் "கால்டாக்சி' பிடித்து, ராஜவீதியில் இறங்கி, "வேட்டை'யில் இறங்கினார்கள்; அப்போதே ஆரம்பமானது அரட்டைக் கச்சேரி.
"அக்கா! கடைசி வரைக்கும் கோயம்புத்தூர் கவுன்சிலர்களால சி.எம்.மை பார்க்க முடியலை. அமைப்புச் செயலாளர்கள் நால்வரைப் பார்த்து, மனு கொடுத்திருக்காங்க. ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு, நேரடியாப் பேச வைக்கிறோம்னு சொல்லிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
கார்ப்பரேஷன் கவுன்சிலர்கள் பத்து இருபது பேரு சேர்ந்தும், முதல்வரை... அதுவும் அவுங்க கட்சி பொதுச் செயலாளரையே பார்க்க முடியலைன்னா, அந்தக் கொடுமையை எங்க போய்தான் அவுங்க சொல்லுவாங்க? ஆளும்கட்சிக்காரங்க நிலைமையே இப்படின்னா, மத்த ஜனங்க எங்க போறது? டில்லியில மெட்ரோ டிரெயின்ல போறாரு கெஜ்ரிவால்; தெருவுல உட்கார்ந்து மக்கள் குறையைக் கேக்குறாரு. நம்ம ஊர்ல இதெல்லாம் கனவுதானா?,'' என்றாள் சித்ரா.
"சரி! அதை விடுக்கா....பெரிய இடத்து விவகாரம். ஹவுசிங் போர்டுல உன் பிரண்ட் வாங்குன வீட்டுக்கு பத்திரம் தராம இழுத்தடிக்கிறாங்கன்னு சொல்லிட்டு இருந்தியே...என்னாச்சு?,'' மேட்டரை மாற்றினாள் மித்ரா.
"இன்னும் கிடைக்கலடி...கோயம்புத்தூர் ஹவுசிங் போர்டு ஆபீஸ்ல புரோக்கர்கள் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்குது; ஒதுக்கீட்டாளர்கள் சங்கத்தோட பேரை வச்சுக்கிட்டு, ரெண்டு மூணு பேரு, அங்கேயேதான் கதியாக் கெடக்குறாங்க. அவுங்களுக்கு "சேர்' போட்டுக் கொடுத்திருக்காங்க. அவுங்களே "பைல்' எல்லாம் "ஹேண்டில்' பண்றாங்க. இத்தனைக்கும் ஹவுசிங் போர்டு இடத்தை மோசடியா வித்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்துனவுங்க அவுங்க,'' என்றாள் சித்ரா.
"கவர்மென்ட் ஆபீசுல எல்லாம் "சிசிடிவி' வைக்கணும்கிற ஜி.ஓ., ஹவுசிங் போர்டுக்குப் பொருந்தாதா? இ.இ., கையெழுத்தைப் போட்டு, போலியா பத்திரம் தயாரிச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். உண்மையாக்கா?,
"உண்மைதான்...ஹவுசிங் போர்டு வீட்டுலயே குடியிருந்துக்கிட்டே, சில புரோக்கருங்க இந்த பித்தலாட்ட வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. போலிப் பத்திரம் தயாரிச்சதுல, ஆபீஸ்ல இருக்கிறவுங்க சில பேருக்கும், ஹவுசிங் போர்டு கான்ட்ராக்டர் ஒருத்தருக்கும் தொடர்பு இருக்கிறதா பேசிக்கிறாங்க. ஆனா, போலீஸ்காரங்க யாரையும் "அரெஸ்ட்' பண்ணாம இழுத்தடிக்கிறாங்க''
"நம்ம ஊரு போலீஸ்தான் லட்சங்கள்ல பேரம் பேசுறவுங்களாச்சே...சிட்டியில "க்ரைம்' பார்க்கக்கூடிய முக்கியமான பொறுப்புல இருக்கிறவரு மேல, ஒரு"பகீர்' குற்றச்சாட்டு; அநேகமா அவரை தூக்கிருவாங்க போலிருக்கு,'' என்றாள் மித்ரா.
"அப்படி என்ன பண்ணுனாராம்?'' என்றாள் சித்ரா.
"செல்வபுரத்துல ஒரு குடோன்ல... சோப்பு, தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ்...எல்லாம் சேர்த்து 12 லட்ச ரூபா பொருளை ஒரு கும்பல் திருடிருச்சு. திருடனுக்குத் தேள் கொட்டுன கதையா, போலீஸ்ல "கம்பிளைன்ட்' கொடுக்காம, பேச்சுவார்த்தையிலேயே வாங்கித் தரச் சொல்லிருக்காரு சம்மந்தப்பட்ட வியாபாரி. அதுக்கு 4 லட்ச ரூபா வாங்கிருக்காங்க போலீசு. விஷயம் அதுக்குள்ள "லீக்' ஆகி, கைப்பத்துன பொருளை எல்லாம் கணக்கு காமிக்க வேண்டியதாயிருச்சு...!'' என்று மித்ரா முடிப்பதற்குள், ""அய்யய்யோ...அப்புறம் என்னாச்சு?,'' ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
"அப்புறமென்ன...பெரிய ஆபீசர்ட்ட அந்த வியாபாரி விஷயத்தைச் சொல்லிருக்காரு. விசாரிச்சதுல, 3 லட்சத்தை "க்ரைம்' பார்க்கிற முக்கியமான ஆபீசர்தான் வாங்கிருக்கார்ன்னு தெரிஞ்சு போச்சு. இதைப்பத்தி கேட்டதும், அவரும் ஒத்துக்கிட்டு, தான் வாங்குன பணத்தை வியாபாரிகிட்டயே கொடுத்துட்டாரு,'' என்றாள் மித்ரா.
"பட்...அவரோட நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!,'' என்று சொல்லி சிரித்தாள் சித்ரா.
"நேர்மைன்னு நீ சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. சிட்டி சென்ட்ரல்ல இருக்கிற ஒரு முக்கியமான போலீஸ் ஆபீசர், ரொம்பவே கை சுத்தமானவர். ஆனா..."அந்த' விஷயத்துல செம்ம "வீக்'காம். தன்னோட சொத்தைப் பறிச்சுக்கிட்டு, தன்னைத் துரத்தி விட்டதா பொண்டாட்டி மேலயே புகார் கொடுக்க வந்திருக்காரு வட மாநிலத்துக்காரர் ஒருத்தர். பெரிய ஆபீசர், நேர்மையான இந்த ஆபீசரைக் கூப்பிட்டு, விசாரிக்கச் சொல்லி இருக்காரு. அவரு என்னடான்னா, சொத்தைப் பறிச்ச அந்தம்மாவையே தன்னோட சொத்தாக்கி, "டூர்' கிளம்பிட்டாரு. கடைசியில "கம்பிளைன்ட்' கொடுத்தவரைக் கூப்பிட்டு, "ஒண்ணும் பண்ண முடியாது; ஓடிப்போயிரு'ன்னு துரத்தி விட்டுட்டாரு,''
\"சொத்தை அபகரித்த முத்தானஆபீசர்ன்னு சொல்லு,'' என்ற சித்ரா, பல சரக்குக் கடைக்குள் நுழைந்து பட்டியல் வாசிக்க ஆரம்பித்தாள்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X