வரி சீரமைப்பு மக்களுக்கு சாதகமா, பாதகமா?

Added : ஜன 08, 2014 | கருத்துகள் (2)
Advertisement
 வரி சீரமைப்பு மக்களுக்கு சாதகமா, பாதகமா?

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், வரி விதிப்பு முறையில், சீர்திருத்தம் கொண்டு வரப்படும்' என, அந்தக் கட்சியின், பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி அறிவித்தார். அவர் தெரிவித்த, வரி சீரமைப்பு, மக்களுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என, இரு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த கருத்துக்கள் இதோ:
நம்நாட்டில், வருமான வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி போன்றவை நேரடியாகவும், இன்னும் பல வரிகள், மறைமுகமாகவும் மக்களிடம் வசூலிக்கப்படுகின்றன. இந்த வரிகளை வசூலிக்க, பல துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும், இந்த துறைகள் மூலம் வரிகளை வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், நேர்முக மற்றும் மறைமுக வரிகளை வசூலிக்க ஆகும் செலவு, வரி வருவாய்க்கு ஏற்ப இல்லை.
இவ்வளவு செலவு செய்து, நேர்முக வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுத்தாலும், வரிப்பாக்கி பெருமளவு நிலுவையிலேயே உள்ளது.அதனால், வரி சீரமைப்பு என்பது கட்டாயம். 'அர்த்த கிரந்தி' அமைப்பு பரிந்துரைத்துள்ள, வரி சீரமைப்பு மூலம், வரி வசூலுக்கு பெரும் தொகையை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து பண பரிவர்த்தனையையும் வங்கி மூலமே செய்வதால், வரி வசூல் எளிதாகும்; செலவும் குறையும். வரி ஏய்ப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்.நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பெருமளவு பயன்படுத்துவதன் மூலம், வளர்ச்சி அதிகரிக்கும்.
உதாரணமாக, '2ஜி' அலைக்கற்றை விற்பனை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவற்றில், பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். நதிகளை இணைப்பதன் மூலம், ஒன்பது கோடி ஏக்கர் தரிசு நிலங்களை, விளை நிலங்களாக மாற்றலாம். நதி நீர் வீணாவதை தடுத்து, 30 ஆயிரம் மெகாவாட் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய லாம். விவசாய விளை பொருட்கள் உற்பத்தியும் அதிகரிக்கும். மின் பற்றாக்குறையும் போக்கப்படும்.இது போன்ற நீண்ட கால திட்டங்களுக்கு முதலீடு செய்வதே, பா.ஜ.,வின் திட்டம். மக்கள் மீது வரிக்கு மேல் வரி சுமத்தி, அவர்களை காயப்படுத்துவதால், நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. எனவே, 'அர்த்த கிரந்தி' அமைப்பு முன் மொழிந்துள்ள வரி சீரமைப்பை அமல்படுத்துவது நாட்டிற்கு நல்லது. மக்களும் பயன் பெறுவர்.கே.டி.ராகவன்,தமிழக பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 90 சதவீதத்தினர், வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனையில் ஈடுபடுவதில்லை. மத்திய அரசு அமல்படுத்திய, 100 நாள் வேலை திட்டத்தில், ஒவ்வொரு தொழிலாளிக்கும், நேரடியாக கூலியை வழங்க, வங்கி கணக்கை துவக்கும்படி, அரசு அறிவுறுத்தியது.இதன் மூலம், மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்த கூலி, இடைத்தரகர்களின் சுரண்டல் இன்றி, முழுமையாக தொழிலாளிக்கு கிடைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.'கூலியை பணமாகத் தர வேண்டும்; வங்கியில் செலுத்த வேண்டாம்' என்றனர். இது போன்ற சூழ்நிலையில், வரிகளை நீக்கிவிட்டு, வங்கி பண பரிவர்த்தனை மூலம், வரி வசூல் முறையை அமல்படுத்துவது சாத்தியமில்லை. சுங்க வரி, சேவை வரி போன்றவற்றை, பொருட்களை பயன்படுத்துபவர்களிடம் இருந்தே, வசூலிக்க வேண்டும். அப்படி இல்லாமல் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். குறிப்பாக, பெட்ரோல், டீசலை உபயோகிப்பவர்களிடம் இருந்தே, அதற்காக விதிக்கப்படும் வரியை வசூல் செய்ய வேண்டும்.
அதே போல், அரசு அளிக்கும் மானியமும் உரியவர்களுக்கே சென்றடைந்தால், அரசின் மானிய சுமையும் குறையும். ௧௯௯௦ம் ஆண்டே, 'இந்த வரி சீரமைப்பு திட்டம் இந்தியாவுக்கு உகந்ததுஅல்ல' என, வல்லுனர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதனால், திட்டம் கைவிடப்பட்டது. வருமான வரி செலுத்த தகுதியுள்ளவர்களில், 60 சதவீதம் பேர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். இவர்களிடம் முறையாக வருமான வரியை வசூல் செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நிதி கிடைக்கும். இதை விட்டுவிட்டு வரி சீரமைப்பு என்ற பெயரில், நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மீதும் வரி விதிக்க முன் வந்தால், அது பொருத்தமற்ற செயலாகும்.பீட்டர் அல்போன்ஸ்,தமிழக காங்., நிர்வாக குழு உறுப்பினர்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagu Muthu - Tutico,இந்தியா
08-ஜன-201410:02:01 IST Report Abuse
Alagu Muthu 1. சாதாரண மக்கள் என்பதை வங்கிகள் முலம் பரிவர்த்தனை செய்யும் போது எளிதாக கண்ண்டறிந்து அவர்களுக்கு செலுத்திய வரியை திருப்பி அளிக்கலாம் . 2. கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்டவர்கள் நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை . 3 சுங்க வரி, சேவைவரி,பெட்ரோல் வரி ,டீசல் வரி , போன்றவை நீங்கியபிறகு அதற்குரிய இலக்கணம் தேவையில்லை 4. 60 சதவிகிதம் எய்ப்பு செய்கின்றனர் ஆனால் அவர்களை பிடிக்கவேண்டிய 90 சவிதிதம் பேர் அவர்களுக்கு துணை புரிகின்றனர். 5.வங்கி சேவையை எதிர்த்தவர்கள் இடைத்தரகர்களே மக்கள் அல்ல .
Rate this:
Share this comment
Cancel
Edayur .VAI.RAJENDRAN - CHENNAI,இந்தியா
08-ஜன-201408:40:34 IST Report Abuse
Edayur .VAI.RAJENDRAN நம் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து வரி வசூலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளது.இருப்பினும் சம்பளம் பெறுபவர்களிடம் மட்டுமே வருமான வரி வசுலிக்கப்படுகிறது.பெரும்பால பெரும் தொழில் நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் விலக்கு பெரும் நிலை உள்ளது. எந்த ஒரு திட்டமும் அனைவருக்கும் ஏற்ற வகையில் அமையாது.மோடி அவர்கள் மாற்றம் கொண்டு வந்தால் நல்லது.வரவேற்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X